தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Spurious Liquor: கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு - பரிதவிக்கும் உறவினர்கள்!

Spurious Liquor: கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு - பரிதவிக்கும் உறவினர்கள்!

Karthikeyan S HT Tamil

May 15, 2023, 10:13 AM IST

google News
Spurious Liquor Death: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் மேலும் 2 பேர் பலியானதை அடுத்து பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
Spurious Liquor Death: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் மேலும் 2 பேர் பலியானதை அடுத்து பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

Spurious Liquor Death: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் மேலும் 2 பேர் பலியானதை அடுத்து பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

கள்ளச்சாராயம், எரிசாராயம் ஆகியவை தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலியாகியுள்ள சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில் நேற்று முன்தினம் 50-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதில் 16 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. கள்ளச்சாராயம் அருந்திய 6 பேர் மயக்கமடைந்த நிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஊர் முழுவதும் சாராயம் அருந்தியவர்கள் ஆங்காங்கே மயங்கி சுருண்டு விழுந்துள்ளனர். இதையடுத்து அவர்களும் ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர் மற்றும் தரணிவேல் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். மேலும், முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜமூர்த்தி (55), மலர்விழி (60) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. 

இதைத்தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மண்ணாங்கட்டி, விஜயன், சங்கர், சரத்குமார் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் எக்கியார் கிராம மக்கள் கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறையைக் கண்டித்து கிழக்குக் கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவிஆய்வாளர் தீபன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மரியா சோபி மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் கைது செய்யப்பட்டுள்ளார். இதில், மொத்த சாராய வியாபாரியான முத்து என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.  இந்த வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்ய காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கள்ளச்சாராயம், எரிசாராயம் ஆகியவை தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி அடுத்தடுத்து 8 பேர் பலியாகியுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி