TN 12th Results 2023 : ‘ப்ளஸ் 2 தேர்ச்சி’ உங்கள் மாவட்டம் எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?
May 08, 2023, 12:41 PM IST
TN 12th Results 2023 : 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் 3,324 மையங்களில் கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடந்தது.
இதையடுத்து தேர்வு முடிவுகளை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். காலை ஒன்பதரை மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் வர தாமதமானதால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிறிது தாமதங்கள் ஏற்பட்டது. அமைச்சர் வந்தபின் 10 மணிக்கு மேல் தேர்வு முடிவுகளை அண்ணா நூற்றாண்டு நூலாக்கத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். அவர் காலை திருச்சியில் விமானம் மூலம் இன்றுதான் சென்னை வந்ததால் தாமதம் ஏற்பட்டது. அதற்காக அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
விருதுநகர் 97.85 சதவீதம்
திருப்பூர் 97.79 சதவீதம்
பெரம்பலூர் 97.59 சதவீதம்
கோவை 97.57 சதவீதம்
தூத்துக்குடி 97.36 சதவீதம்
சிவகங்கை 97.26 சதவீதம்
கன்னியாகுமரி 97.05 சதவீதம்
ஈரோடு 96.98 சதவீதம்
நாமக்கல் 96.94 சதவீதம்
அரியலூர் 96.88 சதவீதம்
திருநெல்வேலி 96.61 சதவீதம்
ராமநாதபுரம் 96.30 சதவீதம்
திருச்சி 96.02 சதவீதம்
தென்காசி 95.96 சதவீதம்
மதுரை 95.84 சதவீதம்
தஞ்சாவூர் 95.18 சதவீதம்
கரூர் 94.31 சதவீதம்
சேலம் 94.22 சதவீதம்
சென்னை 94.14 சதவீதம்
நீலகிரி 93.85 சதவீதம்
திண்டுக்கல் 93.77 சதவீதம்
புதுச்சேரி 93.45 சதவீதம்
தேனீ 93.17 சதவீதம்
புதுக்கோட்டை 92.81 சதவீதம்
தர்மபுரி 92.72 சதவீதம்
செங்கல்பட்டு 92.52 சதவீதம்
திருவள்ளூர் 92.47 சதவீதம்
கடலூர் 92.04 சதவீதம்
திருவாரூர் 91.46 சதவீதம்
திருப்பத்தூர் 91.13 சதவீதம்
கள்ளக்குறிச்ச 91.06 சதவீதம்
காஞ்சிபுரம் 90.82 சதவீதம்
நாகை 90.68 சதவீதம்
விழுப்புரம் 90.66 சதவீதம்
மயிலாடுதுறை 90.15 சதவீதம்
திருவண்ணாமலை 89.08 சதவீதம்
கிருஷ்ணகிரி 89.69 சதவீதம்
வேலூர் 89.20 சதவீதம்
காரைக்கால் 88.57 சதவீதம்
ராணிப்பேட்டை 87.30
திருச்சி மாவட்டத்தில் 133 தேர்வு மையங்களில் மொத்தம் 260 பள்ளிகளை சேர்ந்த மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இதில் தேர்வெழுதிய14,390 மாணவர்களில் 13,520 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 16,520 தேர்வு எழுதியிருந்தனர். இதில் 16,159 பேர் தேர்ச்சி பெற்றனர்.
மாவட்டத்தில் மொத்த தேர்ச்சி 29,679 பேர்கள். மொத்த தேர்ச்சி விழுக்காடு - 96.02 சதவீதம் ஆகும்.
டாபிக்ஸ்