தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tenkasi: தென்காசி தொகுதியில் 368 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசின்பழனிநாடார் வெற்றி!

Tenkasi: தென்காசி தொகுதியில் 368 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசின்பழனிநாடார் வெற்றி!

Kathiravan V HT Tamil

Jul 13, 2023, 08:31 PM IST

“கடந்த முறை பெற்றதை விட 2 வாக்குகளை குறைவாக பெற்று 368 வாக்குகள் வித்தியாசத்தில் பழனிநாடார் வெற்றி பெற்றுள்ளார்.”
“கடந்த முறை பெற்றதை விட 2 வாக்குகளை குறைவாக பெற்று 368 வாக்குகள் வித்தியாசத்தில் பழனிநாடார் வெற்றி பெற்றுள்ளார்.”

“கடந்த முறை பெற்றதை விட 2 வாக்குகளை குறைவாக பெற்று 368 வாக்குகள் வித்தியாசத்தில் பழனிநாடார் வெற்றி பெற்றுள்ளார்.”

தென்காசி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Makkaludan Mudhalvar Scheme: ‘மீண்டும் வருகிறது மக்களுடன் முதல்வர் திட்டம்! ஜூலை 15 முதல் ஆரம்பம்!

School Reopening: ’வண்ண கயிறுகளுக்கு தடை முதல் வாட்ஸ் அப் வரை!’ பள்ளி திறப்புக்கு பின் அதிரடியில் இறங்கும் கல்வித்துறை!

Modi vs MK Stalin: ’ஒடிசா மக்களை தமிழ்நாட்டுக்கு எதிராக தூண்டிவிடுவதா!’ பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

Weather Update: ’நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!’ 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை!

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் பழனி நாடார் என்பவரும், அதிமுக சார்பில் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் என்பவரும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் விட 370 வாக்குகள் அதிகம் பெற்று பழனிநாடார் வென்ற நிலையில் அவரது வெற்றியை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில் இருவருக்கும் இடையேயான ஓட்டு வித்தியாசம் மிகக்குறைவாக உள்ளதாகவும், தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்து இருந்தார். வழக்கில் வாதங்களை கேட்ட நீதிபதி, தபால் வாக்குகளை மட்டும் மீண்டும் எண்ணி 10 நாட்களுக்குள் முடிவுகளை அறிவிக்க கடந்த ஜூலை 5ஆம் தேதி அன்று தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

அதன்படி இன்றைய தினம் தென்காசி ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் ஆர்டிஓ லாவண்யா ஆகியோரின் முன்னிலையில் தபால் ஓட்டுகள் மீண்டும் எண்ணும் பணிகள் தொடங்கியது. தேர்தலில் போட்டியிட்ட 18 வேட்பாளர்களில் ஒருவருக்கு ஒரு முகவர் வீதம் 18 பேர் முகவர்களாக வாக்கு எண்ணிக்கையின் போது பங்கேற்றனர்.

தபால் வாக்குகளை பொறுத்தவரை தபால் வாக்கு மேலே சீல் இடப்பட்டுள்ள கவரில் அதிகாரப்பூர்வமில்லாதவரின் கையெழுத்து இருக்கும் தபால் ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாக கருத்தில் கொள்ளப்படும். இந்த முறைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ பழனிநாடார் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுகவினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை இரண்டு முறை நிறுத்தி வைக்கப்பட்டு பின்ன எண்ணப்பட்டது.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார் 1,606 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் 673 வாக்குகளும் பெற்ற நிலையில் கடந்த முறை பெற்றதை விட 2 வாக்குகளை குறைவாக பெற்று 368 வாக்குகள் வித்தியாசத்தில் பழனிநாடார் வெற்றி பெற்றுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது தென்காசி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பழனிநாடார், அதிமுக சார்பில் செல்வமோகன் தாஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் இரா.வின்செண்ட் ராஜூ, அமமுக சார்பில் எஸ்.முகமது (எ) ராஜா உள்ளிட்ட 18 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார் 89 ஆயிரத்து 315 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் 88 ஆயிரத்து 945 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.வின்செண்ட் ராஜு 15 ஆயிரத்து 336 வாக்குகளும், அமமுகவின் எஸ்.முகமது 9 ஆயிரத்து 944 வாக்குகளும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி