தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime: கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து..சீரழித்த இளைஞர்..தந்தை மகன் கைது!

Crime: கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து..சீரழித்த இளைஞர்..தந்தை மகன் கைது!

Jul 11, 2023, 06:40 PM IST

google News
கல்லூரி மாணவிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கல்லூரி மாணவிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தை, மகன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே நர்சிங் கல்லூரியில் படித்து வரும் மாணவிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு அந்த வாலிபரின் தந்தை உடந்தையாக இருந்துள்ளார். இருவரையும் குளச்சல் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான பால்ராஜ். 20 வயதில் இவருக்கு சிவகுமார் என்ற மகன் உள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி பைபர் படகு பழுது பார்க்கும் பட்டறையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி நாகர்கோவிலில் உள்ள தனியார் நர்சிங் பள்ளியில் படித்து வரும் தனது உறவுக்கார பெண்ணை, அக்காவின் மகளுக்குப் பிறந்தநாள் எனக் கூறி மணவாளக்குறிச்சிக்கு அழைத்து வந்துள்ளார்.

அங்கு வந்த அந்த இளம் பெண்ணுக்குக் குளிர் காலத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார் சிவக்குமார். பின்னர் அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மயக்கம் தெளிந்த பிறகு அந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.

பல நாட்கள் கடந்தும் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். பின்னர் இது குறித்துப் பாதிக்கப்பட்ட பின் நடந்தவற்றை அனைத்தையும் கூறி, தன்னை ஏமாற்றிய சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மாணவியை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் மாணவி கொடுத்த புகாரின் பேரில், சிவக்குமார் மீது பாலியல் வன்கொடுமை, திருமணம் செய்வதாகக் கூறி நம்பிக்கை மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளுக்கு வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சிவக்குமாரின் தந்தை பால்ராஜ் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி