தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rain Relief Fund: ’மழை நிவாரணம்! ரேஷன் கார்டுக்கு 4 ஆயிரமா? 5 ஆயிரமா?’ அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

Rain Relief Fund: ’மழை நிவாரணம்! ரேஷன் கார்டுக்கு 4 ஆயிரமா? 5 ஆயிரமா?’ அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

Kathiravan V HT Tamil

Dec 09, 2023, 12:37 PM IST

google News
“வெள்ள பாதிப்பு இல்லாத வட்டங்களை தவிர்த்து மழை வெள்ளம் அதிகம் பாதித்து இருக்க கூடிய வட்டங்களில் மழைக்கால நிவாரண நிதி வழங்க ஆலோசனை எனத் தகவல்”
“வெள்ள பாதிப்பு இல்லாத வட்டங்களை தவிர்த்து மழை வெள்ளம் அதிகம் பாதித்து இருக்க கூடிய வட்டங்களில் மழைக்கால நிவாரண நிதி வழங்க ஆலோசனை எனத் தகவல்”

“வெள்ள பாதிப்பு இல்லாத வட்டங்களை தவிர்த்து மழை வெள்ளம் அதிகம் பாதித்து இருக்க கூடிய வட்டங்களில் மழைக்கால நிவாரண நிதி வழங்க ஆலோசனை எனத் தகவல்”

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோருக்கு மீட்பு பணிகளை துரிதப்படுத்துவது மற்றும் நிவாரண பணிகள் தருவது குறித்த ஆய்வு கூட்ட்டம் சென்னை தலைமை செயலத்தில் நடைபெற்றது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மின்சாரம் மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி இரவு  முதல் டிசம்பர் 5ஆம் தெதி வரை பெய்த தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் வீடுகள் மூழ்கியதால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் மழை பாதித்த மக்களுக்கு மழை நிவாரண நிதி வழங்குவது குறித்து இந்த ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 30 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி பள்ளிப்பட்டு வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர், மதுராந்தகம் வட்டங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட வட்டங்களில் பெரிய அளவுக்கு வெள்ள பாதிப்பு இல்லை என கூறப்படுகிறது. 

எனவே பெரிய அளவில் மழை வெள்ள பாதிப்பு இல்லாத வட்டங்களை தவிர்த்து மழை வெள்ளம் அதிகம் பாதித்து இருக்க கூடிய வட்டங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மழைக்கால நிவாரண நிதி வழங்குவது இதில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒரு குடும்ப அட்டைக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை மழை நிவாரணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

அடுத்த செய்தி