தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rj Vigneshkanth: ஜிஎஸ்டி வரிஏய்ப்பு! பிளாக் ஷீப் விக்னேஷ்காந்துக்கு சம்மன்

RJ Vigneshkanth: ஜிஎஸ்டி வரிஏய்ப்பு! பிளாக் ஷீப் விக்னேஷ்காந்துக்கு சம்மன்

Feb 14, 2023, 03:29 PM IST

google News
பிளாக் ஷீப் தொலைக்காட்சியின் நிறுவன இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் காந்த் மீது ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜிஎஸ்டி சேவையில் முறைகேடு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு அவருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் பிளாக் ஷீப் தொலைக்காட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. ஏற்கனவே யூடியூப் சேனலாக இருந்து வந்த இந்த நிறுவனம் கடந்த மாதம் முதல் சாட்டிலைட் சேனலாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் இயக்குநராக விக்னேஷ் சிவன் உள்ளார். ஆர்ஜேவாக இருந்த இவர் ஒரு சில படங்களில் காமெடி வேடங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து விக்னேஷ் காந்த், கதிர் நெட்வொர்க் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் சண்முகசுந்தரம் கார்த்திகேயன் என்பவரும் பங்குதாரராக உள்ளார்.

இவர் பிளாக் ஷீப் டிவி சேனலுக்கு தேவையான கேமரா, லைட்டுகள் உள்பட பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கியது, பல்வேறு விதமான சேவைகள் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகத்துக்கு புகார் வந்துள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த 10ஆம் தேதி பிளாக் ஷீப் அலுவலகம், கதிர் நெட்வொர்க் அலுவலகங்களில் ஜிஎஸ்டி புலனாய்வு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில் வரி ஏய்ப்பு செய்திருப்பது உறுதியானது.

வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களை அலுவலர்கள் பறிமுதல் செய்திருக்கும் நிலையில், வரி ஏய்ப்பு தொகை குறித்த தகவல்களை தெரிவிக்கவில்லை.

இதையடுத்து வரி ஏய்ப்பு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு விக்னேஷ் காந்துக்கு ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தற்போது சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி