தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Heavy Rain: குமரி - 108%, நெல்லை - 135% ’என் அனுபவத்தில் இவ்வளவு மழை பெய்ததில்லை!’ வானிலை ஆய்வு மைய தலைவர் பேட்டி

Heavy Rain: குமரி - 108%, நெல்லை - 135% ’என் அனுபவத்தில் இவ்வளவு மழை பெய்ததில்லை!’ வானிலை ஆய்வு மைய தலைவர் பேட்டி

Kathiravan V HT Tamil

Dec 18, 2023, 01:45 PM IST

google News
”Heavy Rain: தமிழ்நாட்டில் தற்போது வரை இயல்பை விட கூடுதலாக 5 சதவீதம் மழை பதிவாகி உள்ளது”
”Heavy Rain: தமிழ்நாட்டில் தற்போது வரை இயல்பை விட கூடுதலாக 5 சதவீதம் மழை பதிவாகி உள்ளது”

”Heavy Rain: தமிழ்நாட்டில் தற்போது வரை இயல்பை விட கூடுதலாக 5 சதவீதம் மழை பதிவாகி உள்ளது”

கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய  அவர், வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து இன்று வரை பதிவான மழையின் அளவு 44 செமீ, இந்த கால கட்டத்தின் சராசரி மழை அளவு 42 செ.மீ., இது இயல்பை விட 5 சதவீதம் அதிகம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 103 சதவீதமும், நெல்லை 135 சதவீதமும், தூத்துக்குடி 68 சதவீதமும், தென்காசி 80 சதவீதமும் இயல்பைவிட கூடுதலாக மழை பெய்துள்ளது. வளிமண்டல கிழடுக்கு சுழற்சிக்கே இந்த அளவுக்கு அதிகனமழை பெய்து இதுவே முதல்முறை, வரும் காலங்களில் புவி வெப்பம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணத்தால் இது போன்ற மழையை இனி வரும் காலங்களில் எதிர்பார்க்கலாம்.

ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ அல்லது அதற்கு மேல் மழை பெய்தால்தான் அது மேக வெடிப்பு என்போம், ஆனால் இது நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்துள்ளது என்பதால் இது மேக வெடிப்பு அல்ல. சுழற்சி மூலம் இவ்வுளவு மழையை எனது அனுபவத்தில் பார்த்தது இல்லை என கூறினார். 

மேலும், மழை எச்சரிக்கை குறித்த விவரங்கள் உடனுக்குடன் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகனமழை குறித்த எச்சரிக்கை நேற்றைய தினமே விடுக்கப்பட்டுள்ளது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார். 

அடுத்த செய்தி