தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Latest News Updates : தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாது - டி.கே.சிவக்குமார்
Tamil Latest News Updates : தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உள்ளிட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Tamil Latest News Updates : தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உள்ளிட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Tamil Latest News Updates : தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாது - டி.கே.சிவக்குமார்

Oct 30, 2023, 07:05 PM IST

Tamil Latest News Updates : தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உள்ளிட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Oct 30, 2023, 07:05 PM IST

இன்சமாம் உல் ஹக் ராஜினாமா

Inzamam Ul Haq: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை இன்சமாம் உல் ஹக் ராஜினாமா செய்தார்.

Oct 30, 2023, 06:38 PM IST

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாது - டி.கே.சிவக்குமார்

Cauvery Water Issue: நீர்வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டதால் கே.ஆர்.எஸ், கபினி, அணைகளில் இருக்கும் தண்ணீர் எங்கள் குடிநீர் தேவைக்கே போதுமானதாக இல்லை, எனவே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாது என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Oct 30, 2023, 06:17 PM IST

ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனை

Leo: லியோ வெற்றி விழாக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Oct 30, 2023, 06:08 PM IST

இலங்கை வெற்றிக்கு 242 ரன்கள் தேவை

AFG vs SL: உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது இலங்கை. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 49.3 ஓவரில் 242 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.

Oct 30, 2023, 05:49 PM IST

TTF வாசனுக்கு 4வது முறையாக காவல் நீட்டிப்பு

TTF Vasan: பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள TTF வாசனுக்கு மேலும் 10 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Oct 30, 2023, 05:28 PM IST

26 கிலோ வெள்ளி பறிமுதல்

Silver Seized: செங்கல்பட்டு சோழன் விரைவு ரயிலில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 26 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 26 கிலோ வெள்ளி பொருட்களை கொண்டு சென்ற லோகேஷ், கமலேஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Oct 30, 2023, 05:09 PM IST

தெலங்கானாவில் டிஆர்எஸ் வேட்பாளருக்கு கத்திக்குத்து

Telangana Election 2023: தெலங்கானா மாநிலம் சித்திபேட் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் இருந்த பாரத ராஷ்ட்ரிய சமிதி வேட்பாளர் பிரபாகர் ரெட்டியை மர்ம நபர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  காயமடைந்த பிரபாகர் ரெட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Oct 30, 2023, 05:01 PM IST

மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

Chennai Metro Train: தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவை நிறுத்தம் காரணமாக நாளை ஒரு நாள் மட்டும், பச்சை மற்றும் நீலம் ஆகிய 2 வழித்தடங்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Oct 30, 2023, 04:52 PM IST

கேரளா குண்டுவெடிப்பு - தமிழகத்தில் பாதுகாப்பு தீவிரம்

TN Police: கேரளா குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், மதம் தொடர்பான கூட்டங்கள், துணை தூதரகங்கள், மதவாத அமைப்புகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றைத் தீவிரமாகக் கண்காணிக்க அனைத்து காவல் அதிகாரிகள், ரயில்வே ஏடிஜிபி, ஐஜி, டிஐஜிகளுக்கு கூடுதல் டிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார்.

Oct 30, 2023, 04:43 PM IST

2,600 கனஅடி தண்ணீர் திறக்க பரிந்துரை

Cauvery Water: தமிழ்நாட்டுக்கு நவம்பர் 1 முதல் 23ஆம் தேதி வரை காவிரியில் இருந்து வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.

Oct 30, 2023, 04:37 PM IST

முத்துராமலிங்க தேவருக்கு பிரதமர் மோடி தமிழில் புகழாரம்!

PM Modi: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் புகழாரம் சூட்டியுள்ளார்.

Oct 30, 2023, 04:30 PM IST

சிவராஜ் சிங் செளகான் வேட்புமனுத்தாக்கல்

MP Election 2023: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், புத்னி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட இன்று தனது வேட்புமனு தாக்கல் செய்தார்.

Oct 30, 2023, 04:05 PM IST

சென்னையில் கனமழை

Chennai Rain: சென்னையில்,எழும்பூர், சென்ட்ரல், சிந்தாதிரிப்பேட்டை, புரசைவாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

Oct 30, 2023, 03:56 PM IST

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை

Chennai Rain: சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர், அரும்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

Oct 30, 2023, 03:41 PM IST

பழ.நெடுமாறனிடம் நேரில் நலம்விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

CM MK Stalin: மதுரையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

Oct 30, 2023, 03:26 PM IST

நவம்பர்- 1 கன்ஃபார்ம்: லியோ படத்தின் வெற்றி விழாவுக்கு அனுமதி!

Tamil Latest News Updates: நவம்பர் 1-ல் நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிபந்தனைகளுடன் தடையில்லா சான்றிதழ் வழங்கியது, சென்னை மாநகரக் காவல் துறை

Oct 30, 2023, 03:21 PM IST

காசிக்குச் செல்லும் ஆசையில் 60 வயதைக் கடந்தவர்களா நீங்கள்? உங்களுக்குத் தான் இது!

Tamil Latest News Updates: ராமேஸ்வரம் - காசி ஆன்மிகப் பயணத் திட்டத்தில் நடப்பாண்டில், மேலும் 100 பேரை இணைத்து மொத்தம் 300 நபர்களை தமிழ்நாடு அரசு தனது சொந்த செலவில் காசிக்கு அழைத்துச்செல்ல இருக்கிறது.

இந்த வாய்ப்பினை 60 வயதைக் கடந்த இறை நம்பிக்கை கொண்ட இந்து பக்தர்கள் பயன்படுத்திக்கொண்டு, மண்டல இணை ஆணையர் அலுவலகம் அல்லது இந்து சமய அறநிலையத்துறையின் www.hrce.tn.gov.in என்ற தளத்தில் வரும் நவம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதற்குண்டான செலவு ரூ.75 லட்சத்தை தமிழ்நாடு அரசே ஏற்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Oct 30, 2023, 03:07 PM IST

நாட்டிலேயே மிகப்பெரிய ஜியோ மால்

Tamil Latest News Updates:  நாட்டிலேயே மிகப்பெரிய மற்றும் அதிக பொருட்செலவிலான ’ஜியோ மால்’ மும்பை பந்த்ரா குர்லா பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான இந்த மால் நவ.1ஆம் தேதி திறக்கப்படுகிறது

Oct 30, 2023, 02:56 PM IST

பாலகிருஷ்ணா சாமி தரிசனம்

Nandamuri Balakrishna: தஞ்சை, கும்பகோணம் அருகே ராகுபகவான் கோயிலில் தெலுங்கு நடிகரும், எம்.எல்.ஏவுமான நந்தமூரி பாலகிருஷ்ணா சாமி தரிசனம் செய்தார்.

Oct 30, 2023, 02:41 PM IST

முதல்வர் பினராயி நேரில் ஆய்வு

Pinarayi Vijayan: கேரளாவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சம்பவம் குறித்து கேரளா மாநில போலீசார், தேசிய பாதுகாப்பு படையினர், என்ஐஏ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Oct 30, 2023, 02:19 PM IST

அமர் பிரசாத் ரெட்டிக்கு ஒருநாள் கஸ்டடி

Amar Prasad Reddy: பாஜக கொடிக்கம்பத்தை அகற்றிய விவகாரத்தில், பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேருக்கு 1 நாள் போலீஸ் காவல் வழங்கி ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Oct 30, 2023, 02:17 PM IST

ரவுடி கருக்கா வினோத்திற்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

Karukka Vinoth: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான ரவுடி கருக்கா வினோத்தை 3 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Oct 30, 2023, 01:42 PM IST

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஒத்திவைப்பு

Senthil Balaji Case: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை அடுத்த திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். அமலாக்கத்துறை வழக்கில் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்காத நிலையில் உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்திருந்தார்.

Oct 30, 2023, 01:35 PM IST

நதி திரட்ட காங்கிரஸ் கட்சி முடிவு?

Congress: வரும் 2024 தேர்தலுக்காக மக்களிடம் இருந்து நிதி திரட்ட காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் வாயிலாக நிதி கோரும் திட்டத்தைக் காங்கிரஸ் விரைவில் அதிகாரப்பூரமாக அறிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் நிதி இருப்பை கணிசமாக அதிகரிக்கும் முயற்சி இது என காங்கிரஸ் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Oct 30, 2023, 01:30 PM IST

முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரிப்பு

CM MK Stalin: மதுரையில் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனின் இல்லத்திற்கு சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Oct 30, 2023, 12:57 PM IST

இயக்குநர் விக்ரமனை நேரில் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

பிரபல திரைப்பட இயக்குநர் விக்ரமன் தனது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை கொடுத்தாக பேட்டி கொடுத்திருந்த நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்துள்ளார்.

Oct 30, 2023, 12:46 PM IST

விஜய் மக்கள் இயக்கம்  மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Oct 30, 2023, 12:32 PM IST

Chengalpattu : செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சடலம் !

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் உயிரிழந்த நிலையில் நபர் ஒருவர் கண்டெடுக்கப்பட்டுள்ளார். 5 மணி நேரத்திற்கும் மேலாக சடலம் அங்கேயே இருக்கும் நிலையில், பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட் பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு நகர போலீசார் - ரயில்வே போலீசாருக்கு இடையே உள்ள எல்லை பிரச்னை காரணமாக சடலத்தை எடுப்பதில் தாமதம் என தகவல் வெளியாகியுள்ளது.

Oct 30, 2023, 12:28 PM IST

Kodaikanal : போதை காளான் விற்பனை

கொடைக்கானலில் இருந்து கொரியர் மூலம் வெளி மாநிலங்களுக்கு போதை காளான் விற்பனை செய்த இரண்டு பெண்கள் உட்பட மூவரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.

Oct 30, 2023, 12:15 PM IST

EPS : பசும்பொன்னில் எடப்பாடி பழனிச்சாமி !

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை

Oct 30, 2023, 12:01 PM IST

LEO : லியோ வெற்றிவிழாவுக்கு காவல்துறை அனுமதி!

லியோ வெற்றிவிழாவுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

Oct 30, 2023, 11:54 AM IST

NEET : நீட் தேர்வு: சின்ன சேலத்தில்  மாணவி தற்கொலை!

கள்ளக்குறிச்சி, சின்ன சேலத்தில் நீட் தேர்வு அச்சத்தால், பைரவி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Oct 30, 2023, 11:41 AM IST

Cm Stalin : மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மரியாதை!

மதுரை தெப்பக்குளம் பகுதியில் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Oct 30, 2023, 11:34 AM IST

EPS : மருது சகோதரர்களின் சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை!

மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு ஈபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Oct 30, 2023, 11:19 AM IST

Train Accident : ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணம்!

2 ரயில்கள் மோதி கோர விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரயில்வே துறை தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்ததுள்ளது.

Oct 30, 2023, 11:15 AM IST

Weather Update : 13 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கள், மதுரை, விருதுநகர், தூந்துக்குடி சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Oct 30, 2023, 11:02 AM IST

CM Stalin : ஆளுநரின் கருத்துக்கு முதல்வர் பதிலடி!

இன்னாருக்கு இதுதான் என சொல்வது ஆரியம் எல்லாருக்கும் எதுவும் உண்டு என்று சொல்வது திராவிடம். இந்த வித்தியாசத்தை ஆளுநர் ரவி புரிந்துகொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Oct 30, 2023, 10:48 AM IST

கே.எஸ்.அழகிரி வாழ்த்து!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது சமூகவலைத்தள பக்கத்தில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி தினமான இன்று அவருக்கு எங்களது நினைவஞ்சலி என்று கூறியுள்ளார்.

Oct 30, 2023, 10:38 AM IST

வானதி சீனிவாசன் வாழ்த்து!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று முழங்கிய தேசபக்தரும் சுதந்திரப் போராட்ட வீரரும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை அனுப்பியவருமான வீரதிருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை இன்று.இந்நாளில் அவரது நினைவை போற்றி வணங்குகிறேன் என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Oct 30, 2023, 10:25 AM IST

Rain Upadate  : 13 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

13 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Oct 30, 2023, 10:13 AM IST

Sasikala : முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மரியாதை!

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மரியாதை!

Oct 30, 2023, 10:05 AM IST

தேவர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

பசும்பொன் முத்துராம லிங்கம் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.

Oct 30, 2023, 10:00 AM IST

Crime: சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட ரவுடி கைது!

சென்னை காசிமேடு கரீபியன் ஹோட்டல் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட ரவுடி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்நிலையில் கைது செய்யப்பட்ட சூர்யாவிடம் இருந்து 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Oct 30, 2023, 09:43 AM IST

Water level : தமிழக முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்! 

- 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2589 மில்லியன் கன அடியாக உள்ளது. 159 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

- 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 579 மில்லியன் கன அடியாக உள்ளது.

- 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 440 மில்லியன் கன அடியாக உள்ளது.

Oct 30, 2023, 09:45 AM IST

EPS: மருது சகோதரர்கள் சிலைகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி மரியாதை!

மதுரை தெப்பக்குளத்தில் அமைந்துள்ள, மாமன்னர்கள் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Oct 30, 2023, 09:46 AM IST

Electoral Bonds: தேர்தல் பத்திரங்கள் மக்களுக்கு உரிமை இல்லை!

தேர்தல் பத்திரங்கள் மூலமாக, அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குபவர்கள் யார் என்பதை அறிய, மக்களுக்கு உரிமை இல்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Oct 30, 2023, 08:37 AM IST

Madurai: மதுரையில் இரண்டு புதிய மேம்பாலங்கள்!

மதுரையில் 2 புதிய மேம்பாலங்களுக்கான கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ. 190.40 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது. மதுரை - தொண்டி சாலையில் அப்போலோ சந்திப்பில் ரூ. 150.28 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Oct 30, 2023, 09:47 AM IST

M.K.Stalin: தேவர் சிலைக்கு முதல்வர் மரியாதை!

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Oct 30, 2023, 07:51 AM IST

இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுவதாக ஆட்சியர் பாவிஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.

Oct 30, 2023, 07:47 AM IST

ஆந்திரா ரயில் விபத்து பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. படுகாயங்களுடன் 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Oct 30, 2023, 07:20 AM IST

கேரளா குண்டு வெடிப்பு பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

கேரள மாநிலம் களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்ததில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 51 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் குண்டு வைத்ததாக டொமினிக் மார்டின் என்பவர் காவல்துறையில் சரணடைந்தார். இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

Oct 30, 2023, 07:03 AM IST

Petrol Diesel Price: பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் 527ஆவது நாளாக அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை இன்று (அக் 30) லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

    பகிர்வு கட்டுரை