Dengue Death : டெங்குவுக்கு சிறுவன் பலி – சென்னையில் பரிதாபம்
Sep 10, 2023, 12:34 PM IST
Dengue Death : மழை அவ்வப்போது பெய்து வருவதால், ஆங்காங்கே பல்வேறு காய்ச்சல்களால் குழந்தைகளும், பெரியவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை சிறுவன் டெங்குவுக்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.
மழை அவ்வப்போது பெய்து வருவதால், ஆங்காங்கே பல்வேறு காய்ச்சல்களால் குழந்தைகளும், பெரியவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை சிறுவன் டெங்குவுக்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.
சென்னை அடுத்த மதுரவாயலைச் சேர்ந்த 4 வயது சிறுவன் ரக்ஷன். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த 6ம் தேதி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இவர் டெங்கு பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி சிறுவன் ரக்ஷன் உயிரிழந்தார்.
ஆண்டுதோறும் மழைக்காலங்களில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதில் மனித உயிர்கள் பலியாகும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இதற்கு அரசும், பொதுமக்களும் ஒருங்கிணைந்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்