தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cm Mk Stalin: மீனவர்கள் கைது விவகாரம்..மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய கடிதம்!

CM MK Stalin: மீனவர்கள் கைது விவகாரம்..மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய கடிதம்!

Karthikeyan S HT Tamil

Jun 25, 2024, 07:33 PM IST

google News
CM MK Stalin: மீனவர்கள் விஷயத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
CM MK Stalin: மீனவர்கள் விஷயத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

CM MK Stalin: மீனவர்கள் விஷயத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், தற்போது இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட கூட்டுப் பணிக் குழுக் கூட்டத்தை உடனடியாக நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “செவ்வாய் (ஜூன் 25) அன்று IND-TN-12-MM-5138 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2024-ம் ஆண்டில் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் இதுவரை 203 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 27 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் இதுபோன்று அடிக்கடி கைது செய்யப்படுவது, தமிழகத்தின் மீனவ சமுதாயத்தினரிடையே ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த விஷயத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும்,166 மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும், கூட்டுப் பணிக்குழு கூட்டத்தைக் கூட்டுவதற்குத் தேவையான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்.” என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

10 மீனவர்கள் கைது

நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இன்று அதிகாலை அவர்கள் இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 10 பேரையும் கைது செய்தனர். இலங்கை கடற்பகுதியில் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டிவந்து மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் கைது

கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்களையும், அவர்களின் மூன்று விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் எழுதி இருந்தார். 

மீண்டும் கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்

இந்தச் சூழலில் நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை இன்று காலை கைது செய்துள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், தற்போது இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட கூட்டுப் பணிக் குழுக் கூட்டத்தை உடனடியாக நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை