தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai Floods: ’உ.பி ஆக மாறுகிறதா தமிழ்நாடு?’ குழந்தையின் உடலை அட்டை பெட்டியில் போட்டு கொடுத்த அவலம்!

Chennai Floods: ’உ.பி ஆக மாறுகிறதா தமிழ்நாடு?’ குழந்தையின் உடலை அட்டை பெட்டியில் போட்டு கொடுத்த அவலம்!

HT Tamil Desk HT Tamil

Dec 11, 2023, 09:35 AM IST

google News
”Chennai Floods: கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் குழந்தையின் உடலை வாங்க 2500 ரூபாய் பணம் கேட்பதாக குழந்தையின் தந்தை வேதனை”
”Chennai Floods: கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் குழந்தையின் உடலை வாங்க 2500 ரூபாய் பணம் கேட்பதாக குழந்தையின் தந்தை வேதனை”

”Chennai Floods: கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் குழந்தையின் உடலை வாங்க 2500 ரூபாய் பணம் கேட்பதாக குழந்தையின் தந்தை வேதனை”

வடசென்னை கன்னிகாபுரம், 2ஆவது தெருவில் வசித்து வரும் மசூத்-சௌமியா தம்பதிக்கு கடந்த டிசம்பர் 5ஆம் தேதி குறைபிரசவம் ஆன நிலையில், வெள்ளம் காரணமாக போதய மருத்துவ உதவி கிடைக்காததால் குழந்தை இறந்தது. இந்த சம்பவம் நடந்து 5 நாட்களுக்கு பிறகு நேற்றைய தினம் (டிச.10) இறந்த குழந்தை அடக்கம் செய்யப்பட்டது.

அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் அடைத்து பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்துள்ளது இணைய தளத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக நியூஸ் மினிட் ஆங்கில ஊடகத்திடம் இழந்த குழந்தையின் தந்தை மசூத் பேசுகையில், பக்கத்து வீட்டுக்காரர்களை உதவிக்கு அழைத்தேன். வலி அதிகமான நிலையில் ஆம்புலன்ஸை தேடினேன். குட்டியானை வாகனத்தை அழைத்த நிலையில் அது வரமுடியாத நிலை இருந்தது. கழுத்து வரை தண்ணீர் இருந்ததால், தாயை கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது.

அக்கம்பக்கத்தினர் உதவி செய்தனர். ஆனால் அப்படியே குழந்தை பிறந்துவிட்டது. ஆனால் குழந்தை அழுகவில்லை. அப்போதுதான் குழந்தை இறந்துவிட்டதாக சொன்னார்கள். பின்னர் மீன்பாடி வண்டி உதவியுடன் குழந்தையை முத்து மருத்துவமனைக்கு எடுத்து சென்றோம். ஆனால் அவர்கள் சிகிச்சை அளிக்க முடியாது என்று சொன்னார்கள்.

108ஆம்புலஸை அழைக்க முயன்றபோது ஒரு பெண் கணெக்ட் செய்வதாக சொன்னார். ஆனால் அதற்கு பின்னர் ஆம்புலன்ஸை தொடர்பு கொள்ள முடியவில்லை.

குழந்தை இறந்துவிட்டதால் தாயை காப்பாற்ற ஜி3 அரசு மருத்துவமனைக்கு சென்றோம். ஆனால் கதவுகள் மூடப்பட்டு இருந்தது. மருத்துவமனையை திறக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

முத்து மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். தொப்புள் கொடி அறுக்க முடியாது என்பதால் சிகிச்சை அளிக்க முடியாது என்றார்கள். பின்னர் பெண் போலீஸ் உதவி உடன் சிகிச்சை நடந்தது. 2500 ரூபாய் வரை பணம் கொடுத்தோம்.

பின்னர் எனது மனைவி, குழந்தையை டாடா ஏசியில் வைத்து வேறு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அன்று இரவு 8 மணிக்கு குழந்தையை பிணவறைக்கு எடுத்து சென்றார்கள்.

சரியான நேரத்தில் உதவி கிடைத்திருந்தால் என்னால் எனது குழந்தையை காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் யார் மேலும் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் எனக்கு யாரும் ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. ஊர் ஜனம்தான் உதவி செய்தார்கள். இப்போது எனது மனைவி சௌமியா நன்றாக உள்ளார். கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் குழந்தையின் உடலை வாங்க 2500 ரூபாய் பணம் கேட்கிறார்கள் என கூறினார்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு கண்டனக் குரல்கள் எழத் தொடங்கி உள்ளது. நாம் தமிழர் கட்சி நிர்வாகியான இடும்பாவனம் கார்த்தில் பதிவிட்டுள்ள எக்ஸ் சமூகவலைத்தள பதிவில்,

”அரசின் மோசமான நிர்வாகத்தினால் பச்சிளம் குழந்தை இறந்துபோயிருக்கிறது. இறந்த அக்குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்துக் கொடுக்கிறார்கள். சொல்லொணாத் துயரம்!

இந்தக் கொடுமையெல்லாம் உத்திரப்பிரதேசத்துலயும், மணிப்பூர்லயும் நடந்தாதான் உங்களுக்குக் கோபம் வருமாடா? அப்டி என்ன திமுகவ அண்டிப் பொழைச்சு வாழ்ந்துறப் போறீங்க? இதுவெல்லாம் ஒரு பொழைப்பா?” என பதிவிட்டுள்ளார். 

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை