Coimbatore: கோவை மேயர் கல்பனா நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா ஏற்பு.. அடுத்த மேயர் யார்
Jul 08, 2024, 11:49 AM IST
Coimbatore: கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்ட்ட கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனின் ராஜினாமா கடிதமும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
Coimbatore: கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்ட்ட கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனின் ராஜினாமா கடிதமும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் மொத்தம் நூறு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 97 பேர் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர். மேலும் மூன்று பேர் அதிமுக கவுன்சிலர்கள். கோவை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் இருந்து வந்தார். இவர் மாநகராட்சி தேர்தலில் கோவையில் 19ஆவது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது கணவர் ஆனந்தகுமார் திமுகவில் பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் மேயர் கல்பனா பொறுப்பேற்றது முதல் அவர் மீது பல புகார்கள் எழுந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்த குமாரின் தலையீடு மிக முக்கிய காரணம் என்று திமுக வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது.
இதனால் திமுக கவுன்சிலர்கள் மட்டத்திலும் நிர்வாகிகள் மத்தியிலும் பெரிதாக நம்பிக்கை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் திமுக கட்சி கவுன்சிலர்களுக்கும் இவருக்கும் இடையில் உட்கட்சி பூசல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேயர் ராஜினாமா ஏற்பு
இந்நிலையில் கடந்த 3ம் தேதி கல்பனா ஆனந்த குமார் தனது ராஜினாமா கடிதத்தை கோவை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார். இதைத்தொடர்ந்து இன்றையதினம் சிறப்பு மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மேயர் கல்பனா ராஜினாமா குறித்து மன்ற உறுபபினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேயரின் ராஜினாமாவை ஏற்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக திமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம்
அப்போது மாநகராட்சியில் இருந்த அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் என்ன காரணத்திற்காக மேயர் ராஜினாமா செய்தார் என்பது குறித்து கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து திமுக கவுன்சிலர்களுக்கும் அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இதற்கு முன்பாக அதிமுக மேயராக இருந்த செம வேலுச்சாமி ராஜினாமா செய்த போது விவாதம் நடத்தப்பட்டதா என்று கேள்வி எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொர்ந்து மேயர் கல்பனாவின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டு 9 நிமிடத்தில் கூட்டம் முடிவுக்கு வந்தது.
நெல்லை மாநகராட்சி மேயர் ராஜினாமா
நெல்லை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் இருந்தார். அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து அவருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் பலமுறை மாநகராட்சி கூட்டங்களை கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
முன்னதாக ஆளும் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களே மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கடிதத்தை கமிஷனரிடம் கவுன்சிலர்கள் வழங்கினர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. மூத்த அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் மாநகராட்சிக்கு நேரில் சென்று அனைவரையும் சமாதானப்படுத்தினர். ஆனால் தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர்கள் இடையே மோதல் போக்கு நிலவிய நிலையில் மேயர் சரவணன் கடந்த வாரம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இந்நிலையில் நெல்லையில் இன்று மாநகராட்சி கூட்டம் நடந்தது. அதில் மேயர் சரவணின் ராஜினாமா குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை நெல்லையில் அடுத்த மேயர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு திமுக வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்