Tamil Live News Updates: உத்தரகாண்ட் சுரங்க விபத்து - 41 பேரும் பத்திரமாக உள்ளதாக தகவல்
Nov 20, 2023, 06:46 PM IST
Tamil Live News Updates: இன்றைய (20.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தம் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது - அண்ணாமலை
Aavin: தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சனம் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் அனைவரும் உயிருடன் உள்ளதாக தகவல்!
Accident: உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக இருப்பதாக தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு ஆணைய இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி 8வது நாளாக தொடர்ந்து நடக்கிறது
ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது - அன்புமணி ராமதாஸ்
Aavin:தமிழ்நாட்டில் 4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை உறை பால் விற்பனையை வரும் 25-ஆம் நாளுடன் நிறுத்தவும், அதற்கு மாறாக 3.5% கொழுப்பு சத்து கொண்ட ஆவின் டிலைட் என்ற பாலை அறிமுகம் செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் ஆவின் நிறுவனத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்
கலைஞர் 100 விழாவில் பங்கேற்க இந்தியாவின் முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு
Kalaingar: தமிழ்த்திரையுலகம் கலைஞர் 100 விழா என்கிற பெயரில், கலைஞர் பிறந்த நூறாண்டுகளைக் கொண்டாடவுள்ளது. இவ்விழாவில் பங்கேற்க பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சன், மலையாளத்தின் முன்னணி நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், தெலுங்கின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவானது வரும் டிசம்பர் 24ஆம் தேதி, சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை
TN Rains: சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையின் அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மெரினா கடற்கரை, ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் மழைப் பெய்து வருகிறது.
வரும் நவம்பர் 29ல் சென்னை மாமன்றக் கூட்டம்
Chennai Corporation: சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் வரும் நவம்பர் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல்!
TN Governor RN Ravi: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தவிர எஞ்சிய அரசு பதவி நியமன கோப்புகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளித்துள்ளார்.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான கோப்புகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் சார்பில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
மசோதாக்களை திருப்பி அனுப்பிய விவகாரம்: ஆளுநரை வசைபாடிய உச்ச நீதிமன்றம்
TN Governor:“2 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏன்?” - உச்ச நீதிமன்றம்
அதிமுகவினரின் ஊழல் வழக்கு - விசாரிக்க ஆளுநர் ஒப்புதல்
AIADMK: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
தள்ளிப்போகும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன்
Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தொடர்பான வழக்கை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமைக்கு (நவ.28) உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை விடுத்த நிலையில், செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
TN Rain Update: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
ஓரிரு நாளில் வீடு திரும்புவார்
Vijayakanth Health: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என அக்கட்சித் தலைமை தெரிவித்துள்ளது
நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
ADMK: நாளை மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
குழந்தை விற்பனை - 4 பேர் கைது
Crime: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பச்சிளம் குழந்தையை விற்பனை செய்த புகாரில் 4 பேர் கைது
ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
RN Ravi: நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
கேரள ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ்
Kerala Governor: மசோதாவுக்கு ஒப்புதல் தராததால் கேரள மாநில அரசு தொடர்ந்த வழக்கில் கேரள ஆளுநரின் செயலாளர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் மனைவிக்கு சிறை உறுதி
ADMK: வருமானத்திற்கு அதிகமாக 38 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லமாளுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை உறுதி
தங்கம் விலை உயர்வு
Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 45, 640 ரூபாய்க்கு விற்பனை
விஜயகாந்தின் உடல் நிலை எப்படி உள்ளது?
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தகவல்
திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
Nellai: நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள திருமலை நம்பி கோவில் மலைப் பகுதியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், கோவிலுக்கு செல்வதற்கும், குளிப்பதற்கும் களக்காடு முண்டன் துறை புலிகள் காப்பக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
ஒரு சீட்டு கூட பாஜக ஜெயிக்காது - எஸ்.வி.சேகர்
BJP: 2024 தேர்தலில் மூன்றாவது முறையாக முழு பெரும்பான்மையுடன் மோடி பிரதமர் ஆவார். ஆனால் அதற்கு தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பங்கு பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். தமிழ்நாட்டில் ஒரு சீட்டு கூட பாஜக ஜெயிக்காது.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணை
SenthilBalaji: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மீதான மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
9 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
Rain Alert: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மற்றும் மின்னல் உடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்