தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cauvery Water Dispute: காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு!

Cauvery water dispute: காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு!

Karthikeyan S HT Tamil

Oct 13, 2023, 05:09 PM IST

google News
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விட கர்நாடகவுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விட கர்நாடகவுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விட கர்நாடகவுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீரைத் திறக்க கர்நாடக மாநில அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு முறையாக காவிரி நீரைத் திறந்து விட கர்நாடக மாநில அரசு மறுத்து வருகிறது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைகளை வழங்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில், தமிழகத்துக்கு அக்டோபர் 16 முதல் அக்டோபர் 30 வரை நாள்தோறும் 3,000 கனஅடி காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று பரிந்துரை செய்தது. அதன்படி, டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைத்தின் 26-வது கூட்டம் இன்று (அக்.13) பிற்பகலில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீரைத் திறக்க கர்நாடக மாநில அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 30 ஆம் தேதி வரை தினமும் விநாடிக்கு 3,000 கனஅடி காவிரி நீரைத் திறக்க வேணஅடும் என கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்துக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது திட்டம் குறித்தும் கர்நாடக அரசு வலியுறுத்தி இருக்கிறது. மேகதாது திட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை