தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு: தென்காசி மா.செ. தீக்குளிப்பதாக அறிவிப்பு

ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு: தென்காசி மா.செ. தீக்குளிப்பதாக அறிவிப்பு

I Jayachandran HT Tamil

Sep 27, 2022, 11:31 PM IST

google News
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால் தீக்குளிக்கப் போவதாக தெனகாசி மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால் தீக்குளிக்கப் போவதாக தெனகாசி மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால் தீக்குளிக்கப் போவதாக தெனகாசி மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர்,வாசுதேவநல்லூர் சட்டமன்றதொகுதிகளை உள்ளடக்கியதென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் செல்லத்துரை. தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்.

தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரான சாத்தூர் ராமச்சந்திரன்,ராஜபாளையத்தை சேர்ந்த தனுஷ்குமார் எம்.பி.,யை மாவட்ட செயலாளர் ஆக்க முயற்சித்தார். இதற்குதென்காசி மாவட்ட கட்சியினர் எதிர்ப்புதெரிவித்தனர். சென்னையில் தி.மு.க., கட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ்குமார்தென்காசி மாவட்ட செயலாளர்ஆக போட்டியிட மனுவே செய்யாத நிலையில் அவருக்கு பொறுப்புதருவதற்கு எதிர்ப்பு வலுக்கிறது.

இரு தரப்பினரும் சென்னையில் காத்திருக்கின்றனர். இதனிடையே தென்காசி முதன்மை கோர்ட்டில்தி.மு.க,வை சேர்ந்த விஜயஅமுதாஎன்பவர் சார்பில் ஒரு சிவில் வழக்குதொடரப்பட்டது. தென்காசி வடக்குமாவட்ட செயலாளர் தேர்தலைசென்னையில் நடத்துவதற்கு பதிலாக தென்காசியில் வைத்து நடத்தவேண்டும் என்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்எடுத்துக் கொள்ளப்பட்டு அக்டோபர் 28ஆம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது.

தற்போதைய மாவட்ட செயலாளர் மாவட்டத் தேர்தலை சென்னையில் நடத்துவதற்கு பதிலாகத் தென்காசியில் வைத்து நடத்தவேண்டும் என்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அக்டோபர் 28ல் விசாரணைக்கு வருகிறது.

இதுபற்றி தற்போதைய மாவட்டசெயலாளர்செல்லத்துரையிடம் கேட்டபோது நிறைய பேர் போனில் கேட்கிறார்கள். நான் வழக்கு தொடரவில்லை.

நான் சென்னையில் உள்ளேன். இதைக் கேள்விப்பட்டதும் என் உயிரே அத்து போச்சு. எனக்கு எதிராக செயல்படுபவர்கள் இதனை செய்துள்ளனர். நாளை வழக்கை வாபஸ் பெறுவார்கள்.இல்லையென்றால் தீக்குளிப்பேன்.கட்சி தலைமை என் மீது நல்லஎண்ணம் கொண்டுள்ளது. அதனைகெடுக்க சிலர் முயற்சிக்கின்றனர் என்றார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை