Senthil Balaji: செந்தில் பாலாஜி வழக்கு; 3ஆவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம்
Jul 05, 2023, 11:55 AM IST
இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ள நிலையில் தற்போது 3ஆவது நீதிபதியை நியமித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ள நிலையில் தற்போது 3ஆவது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயனை நியமித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவின் மீதான வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுப்பது குறித்து நேற்று இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் என அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் நீதிபதிகள் நிஷாபானு மற்றும் பரதசக்ரவர்த்தி அமர்வு நேற்று தீர்ப்பை வழங்கி உள்ளது. இதில் நீதிபதி நிஷா பானு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என கூறி செந்தில் பாலாஜியை விடுவிப்பதாக அறிவித்துள்ளார்.
ஆனால் நீதிபதி பரத சக்கரவர்த்தி இது தள்ளுபடி செய்யத்தக்க மனு என்று அறிவித்துள்ளார். மேலும் செந்தில் பாலாஜி ஒரு நிமிடம் கூட கஷ்டடியில் இல்லை சிகிச்சை நாட்களை நீதிமன்ற காவலாக கருத முடியாது என்று அறிவித்துள்ளார்.
இதனால் அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி தரப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ற கேள்வி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்நிலையில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ள நிலையில் தலைமை நீதிபதி அறிவிக்கும் 3 ஆவது நீதிபதி விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் தற்போது நீதிபதி சி.வி. கார்த்தியேனை 3 ஆவது நீதிபதியாக நியமித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த வழக்கு ஓரிரு நாளில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சி.வி கார்த்திகேயன் கடந்த 18 ஆண்டுகள் நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்