தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cauvery Issue: ’செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கியது!’ பேரவையில் முதல்வர் ஆவேச பேச்சு!

Cauvery issue: ’செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கியது!’ பேரவையில் முதல்வர் ஆவேச பேச்சு!

Kathiravan V HT Tamil

Oct 09, 2023, 12:10 PM IST

google News
”கர்நாடக அரசு நமக்கு தர வேண்டிய உரிய தண்ணீரை இந்த மாதத்தில் வழங்கவில்லை”
”கர்நாடக அரசு நமக்கு தர வேண்டிய உரிய தண்ணீரை இந்த மாதத்தில் வழங்கவில்லை”

”கர்நாடக அரசு நமக்கு தர வேண்டிய உரிய தண்ணீரை இந்த மாதத்தில் வழங்கவில்லை”

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி, வேளாண் விஞ்ஞானி, முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் மறைந்த எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கேள்வி நேரம் நிறைவடந்த நிலையில் காவிரி விவகாரத்தில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து பேசி வருகிறார். அதில், தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய காவிரி நதிநீர் உரிமையை காக்கும் கடமையை நோக்கிய நமது சிந்தனையை, எண்ணத்தை, இன்னும் சொன்னால் கட்டளையை

இடக்கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இது அமைந்துள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் காவிரி நீர் உரிமையை காப்பதில் திமுக உறுதியாக இருக்கும் என்ற உறுதி மொழியை இந்த மாமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு காவிரி டெல்டா உழவர்களுக்காக மேட்டூர் அணையானது சீராக திறந்துவிடப்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12 அன்றும் 2022ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் அன்று திறக்கப்பட்டது. காவிரி டெல்டாவில் வாய்க்கால்கள் திட்டமிடப்பட்டு தூர்வாரபட்டதால் கடைமடை வரை நீர் சென்று பயிர்கள் செழித்தன.

இதனால் 2021-22ஆம் ஆண்டில் 46.2 லட்சம் டன் அளவில், 2022-23 ஆம் ஆண்டில் 45.9 லட்சம் டன் அளவிலும் காவிரி பாசன பகுதியில் நெல் உற்பத்தி செய்து மிகப்பெரிய சாதனை செய்தோம்.

இந்த சாதனையானது இந்த ஆண்டும் தொடர்ந்தது. இந்த ஆண்டில் 1 ஜூன் 2023 நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்த 69.7 டிஎம்சி நீர் அளவையும், தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்பையும் கருத்தில் கொண்டு ஜூன் 12 அன்று மேட்டூர் அணையை திறந்தோம். மேட்டூர் அணையின் நீர் இருப்பு 50 டிஎம்சிக்கு மேலாக உள்ளபோது உழவர்கள் பருவத்தே பயிர் செய்ய ஏதுவாக மேட்டூர் அணை ஜூன் 12 அன்று திறந்து வைப்பது வழக்கமாக உள்ளது. செயற்கையான நெருக்கடியை கர்நாடக மாநில அரசு உருவாக்கி வருகிறது. கர்நாடக அரசு நமக்கு தர வேண்டிய உரிய தண்ணீரை இந்த மாதத்தில் வழங்கவில்லை.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை