தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  City Council Meeting : தமிழக அரசின் முடிவுக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

City council meeting : தமிழக அரசின் முடிவுக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

Divya Sekar HT Tamil

Oct 29, 2022, 01:26 PM IST

google News
தமிழகத்தில் நகர சபை, மாநகர சபைக் கூட்டங்கள் நடைபெறும் என முதல் முறையாக அறிவிக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் முடிவுக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழகத்தில் கிராமசபைக் கூட்டம்போல நகர சபை, மாநகர சபைக் கூட்டங்களும் நடைபெறும் என முதல் முறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பல்லாவரம் அருகேயுள்ள பம்மல் 6-வது வார்டில் வரும் நவம்பர் 1-ம் தேதி நடைபெறும் மாநகர சபைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் இந்த முடிவை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.

நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஒரு விஷயம் நடைமுறைக்கு வந்துள்ளது பாராட்டுக்குரியது. நகர, மாநகர சபைகளிலும், உள்ளாட்சிகளில் நடைபெறும் பணிகள், அடுத்ததாக நடைபெற வேண்டியத் திட்டங்கள், மக்களுடைய கோரிக்கைகளை கேட்டு, தீர்மானம் நிறைவேற்றி, அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று, அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

மேலும், குடியரசு தினம், தொழிலாளர் நாள், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள், உள்ளாட்சி நாள் என கிராம சபை நடைபெறும் நாட்களில், நகர, மாநகர சபைகளையும் நடத்த வேண்டும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி