தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Hbd Santhosh Sivan: சகலகலா சினிமா கலைஞன்… சந்தோஷ் சிவன்…

HBD Santhosh sivan: சகலகலா சினிமா கலைஞன்… சந்தோஷ் சிவன்…

Priyadarshini R HT Tamil

Feb 08, 2023, 06:43 AM IST

google News
HBD Indian Cinematographer: இந்திய சினிமாவின் தலைசிறந்த ஒளிப்பாளர்களுள் ஒருவரான சந்தோஷ் சிவனுக்கு இன்று பிறந்தநாள். இயக்குனர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என பல துறைகளிலும் கலக்கியவர்.
HBD Indian Cinematographer: இந்திய சினிமாவின் தலைசிறந்த ஒளிப்பாளர்களுள் ஒருவரான சந்தோஷ் சிவனுக்கு இன்று பிறந்தநாள். இயக்குனர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என பல துறைகளிலும் கலக்கியவர்.

HBD Indian Cinematographer: இந்திய சினிமாவின் தலைசிறந்த ஒளிப்பாளர்களுள் ஒருவரான சந்தோஷ் சிவனுக்கு இன்று பிறந்தநாள். இயக்குனர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என பல துறைகளிலும் கலக்கியவர்.

சந்தோஷ் சிவன் 1964ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி பிறந்தவர். ஒளிப்பதிவாளர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தவர். மலையாளம், தமிழ், இந்தி என அனைத்து மொழிகளிலும் பணியாற்றியவர். இந்திய திரைப்படம் மற்றும் டிவி நிறுவனத்தில் படித்தவர். 55 திரைப்படங்களும், 50 ஆவணப்படங்களும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களுள் ஒருவர்.   

இந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் நிறுவன உறுப்பினர். இயக்குனராக சந்தோஷ் சிவன், 1988ம் ஆண்டு ஸ்டோரி ஆப் திப்லு என்ற படத்திற்கு தேசிய விருது வாங்கினார். அவரது திரைப்படம் ஹலோ, 43வது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த குழந்தைகள் படம் மற்றும் சிறந்த ஓசை ஆகிய பிரிவுகளில் கவுரவப்படுத்தப்பட்டது. 

சந்தோஷ் சிவன்தான் ஆசிய-பசிபிக் பகுதிகளிலிருந்து அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் முதல் உறுப்பினரானவர். சந்தோஷ் சிவன் 5 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். அதில் நான்கு சிறந்த ஒளிப்பதிவுக்காக வாங்கியது. தேசிய அளவில் 11 விருதுகளையும், சர்வதேச அளவில் 21 விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இந்தியாவின் உயரிய பட்டங்களுள் ஒன்றாக கருதப்படும் பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். 

இவர் எப்போதும் கதைக்காக படங்களை தேர்ந்தெடுப்பதில்லை. இவர் இயக்குனருக்காக படத்தை தேர்ந்தெடுக்கிறார். ரஜினி நடித்த தளபதி படத்தின் ஒளிப்பதிவாளர் இவர். அந்த படத்திற்கு இருள் சூழ்ந்த ஒளியை மிக நேர்த்தியாக கொண்டு வந்திருப்பார். தளபதிக்குப்பின்னர் அவர் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக தர்பார் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். தளபதி படத்திற்கு பின்னர் தர்பாரில் ரஜினியை படம் பிடிக்கிறேன் என்றும், அனைவரை சரிசமமாக நடத்துபவர் ரஜினி என்றும், அவர் எவர் மீதும் பாகுபாடு காட்டாதது ஆச்சரியமளிக்கிறது என்று தனது தர்பார் அனுபவங்களை குறிப்பிட்டு டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.   

தளபதி, ரோஜா, இந்திரா என்று மணிரத்னம், சந்தோஷ் சிவன் கம்போ தமிழ் சினிமாவின் ஸ்பெஷல் பார்ட் என்றே கூறலாம். இந்த படங்களில் இருள் சூழ்ந்த ஒளிதான் இயக்குனர் மணிரத்னத்துக்கும் தனித்துவத்தை உருவாக்கிக்கொடுத்தது. 

இருவர், மல்லி, நவரசா, ராவணன், வர்ணம், துப்பாக்கி, இனம், அஞ்சான், ஸ்பைடர், செக்கசிவந்த வானம், தர்பார் என்ற தமிழ் படங்களுக்கும், பல்வேறு மலையாளம் மற்றும் இந்தி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார். பல படங்களை இயக்கியும் உள்ளார். தமிழகம், கேரள மாநில விருதுகள், பிலிம் பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

இவரது மனைவியின் பெயர் தீபா. இவர்களுக்கு சர்வாஜித் என்ற மகன் உள்ளார். சந்தோஷ் சிவன் எல்லா வளமும், எல்லா நலமும் பெற்று வாழ ஹெச்டி தமிழ் அவரை வாழ்த்துகிறது.  

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி