தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’Eps மூன்றாவது தலைமுறை தலைவர் அல்ல’ தம்பிதுரை புதிய விளக்கம்

’EPS மூன்றாவது தலைமுறை தலைவர் அல்ல’ தம்பிதுரை புதிய விளக்கம்

Kathiravan V HT Tamil

Apr 22, 2023, 11:57 AM IST

google News
"பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு திராவிட இயக்கத்தின் ஐந்தாவது தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவாகி உள்ளார்"
"பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு திராவிட இயக்கத்தின் ஐந்தாவது தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவாகி உள்ளார்"

"பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு திராவிட இயக்கத்தின் ஐந்தாவது தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவாகி உள்ளார்"

சென்னை கிரீன்வேஸ் சாலையில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொண்டர்களின் உணர்வு, கழக பொதுக்குழு, செயற்குழுவின் முடிவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளதால் சாதாரண கழக தொண்டனான எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு

புரட்சித் தலைவி அம்மா மறைவுக்கு பிறகு கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையும் ஒரு இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று நான் பல காலகட்டங்களில் பேசி உள்ளேன்.

குடும்ப அரசியல், ஊழலை ஒழிக்கவே எம்ஜிஆரால் அதிமுக உருவாக்கப்பட்டது. ஊழலை ஒழிக்கவே வாரிசு

எடப்பாடி பழனிசாமி அவர்கள் மூன்றாம் தலைமுறை என்று சொன்னார்கள் அவர் மூன்றாவது தலைமுறை இல்லை; ஐந்தாவது தலைமுறை. பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு திராவிட இயக்கத்தின் ஐந்தாவது தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவாகி உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அவர்களின் திறமை எங்கள் எல்லோருக்கும் தெரியும், கழகத்திற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் இரட்டை தலைமை வேண்டாம் என்றுதான் சொன்னோம். இரட்டை தலைமையால் குடும்ப அரசியல் உருவாகி பல்வேறு குழப்பங்களுக்கு காரணமானாது.

நான்கு ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்து கட்சி, ஆட்சியை பாதுகாத்த சாதாரண தொண்டரை அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்தார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி