தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Srirangam: ஸ்ரீரங்கம் கோயிலில் ஐயப்ப பக்தருக்கு ரத்தம் சொட்ட அடி உதை! நடை சத்தப்பட்டதால் பரபரப்பு

Srirangam: ஸ்ரீரங்கம் கோயிலில் ஐயப்ப பக்தருக்கு ரத்தம் சொட்ட அடி உதை! நடை சத்தப்பட்டதால் பரபரப்பு

Kathiravan V HT Tamil

Dec 12, 2023, 11:36 AM IST

google News
”Srirangam temple: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஐய்யப்ப பக்தர்கள் முயன்றுள்ளனர். மேலும் உண்டியலை அடித்தும், அதனை பிடித்தும் ஆட்டியதாகவும் கூறப்படுகிறது”
”Srirangam temple: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஐய்யப்ப பக்தர்கள் முயன்றுள்ளனர். மேலும் உண்டியலை அடித்தும், அதனை பிடித்தும் ஆட்டியதாகவும் கூறப்படுகிறது”

”Srirangam temple: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஐய்யப்ப பக்தர்கள் முயன்றுள்ளனர். மேலும் உண்டியலை அடித்தும், அதனை பிடித்தும் ஆட்டியதாகவும் கூறப்படுகிறது”

108 வைணவத் தலங்களில் முதன்மையான தலமாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதேசி திருவிழா பிரசித்தி பெற்றது.

இந்த நிகழ்வின் தொடக்கமான திருநெடுந்தாண்டகம் இன்று மாலை தொடங்க உள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்துள்ளனர். மேலும் சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் சபரிமலை தரிசனத்தை முடித்துக் கொண்டு ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது.

சுவாமி தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்த நிலையில், கோயில் நிர்வாகம் சார்பில் நியமிக்கப்பட்டு இருந்தனர். அப்போது முந்தி சென்று சுவாமி தரிசனம் செய்ய கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஐய்யப்ப பக்தர்கள் முயன்றுள்ளனர். மேலும் உண்டியலை அடித்தும், அதனை பிடித்தும் ஆட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனை தட்டிக்கேட்ட கோயில் பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.அப்போது சென்னா ராவ் என்பவர் மீது நடத்திய தாக்குதலில் மூக்கு உடைந்து ரத்தம் சொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தன் மீது தாக்குதல் நடத்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காயத்ரி மண்டபம் முன் அமர்ந்து சென்னா ராவ் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது வந்த கோயில் நிர்வாகத்தினர் சென்னா ராவ் மற்றும் ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

தங்கள் மீது தாக்குதல் நடத்திய கோயில் பாதுகாவலர்களை கைது செய்ய கோரி ஆந்திர பக்தர்களும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தங்கள் மீது தாக்குதல் நடத்திய ஆந்திர பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோயில் பாதுகாவலரக்ளும் மாறி மாறி புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் கோயிலில் ரத்தம் சிந்தியதால் கோயில் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு சிறிது நேரம் கழித்து திறக்கப்பட்டது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி