தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Environment : மீன், கடல் வளம், பவளப்பாறை காக்க கடல்பாசிகளை அகற்ற நடவடிக்கை தேவை

Environment : மீன், கடல் வளம், பவளப்பாறை காக்க கடல்பாசிகளை அகற்ற நடவடிக்கை தேவை

Priyadarshini R HT Tamil

Apr 02, 2023, 06:24 PM IST

google News
Coral Reef : மேற்குத்தொடர்ச்சி மலைகளைக் காக்க ஊடுறுவும் மரங்களை நீக்க நடவடிக்கை எடுப்பதுபோல், மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள ஊடுறுவும் கடல்பாசியை நீக்கி, பவளப்பாறைகளை காத்து மீன்வளம், கடல் வளம், பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க நடவடிக்கைகள் எடுப்பது உடனடி தேவையாக உள்ளது.
Coral Reef : மேற்குத்தொடர்ச்சி மலைகளைக் காக்க ஊடுறுவும் மரங்களை நீக்க நடவடிக்கை எடுப்பதுபோல், மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள ஊடுறுவும் கடல்பாசியை நீக்கி, பவளப்பாறைகளை காத்து மீன்வளம், கடல் வளம், பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க நடவடிக்கைகள் எடுப்பது உடனடி தேவையாக உள்ளது.

Coral Reef : மேற்குத்தொடர்ச்சி மலைகளைக் காக்க ஊடுறுவும் மரங்களை நீக்க நடவடிக்கை எடுப்பதுபோல், மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள ஊடுறுவும் கடல்பாசியை நீக்கி, பவளப்பாறைகளை காத்து மீன்வளம், கடல் வளம், பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க நடவடிக்கைகள் எடுப்பது உடனடி தேவையாக உள்ளது.

ஊடுறுவும் மரங்களை வெட்ட அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 25,000 டன் நிலவிரை மரங்களில் இந்த மழைக்காலம் தொடங்கும் முன் 20,000 டன் மரங்களை நீக்க திட்டமிட்டிருப்பதாகவும், மீதியை அடுத்த ஆண்டு கோடைகாலத்திற்குள் நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஊடுறுவும் 2 மரங்களை நீக்கும் முயற்சி, உள்ளூர் மரங்களையும், புல்வெளிகளையும், அதை சார்ந்த உயிரினங்களைக் காத்து பல்லுயிர் பெருக்கத்திற்கு துணை புரியும். 

தமிழகத்தில் அதே போல் ஊடுறுவும் கடல்பாசியால் (1994-95ல் "காராஜினான்"எனும் வேதிப்பொருளை வணிகரீதியில் உற்பத்தி செய்ய மன்னார் வளைகுடா பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது)-காப்பாபைகஸ் அல்வாரெசி- மன்னார் வளைகுடா பகுதியில் பவளப்பாறைகள் 200 சதுர கிலோமீட்டர் வரை அழிக்கப்பட்டு, அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பவளப்பாறைகளைச் சார்ந்து உயிர் வாழும் மீன் இனங்களின் அளவும் குறைந்துள்ளது. 2012ம் ஆண்டு செய்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.  

வளர்க்கப்பட்ட இடத்திலிருந்து ஊடுறுவும் கடல்பாசி தற்போது 60 கிலோமீட்டர் வரை பரவி பெருமளவு பவளப்பாறைகளை அழித்து வருகிறது. 

இதைத் தடுக்க, உடனடியாக தக்க நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், (உயர்வெற்றிட உறிஞ்சும் குழாய்கள் மூலமும், கலெக்டர் அர்ச்சின்ஸ் எனும் உயிரியை வளர்த்து, அதற்கு உணவாக கடல்பாசியை (காப்பாபைகஸ் அல்வாரெஸி) உள்ளாக்குவதன் மூலமும் 85 சதவீதம் ஊடுறுவும் கடல்பாசியை நீக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பவளப்பாறைகள் பெருமளவு அழிந்து போகும்.

பவளப்பாறைகளின் பயன்கள்

கடல் அரிப்பு, சுனாமி, புயல் தாக்கத்தைக் குறைக்கும்.

25 சதவீதம் (9,000 உயிரினங்கள்) உயிரினங்களின் வாழ்வு பவளப்பாறைகளையே சார்ந்துள்ளது. மீன் வளம், கடல் வளம், பல்லுயிர் பெருக்கம் பாதுகாக்கப்படும்.

கார்பன் சேமிப்பு கிடங்காக, பவளப்பாறைகள் அமைந்து, புவிவெப்பமடைதலைக் குறைக்கும்.

ராமேஸ்வரம் (மன்னார் வளைகுடா) பகுதியில் மீன்வளம் குறைவதால், மீனவர்கள் - இலங்கை அரசு மோதல் போக்கு அதிகாரித்து வரும் சூழலில், பவளப்பாறைகளை ஊடுறுவும் கடல் பாசியிலிருந்து பாதுகாத்தால், மீன் வளம், கடல் வளம் பாதுகாக்கப்பட்டு (தமிழக அரசின் கடல்பசு பாதுகாப்புத் திட்டமும் இதனால் உறுதிபடுத்தப்படும்) மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.  

எனவே மன்னார் வளைகுடா பவளப்பாறைகளை ஊடுறுவும் கடல் பாசியிலிருந்து (காப்பாபைகஸ் அல்வாரெஸி) பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேற்குத்தொடர்ச்சி மலைகளைக் காக்க ஊடுறுவும் மரங்களை நீக்க நடவடிக்கை எடுப்பதுபோல், மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள ஊடுறுவும் கடல்பாசியை நீக்கி, பவளப்பாறைகளை காத்து மீன்வளம், கடல் வளம், பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க நடவடிக்கைகள் எடுப்பது உடனடி தேவையாக உள்ளது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலரும், மருத்துவருமான புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார். 

ஊடுறுவும் கடல்பாசியை பொறுத்தமட்டில், பவளப்பாறைகள் உள்ள இடங்களில் அதை நிச்சயம் வளர்க்கக்கூடாது. பாதிப்பு வராத இடத்தில் நிபுணர்களின் கண்காணிப்போடு வளர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் IUCN(International Union on Conservation of Nature)காப்பாபைகஸ் அல்வாரெசியை ஆபத்தான ஊடுறுவும் உயிரினம் என வரையறுத்துள்ளது.

 

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை