தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Community Baby Shower: விளாத்திகுளம் மற்றும் புதூரில் சமுதாய வளைகாப்பு விழா!

Community baby shower: விளாத்திகுளம் மற்றும் புதூரில் சமுதாய வளைகாப்பு விழா!

Karthikeyan S HT Tamil

Sep 29, 2022, 10:45 AM IST

google News
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் புதூரில் கா்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் புதூரில் கா்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் புதூரில் கா்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி: விளாத்திகுளம் மற்றும் புதூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் 350 கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வட்டார அளவில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில், அந்தந்த வட்டாரத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு சாதி, மத பேதமின்றி வளைகாப்பு விழா நடத்தப்பட்டு சீர்களுடன் 5 வகை உணவு பரிமாறப்பட்டு வருகிறது.

அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் புதூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று (செப்.28) நடைபெற்றது. இதில், விளாத்திகுளம் 200, புதூர் பகுதியைச் சேர்ந்த 150 கர்ப்பிணிகள் கலந்துகொண்டனா். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட 350 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையினை விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினாா்.

<p>சீர்வரிசையினை வழங்கிய விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன்.</p>

 

சமுதாய வளைகாப்பு நிகழ்வுகளில் கலந்துகொண்ட கர்ப்பிணிகளுக்கு கழுத்தில் மாலை அணிவிக்கப்பட்டு, கைகளில் வளைகாப்பு வளையல்கள் அணிவிக்கப்பட்டு ஐந்து வகையான உணவுகளும் பரிமாறப்பட்டன. மேலும், 350 கர்ப்பிணிகளுக்கும் சீர்வரிசையாக தட்டு, புடவை, வளையல், தேங்காய், பூ, மஞ்சள் மற்றும் குங்குமம் வழங்கப்பட்டது. இதற்கிடையே மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் தாலாட்டு பாடல் பாடி கர்ப்பிணி பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

<p>மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் வாழ்த்து பாடல் பாடி அசத்தல்.</p>

விளாத்திகுளத்தில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தாஜுன்னிசா பேகம், மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி, மருத்துவர் பிரபா, வட்டார வளர்ச்சி அலுவர்கள் முத்துக்குமார், தங்கவேல், பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, விளாத்திகுளம் திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு, சின்ன மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனா்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை