தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai High Court: சிபிசிஐடி விசாரணையில் அதிருப்தி... அடுத்தது...?

Chennai high court: சிபிசிஐடி விசாரணையில் அதிருப்தி... அடுத்தது...?

Feb 01, 2023, 07:27 PM IST

google News
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை அதிருப்தி அளிக்கிறது.
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை அதிருப்தி அளிக்கிறது.

சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை அதிருப்தி அளிக்கிறது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி முறையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், “சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு அதிகாரிகள் 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளனர். எனவே, அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரியும், தற்போது மதுரை ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாய ஆணையருமான நர்மதா நேரில் ஆஜராகியிருந்தார். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “கடந்த 2020-ம் ஆண்டு மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. தவறாக வழங்கப்பட்ட இழப்பீடு தொகைகள் திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது. வேண்டு மென்றே போலியான நபர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இத்திட்டத்தின் கீழ் நெம்மிலி, அயக் குளத்தூர் கிராமங்களில் கையகப்படுத் தப்பட்ட 3 லட்சத்து 64 ஆயிரத்து 982 சதுர மீட்டர் நிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட 286 கோடியே 40 லட்சம் ரூபாய் இழப்பீட்டில், 247 கோடியே 46 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதனால் 38 கோடியே 93 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி சுரேஷ்குமார் , "நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் அதிருப்தி அளிக்கிறது. மேலும் முறையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும் என்றார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 13க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி