தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mk Stalin: ’நாங்கள் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் இந்த பிரச்னையே இல்லை’ ஆளுநர் குறித்த கேள்விக்கு முதல்வர் ஆதங்க பதில்!

MK Stalin: ’நாங்கள் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் இந்த பிரச்னையே இல்லை’ ஆளுநர் குறித்த கேள்விக்கு முதல்வர் ஆதங்க பதில்!

Kathiravan V HT Tamil

Jun 09, 2023, 02:20 PM IST

google News
”கடந்த 2 ஆண்டுகளை போல் இந்தாண்டும் டெல்டா உழவர்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைப்பார்கள் என்பதை நம்புகிறேன்.”
”கடந்த 2 ஆண்டுகளை போல் இந்தாண்டும் டெல்டா உழவர்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைப்பார்கள் என்பதை நம்புகிறேன்.”

”கடந்த 2 ஆண்டுகளை போல் இந்தாண்டும் டெல்டா உழவர்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைப்பார்கள் என்பதை நம்புகிறேன்.”

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த பிறகு திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

வேளாண்மை துறை வளர்ச்சிக்காக அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.டெல்டா உரிமைகளை விட்டுக்கொடுக்காத அரசாக திமுக அரசு தொடர்ந்து செயல்படும்.

கால்வாய்களை தூர்வாருவதற்காக கடந்த 2021-22ஆம் ஆண்டில் 62 கோடியே 91 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேட்டூர் அணை பாசனத்திற்காக தண்ணீர் ஜூன் 12ஆம் தேதி திறந்து விடப்பட்டது. இதன் விளைவாக காவிரி டெல்டா பகுதியில் 4 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி,13 லட்சத்து 341 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு 39 லட்சத்து 73 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைத்தோம்.

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர் ஸ்டாலின்

 

2022-23 வரவு செலவு திட்டத்தில் காவிரி பாசன திட்டத்தில் தூர்வார 80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேட்டூர் அணை மிக சீக்கிரமாக மே 24ஆம் தேதி அன்று முன்கூட்டியே திறக்கப்பட்டது. இருந்தாலும் தண்ணீர் வந்து சேறும் முன்பே 4964 கி.மீ நீளம் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட்டது. கூட்டுறவு வங்கிகளில் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2022-23ஆம் ஆண்டில் 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி 13 லட்சத்து 56 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு 41 லட்சத்து 45 ஆயிரம் டன் நெல் உற்பத்தியானது.

இந்தாண்டும் இதே போன்ற திட்டமிடலை தமிழ்நாடு அரசு செய்தது. நீர்வளத்துறைக்கு 90 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 96 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பணிகள் இன்னும் சில தினங்களில் முடிக்கப்படும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம்ஜ் 27.17 கோடி செலவில் 1433 கி.மீ நீள சிறிய கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. 8.13 லட்சம் செலவில் 25 குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் புணரமைக்கப்பட்டுள்ளது. வருன் ஜூன் 12ஆம் தேதியன்று மேட்டூருக்கு சென்று காவிரி நீரை திறந்து வைக்க உள்ளேன்.

கடந்த 2 ஆண்டுகளை போல் இந்தாண்டும் டெல்டா உழவர்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைப்பார்கள் என்பதை நம்புகிறேன்.

கேள்வி:- கர்நாடகாவில் புதியதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசு மேததாது அணை கட்ட முயற்சிக்கிறதே?

புதிய காங்கிரஸ் ஆட்சி மட்டுமல்ல; ஏற்கெனவே உள்ள ஆட்சிகளும் மேதாது அணையை கட்டுவோம் என்றார்கள். அப்போதும் நாம் எதிர்த்தோம், அதே நிலையில்தான் எங்கள் ஆட்சி உள்ளது. கலைஞர் எப்படி உறுதியாக இருந்தாரோ அதே உறுதியோடு இருப்போம்.

கேள்வி:- ஆளுநர் நீக்க கோரிக்கை வைப்பீர்களா?

நாங்கள் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் இந்த பிரச்னையே இல்லை

கேள்வி:- தமிழ்நாட்டில் மின்சார கட்டண உயர்வு குறித்து விமர்சனங்கள் எழுகிறதே?

வீட்டு இணைப்பிற்கு மின்சார கட்டணம் உயர்வு கிடையாது- அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும். ஒன்றிய அரசு விதிப்பட 4.1 விழுக்காடு அதிகரிக்க வேண்டும் அதிலும் 2 விழுக்காடு குறைத்துள்ளோம். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின்சாரக்கட்டணம் குறைவாக உள்ளது.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை