தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கைது

Tamil Live News Updates: பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கைது

HT Tamil Desk HT Tamil

Dec 26, 2023, 05:29 PM IST

google News
Tamil Live News Updates: இன்றைய (26.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Tamil Live News Updates: இன்றைய (26.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Tamil Live News Updates: இன்றைய (26.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கைது

Selam Periyar University: வர்த்தக நிறுவனத்தை துவங்கியதாக எழுந்த புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகன்நாதன் கைது

லதா ரஜினிகாந்துக்கு முன் ஜாமீன்

Latha Rajinikanth: கோச்சடையான் திரைப்படத்தை தயாரிக்க 6.2 கோடி ரூபாய் கடன் பெற்றதில் உத்திரவாத கையெழுத்து இட்டு மோசடி செய்ததாக லஜா ரஜினிகாந்த் மீது பதியப்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் முன் ஜாமீன் அளித்தது பெங்களூரு நீதிமன்றம்

டிச.30இல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு

Kilambakkam Bus Terminal: கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை வரும் டிசம்பர் 30ஆம் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என தகவல்

நான் பேசினால் சிறை செல்ல வேண்டி வரும்

EPS Vs OPS: என்னுடைய பணி நிறைவாக உள்ளது. என்னை யாரும் நம்பிக்கை துரோகி என சொல்ல முடியாது. நீ முதலமைச்சரா என்னென்ன செஞ்ச என்பது எனக்கு நல்லா தெரியும். நான் கையெழுத்து போட்டுத்தான் பைல் பூரா அடுத்தது போகும், நான் அவிழ்த்துவிட்டால் நீ திகார் சிறைக்கு செல்ல வேண்டியது இருக்கும். அரசாங்க ரகசியத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக முதலமைச்சராக இருந்தேன். வர்தா புயல் வந்தபோது, தண்ணீர் பஞ்சம், ஜல்லிக்கட்டு பிரச்னை வந்தபோது உயிரை கையில் பிடித்துக் கொண்டு பிரச்னைகளை சுமூகமாக முடித்தேன் - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

தூத்துக்குடியில் ஆலோசனைக் கூட்டம் 

Thoothudi Floods: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்வையிட்டார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திமுகவுக்கு இறங்கு முகம்

ADMK Meeting: திமுகவுக்கு இறங்கு முகம் தொடங்கிவிட்டது. திமுக ஆட்சி எப்போது போகும், அதிமுக ஆட்சி எப்போது வரும் என மக்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். அடுத்த எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக கூட்டணிதான் வெல்லும் என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துவிட்டது - அதிமுக பொதுக்குழுவில் ஈபிஎஸ் பேச்சு

முதலமைச்சர் சிறை செல்வார் என பயம்

ADMK Meeting: ஒரு அமைச்சர் இன்றைக்கு சிறையில் இருக்கிறார். நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்குகிறது. ஒரு அமைச்சர் சிறையில் இருக்கிறார். அவரை அமைச்சராக பார்ப்பதா?; கைதியாக பார்ப்பதா? என்ற கேள்வி எழுப்பும்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சொன்னார் சட்ட நெறிமுறைப்படி நல்ல அரசாட்சி தர முதல்வர் நினைத்தால் தார்மீக அடிப்படையில் அவரை பதவியில் இருந்து விலகி இருக்க சொல்ல வேண்டும். ஆனால் இன்னும் சூடு சொரணை இல்லை. நீதிமன்றம் சொல்லியும் கூட அவரை அமைச்சரவையில் இருந்து விடுவிக்காமல் இருக்க காரணம் அவர் இருக்கும் இடத்தில் இன்றைக்கு இருக்கும் முதலமைச்சர் சென்றுவிடுவார் என்று பயம் -  அதிமுக பொதுக்குழுவில் ஈபிஎஸ் பேச்சு

மந்திரிகள் எல்லாம் சிறை செல்வார்கள்

ADMK Meeting: ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் நமது இயக்கத்தை பற்றி குறை சொல்வார். அண்மையில் ஒரு அமைச்சருக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை கிடைத்துள்ளது. சட்டமன்றத்தில் முன் வரிசையில் அமர்ந்துள்ள மந்திரிகள் எல்லாம் சிறை செல்வார்கள். அவர்கள் எல்லாம் நீதிமன்றத்தில் எப்போது தீர்ப்பு வரும் என எதிர்நோக்கி கொண்டு இருக்கிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் பல பேர் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் இருப்பார்கள் - அதிமுக பொதுக்குழுவில் ஈபிஎஸ் பேச்சு

தேர்தல் கூட்டணி குறித்த தீர்மானம் இல்லை

ADMK General Body Meeting: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள 23 தீர்மானங்களில் பாஜக பற்றியோ, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தோ எந்த தீர்மானமும் இடம்பெற வில்லை.

தூத்துக்குடி வந்தடைந்தாா் நிர்மலா சீதாராமன்

Thoothukudi Flood: தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி எம்.பி., கனிமொழி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிடோர் பங்கேற்றுள்ளனர்.

நல்லகண்ணுக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

Nallakannu: 98-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர், தோழர் நல்லகண்ணு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்; ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியை நம் மண்ணில் இருந்து அகற்றப் போராடிய ஐயா நல்லகண்ணு நமக்கெல்லாம் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்து என்றும் வழிநடத்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தொிவித்துள்ளாா்.

அதிமுக பொதுக்குழுவில் 23 தீா்மானங்கள் நிறைவேற்றம்

AIADMK General Council Meet: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எதிர் வரும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும் என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம், மக்களவையில் பாதுகாப்பு குறைப்பாட்டால் நடந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது

CM Relief Fund: கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரண நிதி வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது. பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

AIADMK: சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

டேவிட் வார்னர் அபாரம்!

David Warner: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறினார் டேவிட் வார்னர்.

2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

Delhi: டெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவி வரும் நிலையில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.26) சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,160-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.5895-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லடாக்கில் லேசான நிலஅதிர்வு

Earthquake: லடாக்கின் லேவில் இன்று அதிகாலை 4.33 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி இருக்கிறது.

டிசம்பர் 30ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Weather Update: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் டிசம்பர் 30ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வலுவான வடகிழக்கு காற்றின் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில், இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆரூத்ரா தரிசன விழா தேரோட்டம் தொடங்கியது!

Chidambaram: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆரூத்ரா தரிசன விழா தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா்.

19-வது ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று!

19 Years Of Tsunami: டிசம்பர் 26, 2004 நள்ளிரவு 12.58 மணிக்கு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் சுனாமி அலை ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டில் 10,000க்கும் மேற்பட்டோரும், உலகளவில் 2 லட்சத்திற்கு மேலானோரும் உயிரிழந்தனா். அவர்களை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் இந்நாள் சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இன்று அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம்

AIADMK: அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் காலை 10:35 மணிக்கு இக்கூட்டங்கள் தொடங்க உள்ளன. இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி பல்வேறு முடிவுகளும், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இரட்டைத் தலைமை நீதிமன்ற உத்தரவுகளின் மூலமாக முடிவுக்கு வந்த நிலையில், இன்றைய பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி