தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: நாடு முழுவதும் 334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Tamil Live News Updates: நாடு முழுவதும் 334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

HT Tamil Desk HT Tamil

Dec 25, 2023, 06:46 PM IST

google News
Tamil Live News Updates: இன்றைய (25.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Tamil Live News Updates: இன்றைய (25.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Tamil Live News Updates: இன்றைய (25.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

1.63 லட்சம் பேர் மலை ஏறி உள்ளனர்

Sabarimalai : சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை புதன்கிழமை நிறைவடைவதை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 1.63 லட்சம் பேர் மலை ஏறி உள்ளனர்.

மண்டல கால பூஜையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளது இதுவே முதல்முறை.

தற்போது 15 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது.

பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறையினர் கொண்டு வந்துள்ளனர்.

கலைஞர் 100 நிகழ்ச்சி இடமாற்றம்

Kalaigar 100: வரும் ஜனவரி 6ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருந்த கலைஞர் 100 நிகழ்ச்சி கிண்டி ரேஸ்கோஸ் மைதானத்திற்கு மாற்றம்

திராவிட மாடலா? திண்டாட்ட மாடலா? 

Thoothukudi Floods: மரியாதைக்குரிய முதலமைச்சர் அவர்கள் ஒருமணி நேர முதலமைச்சர் ஆகிவிட்டார். இவ்வளவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் மட்டுமே முதலமைச்சர் இருந்தார். இது திராவிட மாடலா? திண்டாட்ட மாடலா? என சொல்லும் அளவுக்கு உள்ளது. தேர்தலில் போட்டியிடவே நான் தூத்துக்குடிக்கு வருவதாக அண்ணன் சேகர்பாபு சொல்கிறார். உங்களுக்கு எப்போதுமே ஓட்டுதானா? அதை தாண்டி எதையும் சிந்திக்கவே மாட்டீர்களா? - தூத்துக்குடியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பேட்டி

பேரிடரே இல்லை என்றவர் பார்வையிட வருகிறார்

Udhayanithi Stalin: பேரிடரே இல்லை என்று சொன்ன மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட வருகிறார். அவர்களே பார்க்கட்டும், பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்கட்டும். அவர் பார்த்து ஆய்வு செய்த பிறகு தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடியில் பேட்டி

மருத்துவ காலி பணியிடங்கள் - சீமான் கண்டனம்

Seeman: ஏழை மக்கள் தடையற்ற மருத்துவ சேவையைப் பெற முடியாத வகையில், காலியாகவுள்ள அரசு மருத்துவர் பணியிடங்களை நிரப்பாமல் தமிழ்நாடு அரசு காலங்கடத்தி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 

தமிழ்நாட்டில் மிதமான மழை எச்சரிக்கை

Rain Alert: இன்று தொடங்கி வரும் டிசம்பர் 27ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

4 பேருக்கு ஜே.என்.1 ரக கொரோனா உறுதி

Corona: கடந்த டிசம்பர் 24ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 4 பேருக்கு ஜே.என்.1 ரக கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்

ED இயக்குனருக்கு சம்மன்!

Madurai Police: லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த விவகாரத்தில், அமலாக்கத்துறை உதவி இயக்குனருக்கு மதுரை தல்லாகுளம் போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை செய்தபோது பணி செய்ய விடாமல் தடுத்ததாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் மதுரை தல்லாகுளம் போலீஸார்.

நாடு முழுவதும் 334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

COrona Virus: கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 128 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலால் கேரள மக்கள் அச்சமடைய வேண்டாம் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தெரிவித்துள்ளாா்.

மிக்ஜாம் புயல் - ரூ.5 லட்சம் நிவாரணம்

Cyclone Michaung: மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்.

தூத்துக்குடியில் அமைச்சா் உதயநிதி

Thoothukudi Flood: தூத்துக்குடி, கீழமங்கலக்குறிச்சி கிராமத்தில் மழை வெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகளில் இடிந்த வீடுகளை பார்வையிட்டு, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

எண்ணெய் கழிவு பாதிப்பு நிவாரணத்தை உயர்த்த இபிஎஸ் கோரிக்கை

EPS: எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளாா்.

வாஜ்பாய் பிறந்தநாள் - பிரதமர் மோடி மரியாதை

Atal Bihari Vajpayee: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினாா். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், அனுராக் தாக்கூர் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினா்.

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

TN Weather Update: அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னை

திருவள்ளூர்

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு

விழுப்புரம்

திருவண்ணாமலை

கடலூர்

மயிலாடுதுறை

நாகை

திருவாரூர்

தஞ்சை

புதுக்கோட்டை

ராமநாதபுரம்

சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி

Chennai: பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக வார் மெமோரியல் பகுதியில் உள்ள அன்னை சத்யா நகரில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினையும், கொசுத் தடுப்பு நடவடிக்கைகளையும் ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மழைநீர் வடிந்த இடங்களில், ஏழை எளிய மக்கள் இருக்கக் கூடிய பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவ முகாம்களில் பயன் அடைந்து உள்ளனர். நற்செய்தி என்னவென்றால் மழைக்குப் பிறகு எந்த தொற்றுநோயும் ஏற்படவில்லை."

கிறிஸ்துமஸ் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

PM Modi: பிரதமர் மோடி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில், "அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இந்த பண்டிகைக் காலம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும், செழிப்பையும் தரட்டும். கிறிஸ்துமஸ் விழாவின் அடையாளங்களான நல்லிணக்கம் மற்றும் மனிதாபிமானத்தை போற்றுவோம். அனைவரும் மகிழ்ச்சி மற்றும் உடல்நலத்துடன் இருக்கும் உலகை நோக்கி பயணிப்போம். இயேசு கிறிஸ்துவின் உன்னத போதனைகளை நாம் நினைவுகூருவோம்" என்று தெரிவித்துள்ளாா்.

கிறிஸ்துமஸ் பண்டிகை - நடிகா் கமல் வாழ்த்து

Actor Kamal Hassan: கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி நடிகா் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

அமைச்சர்கள் ஆய்வு!

Kilambakkam bus Stand: சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைச்சர்கள் சேகர் பாபு, தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனா்.

மிதமான மழைக்கு வாய்ப்பு

TN Rains: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

Lake Level: சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 89.66% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 87.79%, புழல் - 91.03%, பூண்டி - 94.74%, சோழவரம் - 71.88%, கண்ணன்கோட்டை - 100%.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 583 ஆவது நாளாக மாற்றமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி