தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Exclusive: ’துரைமுருகனால் திமுகவுக்கு ஆபத்து!’ சஸ்பெண்ட் செய்யப்பட்ட குடியாத்தம் குமரன் பிரத்யேக பேட்டி

Exclusive: ’துரைமுருகனால் திமுகவுக்கு ஆபத்து!’ சஸ்பெண்ட் செய்யப்பட்ட குடியாத்தம் குமரன் பிரத்யேக பேட்டி

Kathiravan V HT Tamil

Nov 22, 2023, 09:30 AM IST

google News
”கட்சியில் நான் இருக்க வேண்டிய இடத்தில் கதிர் ஆனந்தும், கதிர் ஆனந்த் இருக்க வேண்டிய இடத்தில் நானும் உள்ளோம்”
”கட்சியில் நான் இருக்க வேண்டிய இடத்தில் கதிர் ஆனந்தும், கதிர் ஆனந்த் இருக்க வேண்டிய இடத்தில் நானும் உள்ளோம்”

”கட்சியில் நான் இருக்க வேண்டிய இடத்தில் கதிர் ஆனந்தும், கதிர் ஆனந்த் இருக்க வேண்டிய இடத்தில் நானும் உள்ளோம்”

திமுகவின் கொள்கை பரப்பு துணைச்செயலாளராக உள்ள குடியாத்தம் குமரன் கட்சியில் இருந்து சஸ்பெண் செய்யப்பட்ட நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனால் கட்சிக்கு ஆபத்து உள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த குடியாத்தம் குமரன் திமுகவுக்கு ஆதரவாக சமூகவலைத்தளங்களில் பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

அதிமுக நிர்வாகி விந்தியா குறித்து குடியாத்தம் குமரன் பேசிய சர்ச்சைக்குரிய வீடியோ குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்து இருந்தது. இதனிடையே இந்த புகாரில் அவருக்கு ஜாமீனும் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து குடியாதம் குமரன் பேசி வெளியிட்டு இருந்த வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்து பேசிருந்தார்.

இந்த நிலையில் அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக திமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வந்த செய்திக்குறிப்பில், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பில் குடியாத்தம் குமரனை தொடர்பு கொண்டு பேசிய போது, ”துரைமுருகன் எனக்கு எதிராக செயல்படுகிறார், துரைமுருகனால் திமுகவுக்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது. கட்சியில் நான் இருக்க வேண்டிய இடத்தில் கதிர் ஆனந்தும், கதிர் ஆனந்த் இருக்க வேண்டிய இடத்தில் நானும் உள்ளோம்.

தலைவர் குறித்தும் உதயநிதி குறித்தும் அவதூறான கருத்துகளை இருவரும் பேசி வருகின்றனர். துரைமுருகன் எனது வளர்ச்சி பிடிக்காமல் திட்டமிட்டு ஓரம் கட்டுகிறார். மணல் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்களை கதிர் ஆனந்த் செய்து வருகிறார்.

தலைவர் குறித்தும் அவரது குடும்பம் குறித்தும் துரைமுருகன் பேசிய கருத்துகள் குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து சொல்வேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் தாயாரை சந்திக்க கட்சி நிர்வாகிகள் யாரும் போகக்கூடாது என கதிர் ஆனந்த் தடுக்கிறார்.

என்னை திமுகவில் இருந்து நீக்கினாலும், திமுகவுக்காகத்தான் வேலை செய்வேன். முதலைமைச்சருக்கும், சின்னவர் அண்ணன் உதயதிக்கும் என்றைக்கும் விசுவாசமாக இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி