Free Training Class: ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு: இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்
Apr 25, 2023, 01:00 PM IST
Free Training At Employment Office : மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வுக்கான, கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் சேர தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது -
மத்திய தேர்வாணையம் பணியாளர்கள் ஒருங்கிணைந்த நிலையிலான பட்டதாரி தேர்வுக்கான அறிவிப்பை ஏப்.3ம் தேதி வெளியிட்டது.
இதில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள், அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டபூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் 'பி' மற்றும் குரூப் 'சி' நிலையில், 7,500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.
இத்தேர்வுக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www ssc.nic.in எனும்பணியாளர்தேர்வாணையத்தின்இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மே 3ம் தேதிக்குள்ளும்,தேர்வுக்கட்டணத்தை மே 4ம் செலுத்தலாம்.
இதுகுறித்து கூடுதல் விவரங்களை https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/noticeCGL எனும் இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
தேர்வுகளுக்கான கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் அனைத்து தன்னார்வப் பயிலும் வட்டங்களில் நடத்தப்படவுள்ளன.
இந்த தேர்வுக்கான பாடத் திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் https://tamilnaducareerservices.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ' டி.என்.கேரியர் சர்வீஸ் எம்ப்ளாய்மென்ட் மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் 'எய்ம் டிஎன்' என்ற 'யூடியூப்' வலைதளத்திலும் பாடத்திட்டங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்புகொண்டு இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்வுகளில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அந்தந்த மாவட்டம் வேலைவாய்ப்பு மையங்களை தொடர்புகொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்