தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஜெகத்ரட்சகனுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது தெரியுமா? - அமைச்சர் காந்தி பேச்சால் சலசலப்பு

ஜெகத்ரட்சகனுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது தெரியுமா? - அமைச்சர் காந்தி பேச்சால் சலசலப்பு

Karthikeyan S HT Tamil

Sep 16, 2023, 09:51 PM IST

google News
DMK Minister Gandhi: திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று அவருக்கே தெரியாது என தமிழக அமைச்சர் காந்தி பேசியுள்ளார்.
DMK Minister Gandhi: திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று அவருக்கே தெரியாது என தமிழக அமைச்சர் காந்தி பேசியுள்ளார்.

DMK Minister Gandhi: திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று அவருக்கே தெரியாது என தமிழக அமைச்சர் காந்தி பேசியுள்ளார்.

தமிழகம் முழுவதும் 1.06 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். மற்ற இடங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமை கையேடுகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளான 2,170 மகளிர்க்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கிடும் வகையிலான வங்கி ஏ.டி.எம்.கார்டுகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமை கையேடுகள் வழங்கப்பட்டது. இதில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ.க்கள் நாசர், வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, எஸ்.சந்திரன், கோவிந்தராஜன், கணபதி, துரை சந்திரசேகர் மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் காந்தி, திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு ஐந்து மருத்துவ கல்லூரிகள் இருப்பதாகவும் அதுமட்டுமின்றி எவ்வளவு சொத்துக்கள் எங்கே இருக்கிறது என்று அவருக்கே தெரியாது என்றும் கூறினார். அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் எம்.பி., ஜெகத்ரட்சகனின் சொத்துக்கள் பற்றி பொது வெளியில் சொந்த கட்சியின் அமைச்சர் காந்தி பேசியது லேசான சலசலப்பை ஏற்படுத்தியது. 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் மீண்டும் தூசிதட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் சூழலில் அமைச்சர் காந்தி இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி