தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai Flood 2023: ’சென்னை மக்களுக்கு நிம்மதி செய்தி! செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்த்திறப்பு குறைப்பு!’

Chennai Flood 2023: ’சென்னை மக்களுக்கு நிம்மதி செய்தி! செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்த்திறப்பு குறைப்பு!’

Kathiravan V HT Tamil

Dec 10, 2023, 08:16 AM IST

google News
”Chennai Flood 2023:டிசம்பர் 3ஆம் தேதி அன்று செம்பரம்பாக்கம் ஏரியில் 76 சதவீதம் அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது”
”Chennai Flood 2023:டிசம்பர் 3ஆம் தேதி அன்று செம்பரம்பாக்கம் ஏரியில் 76 சதவீதம் அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது”

”Chennai Flood 2023:டிசம்பர் 3ஆம் தேதி அன்று செம்பரம்பாக்கம் ஏரியில் 76 சதவீதம் அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது”

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியாக விளங்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி 6 ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இதில் மொத்தமாக 3645 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரானது அடையாறு ஆற்று மூலம் பயணித்து வங்கக்கடலில் கலப்பது வழக்கம்.

கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் பெய்த பெருமழையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஆனது சென்னையில் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இது போன்ற சேதங்களை முன்கூட்டியே தவிர்க்கும் வகையில், முன்னதாகவே ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 3ஆம் தேதி அன்று செம்பரம்பாக்கம் ஏரியில் 76 சதவீதம் அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. மிக்ஜாம் புயல் அதிகம் மழையை தரும் என்பதால் இந்த நடவடிக்கை முன்கூட்டியே எடுக்கப்பட்டு இருந்தது.

பின்னர் டிசம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை பெய்த தொடர் மழையால் ஏரியில் நீரின் அளவு 95 சதவீதம் வரை அதிகரித்த நிலையில் டிசம்பர் 5ஆம் தேதியே ஏரியில் இருந்து 10,000 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது.

மழை குறைந்தாலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து நீரானது திறக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1500 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு 1000 கன அடியாக உள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடியாக உள்ள நிலையில் 22.64 அடிக்கு நீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி