Tamil Live News Updates : அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை அறிக்கை தாக்கல்
Nov 24, 2023, 06:05 PM IST
Tamil Live News Updates: இன்றைய (24.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
பணத்தை திரும்ப கொடுக்க கெளதம் மேனன் உறுதி
Gautham Vasudev Menon: ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற பணத்தை வரும் புதன்கிழமைக்குள் திரும்ப கொடுப்பதாக இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் உறுதி அளித்தார்.
மருத்துவ அறிக்கை தாக்கல்
Senthil Balaji Medical Report: அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஓமந்தூரார் மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
சீனாவில் பரவும் மர்மக் காய்ச்சல் - இந்தியா விளக்கம்
China: சீனாவில் வேகமாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் இந்தியாவில் குறைந்த அளவிலான பாதிப்பு தான் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்
செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
IAS Officers Transfer: மக்களுடன் முதல்வர் திட்டம், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அதிகாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரி மதுசூதன் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநராக பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சிறப்பு செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
School Holiday காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
School Holiday: செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகளும் நாளை நடைபெறாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு மீது போலீசில் புகார்
Actress Kushboo: ‘சேரி மொழி’ என்ற வார்த்தையை பதிவிட்டது தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக பிரமுகருமான குஷ்பூ மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் கொடுத்துள்ளனர்.
ராகிங் - இரு மாணவர்களிடம் விசாரணை
Coimbatore: கோயம்புத்தூர், சூலூர் ஆர்.வி.எஸ். பொறியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவரை, சீனியர் மாணவர்கள் ரேக்கிங் செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சட்டை, பேண்ட் இன் செய்து வருமாறு கூறி தாக்கியதாக புகாரளிக்கப்பட்டதை தொடர்ந்து நான்காம் ஆண்டு மாணவர்கள் இருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன் ஜாமின் கோரி நடிகர் மன்சூர் அலிகான் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி நடிகர் மன்சூர் அலிகான் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு. உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே அவ்வாறு பேசவில்லை. நடிகை த்ரிஷா சார்பில் எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என மன்சூர் அலிகான் தரப்பு தெரிவித்துள்ளது.
கொடநாடு கொலை வழக்கு
KodanaduCase : கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஜிக் குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் 8 செல்போன்கள், 4 சிம்கார்டுகளில் நடைபெற்ற தகவல் பரிமாற்ற விபரங்களை தருமாறு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் கோரிக்கை.இவ்விபரங்களை அடுத்த வாரம் சிபிசிஐடி போலீசார், கோவை ஆய்வகத்தில் இருந்து பெற அனுமதி அளிக்கப்படும் என தகவல்.
அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்
Ponmudi : அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.நவ.30ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கைலாசநாதர் கோயிலில் சௌந்தர்யா தரிசனம்!
SoundaryaRajinikanth திருவையாறு அடுத்த திங்களூரில் உள்ள கைலாசநாதர் கோயிலில் 27 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகத்தில், நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா குடும்பத்தோடு பங்கேற்று தரிசனம் செய்தனர்.
நிர்மலா சீதாராமன் பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுகிறார் - முதல்வர்!
CM Stalin : ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோருக்கு உன்மையில் பக்தி என ஒன்று இருந்தால், கோயில்கள் பாதுகாப்பில் அரசின் நடவடிக்கைகளுக்காக அவர் திமுகவை பாராட்ட வேண்டும். அவர்களுக்கு பக்தி இல்லை. நிர்மலா சீதாராமன் பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுகிறார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வி.ஏ.ஓ ஆரோக்கிய பாக்யராஜ் பணியிடை நீக்கம்!
விழுப்புரத்தில் இருளர் பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாவட்ட எஸ்.பி.க்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வி.ஏ.ஓ ஆரோக்கிய பாக்யராஜ் பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் கோட்டாட்சியர் உத்தரவு.
த்ரிஷாவிடம் மன்னிப்பு கோரி நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை
MansoorAliKhan : சர்ச்சை பேச்சு தொடர்பாக நடிகை த்ரிஷாவிடம் மன்னிப்பு கோரி நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன் என தெரிவித்துள்ளார்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு -அடிக்கல் நாட்டினார் அமைச்சர் பொன்முடி!
Villupuram : விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் - கப்பூர் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 86.25 கோடி மதிப்பில் புதிய அணைக்கட்டு கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் பொன்முடி. இந்த அணைக்கட்டு மூலம் 26 ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதுடன், 13,100 ஏக்கர் பாசன வசதி பெறும். 10 ஆண்டு கோரிக்கை நிறைவேறியதில் விவசாயிகள் மகிழ்ச்சி.
விஜய் சேதுபதியின் மகன் நாயகனாக அறிமுகம்!
SuryaVijaySethupathi : விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி 'Phoenix (வீழான்)' படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
தண்ணீரில் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு!
Covai : கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் குட்டையில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் கோவனூர் மலை அருகே உள்ள குட்டையில் குளிக்கும் போது ஆழமான பகுதியில் சிக்கியதால் உயிரிழப்பு. சிறுவனின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
'விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம்' - நெல்லை ஆட்சியர்!
Nellai : நெல்லையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி கனமழை!
KanyaKumari : கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது
கேரளாவில் கனமழை எச்சரிக்கை!
SabarimalaiTemple : கேரளாவில் மலை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை தொடர்வதால் பம்பை மற்றும் சன்னிதானம் என 2 பிரிவுகளாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருவாரூரில் இன்று உள்ளூர் விடுமுறை
Thiruvarur : திருவாரூர் முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவின் சந்தனக்கூடு ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றனர். கந்தூரி விழாவை ஒட்டி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
30 பேர் உயிரிழப்பு!
Israel : காஸாவில் பள்ளி மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தியதில் 30 பேர் உயிரிழந்தனர்.
10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!
Rain Update : தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நாய்க்கு ரேபிஸ் நோய்த்தொற்று உறுதி
DogBite : சென்னை ராயபுரத்தில் 27 பேரை கடித்து வைத்த நாய்க்கு ரேபிஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆட்டோவில் கொண்டு வரப்பட்ட 1 கோடி பறிமுதல்
Cennai : சென்னை வால் டாக்ஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஆட்டோவில் கொண்டு வரப்பட்ட 1 கோடி பறிமுதல். உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து வரப்பட்டுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த நபர் உள்பட மூவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை
குன்னூர், கோத்தகிரி தாலுக்காகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் 552ஆவது நாளாக அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை இன்று (நவ.24) லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்