Palani: வீடுகளை அகற்ற வந்த அலுவலர்கள் - கோட்டாட்சியர் காலில் விழுந்த கவுன்சிலர்
May 23, 2023, 03:29 PM IST
பழனி அடிவாரத்தில் உள்ள வீடுகளை அகற்ற ஆய்வுக்கு வந்த கோட்டாட்சியரின் காலில் திமுக கவுன்சிலர் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயில் அடிவாரப் பகுதியில் அண்ணா செட்டி மடத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
இந்த குடும்பங்கள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மலை அடிவாரப் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த மலைக் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காகவும், கோயில் விரிவாக்க பணிகளில் செய்வதற்காகவும் ஆய்வு செய்வதற்காகக் கோட்டாட்சியர் சிவகுமார் மற்றும் வட்டாட்சியர் அங்கு வந்திருந்தனர்.
அப்போது அவர்களுடன் வந்த கோயில் அலுவலர்களை வரக்கூடாது என அப்பகுதி மக்கள் தடுத்துள்ளனர். மேலும் நாங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வருகிறோம் எங்களுக்குப் பட்டா மட்டும் வேண்டும். எங்களுக்கு மாற்று இடம் தேவையில்லை என மக்கள் கோயில் அலுவலர்களுடன் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அங்கு வந்து திமுக கவுன்சிலர் தீனதயாளன் திடீரென கோட்டாட்சியர் காலில் விழுந்து உள்ளார். காலில் விழுந்த அவர் இந்த பகுதியை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற வேண்டாம். 150 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மக்கள் இங்கு வசித்து வருகின்றனர்.
இவர்களுக்குப் பட்டா வழங்கி தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தரத் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வையுங்கள். கோயில் தேவஸ்தானத்திற்கு நிலங்களை தரமுடியாது. தயவு செய்து எங்களுக்கு பட்டா வாங்கிக் கொடுங்கள்." எனத் தெரிவித்தார்.
அடிப்படை வசதிகள் வேண்டி திடீரென திமுக கவுன்சிலர் கோட்டாட்சியர் காலில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்