தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Thai Vazhthu: ’ஈஸ்வரப்பா செய்தது தவறில்லை’ தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்கு அண்ணாமலை பதில்

Tamil Thai Vazhthu: ’ஈஸ்வரப்பா செய்தது தவறில்லை’ தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்கு அண்ணாமலை பதில்

Kathiravan V HT Tamil

Apr 28, 2023, 05:25 PM IST

google News
திமுகவில் இருந்த ஒருவர் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து ஒரு வரி கூட தமிழ்நாட்டில் போட முடியாது. ஈஸ்வரப்பா யாரையும் அவமதிக்கவில்லை. அரைகுறையாக இருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை போடுவது தமிழுக்கு இழுக்கு.- அண்ணாமலை

கர்நாடகாவின் ஷுமோகா மாநிலத்தில் தமிழர்கள் மத்தியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பாவால் பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அருகில் இருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் இருந்தது தமிழ்நாட்டில் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பு கர்நாடகாவின் மாநில பாடலை இசைக்க வேண்டும் என ஈஸ்வரப்பா விரும்புகிறார். அது அவர்களின் கூட்டம், அப்போது அங்கிருந்த ஆபரேட்டர் தமிழ்த்தாய் வாழ்த்து போடுகிறார். அந்த தமிழ்த்தாய் வாழ்த்து சரியாக இல்லை. ஆனாலும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தி கொண்டிருந்தேன். ஆனாலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பாக கர்நாடகாவின் மாநிலப்பாடலை போட வேண்டும் என்பது நியதி. அதைத்தான் ஈஸ்வரப்பா செய்தார். அவர் செய்தது எந்த தவறும் கிடையாது.

திமுகவில் இருந்த ஒருவர் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து ஒரு வரி கூட தமிழ்நாட்டில் போட முடியாது. ஈஸ்வரப்பா யாரையும் அவமதிக்கவில்லை. அரைகுறையாக இருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை போடுவது தமிழுக்கு இழுக்கு.

திமுகவின் தொண்டன் முதல் திமுக முதலமைச்சர் வரை ஒரே எதிரி அண்ணாமலைதான். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பு சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும் திமுகவை வீட்டுக்கு அனுப்பும் முடிவில் மக்கள் உள்ளார்கள். நம்முடைய பொது எதிரி திமுக, வரும் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும்

அடுத்த செய்தி