தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  School Holiday: கனமழை எதிரொலி! 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

School Holiday: கனமழை எதிரொலி! 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

Kathiravan V HT Tamil

Nov 23, 2023, 06:50 AM IST

google News
”தமிழ்நாட்டில் இன்று 34 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது”
”தமிழ்நாட்டில் இன்று 34 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது”

”தமிழ்நாட்டில் இன்று 34 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது”

தொடர் கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, புதுக்கோட்டை, நீலகிரி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.

இன்றைய மழை எச்சரிக்கை

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

வடகிழக்கு பருவமழை

ஆண்டுதோறும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலமாக வானிலை ஆய்வு மையம் வரையறுத்துள்ளது. இந்த காலகட்டத்தில் தென்னிந்திய பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, தெற்கு கர்நாடகா, தெற்கு ஆந்திரா, ராயலசீமா பகுதிகள் அதிக மழையை பெறும்.

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைகால் பகுதிகளில் கடந்த அக்டோபர் ஒன்று முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை பதிவான மழையின் அளவு 24 செ.மீ; சராசரி அளவு 27 செ.மீ என்பதால் இல்பை விட 13 சதவீதம் குறைவாக வடகிழக்கு பருவமழை பதிவாகி உள்ளது.

அடுத்த செய்தி