தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cyclone: அரபிக்கடலில் 6 மணி நேரத்தில் உருவாகிறது 'புயல்'.. தமிழகத்துக்கு ஆபத்தா?

Cyclone: அரபிக்கடலில் 6 மணி நேரத்தில் உருவாகிறது 'புயல்'.. தமிழகத்துக்கு ஆபத்தா?

Karthikeyan S HT Tamil

Jun 06, 2023, 06:36 PM IST

google News
தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 6 மணிநேரத்தில் புதிதாக புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 6 மணிநேரத்தில் புதிதாக புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 6 மணிநேரத்தில் புதிதாக புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நேற்று காலை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று ஜூன் (06) காற்றழுத்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் தற்பொழுது மேற்கு தென்மேற்கு கோவாவிற்கு 920 கிலோ மீட்டர் தொலைவிலும் தெற்கு தென்மேற்கு மும்பைக்கு 1120 கிலோ மீட்டர் தொலைவிலும் மற்றும் போர்பன் தெற்கு போர்பந்தர்க்கு 1160 கிலோ மீட்டர் தொலைவிலும் மற்றும் கராச்சி பகுதிக்கு 1520 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க

இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் அடுத்து 6 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் புயலாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவின் உள்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரபிக் கடலின் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி