தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Suicide: திமுக முன்னாள் செயலாளர் பையா கிருஷ்ணன் தற்கொலை!

Suicide: திமுக முன்னாள் செயலாளர் பையா கிருஷ்ணன் தற்கொலை!

Jan 25, 2024, 01:41 PM IST

google News
கோவை மேற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பையா கிருஷ்ணன் குடும்ப பிரச்சினை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பையா (எ)கிருஷ்ணன். (பையா கவுண்டர்). திமுகவின் கோவை மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளராக இவர் இருந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட நிலையில் , திமுக கட்சி நடவடிக்கைகளில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார். 

இந்நிலையில் காளப்பட்டி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு தூக்கிட்டு  தற்கொலைக்கு முயன்றார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 65. இந்நிலையில் அவரது தற்கொலை குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் காளப்பட்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர். மேலும் கடந்த 2016 - 2021 சட்டமன்றத் தேர்தலின் போது கவுண்டம்பாளையம் சட்ட மன்ற தொகுதியில்  போட்டியிட்டார். ஆனோல் தோல்வியை தழுவினார்.   பின்னர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.  இதனால் கடந்த ஓராண்டாக எந்த கட்சி நிகழ்ச்சிகளிலும் பையா என்ற கிருஷ்ணன் இல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தான் அவர் தனது தனிப்பட்ட விஷயங்களுக்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை தீர்வல்ல:

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி