தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: தீபாவளி மது விற்பனை 467 கோடி!
Tamil Live News Updates: இன்றைய (13.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Tamil Live News Updates: இன்றைய (13.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Tamil Live News Updates: தீபாவளி மது விற்பனை 467 கோடி!

Nov 14, 2023, 07:14 AM IST

Tamil Live News Updates: இன்றைய (13.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Nov 13, 2023, 06:53 PM IST

வேட்டைக்கு சென்றவர் குண்டு பாய்ந்து பலி!

 

திருவண்ணாமலை, செங்கம் அருகே மான் வேட்டைக்கு சென்றவர் குண்டு பாய்ந்து உயிரிழப்பு

 

Nov 13, 2023, 06:01 PM IST

வண்டலூர் பூங்காவில் எவ்வளவு பார்வையாளர்கள் வந்திருக்கிறார்கள் தெரியுமா? 

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 20,000 பார்வையாளர்கள் வருகை தந்து இருக்கிறார்கள்.

 

Nov 13, 2023, 05:38 PM IST

சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள்!

தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். சென்னை நோக்கி அதிக வாகனங்கள் படையெடுத்து வருவதால், போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.  

 

Nov 13, 2023, 05:16 PM IST

கர்நாடகாவில் ஜெயிலர், லியோ ஆகிய திரைப்படங்களின் வசூல் எவ்வளவு? 

Nov 13, 2023, 04:58 PM IST

எலி உலவிய கேண்டீனை மூட உத்தரவு

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் எலி உண்ட உணவு பண்டங்களை விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில், கேண்டீனை முதல்வர் மூட உத்தரவு

 

Nov 13, 2023, 04:39 PM IST

டைகர் 3 படம் வெளியிட்ட திரையரங்கில் வெடி வெடித்த ரசிகர்கள்!

Nov 13, 2023, 04:27 PM IST

234 தொகுதிகளிலும் நூலகம்!

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் தளபதி மக்கள் இயக்கம் சார்பில் நூலகம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

Nov 13, 2023, 03:59 PM IST

டைகர் 3 பட வெளியிடல் - 2 பேரை கைது செய்த காவல் துறை

Tamil Live News Updates: சல்மான் கான் நடித்து வெளியான டைகர் 3 பட திரையிடலின்போது, சல்மானின் எண்டிரியின்போது திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த விவகாரத்தில் 2 பேரை மகாராஷ்டிர காவல் துறை கைதுசெய்துள்ளது.

Nov 13, 2023, 03:46 PM IST

சென்னையில் அதிகளவு ஒலி மாசுபாடு

சென்னையில் தீபாவளி பண்டிகையின்போது காற்று மாசு ஏற்பட்டதைப் போலவே, அதிகளவு ஒலி மாசுபாடும் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவாக, அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 83.6 dB(A) அளவு பதிவாகியுள்ளது. மேலும்,  பகல் நேரங்களில் 65.0 dB(A), இரவு நேரங்களில் 55.0 dB(A) அளவு நிர்ணயிக்கப்பட்டது.

Nov 13, 2023, 03:30 PM IST

ஜெயம் ரவி நடிப்பில் புதிய படத்தின் டீஸர் வெளியீடு

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக இருக்கும் `SIREN' திரைப்படத்தின் டீசர் வெளியானது

Nov 13, 2023, 03:16 PM IST

சென்னை மாநகரில் கடந்தாண்டை விட குறைந்த காற்று மாசு

தீபாவளிப் பண்டிகையின்போது சென்னையில் காற்றின் தரம் மிகவும் மோசமான அளவுக்குச் சென்றதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியநிலையில், இது கடந்தாண்டை விட குறைவு எனத் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு காற்று மாசுபாட்டின் எண் 768ஆக இருந்த நிலையில், இந்தாண்டு காற்று மாசுபாட்டின் எண் குறைவாகப் பதிவாகியுள்ளது. 

Nov 13, 2023, 02:50 PM IST

பட்டாசு விதிமீறல் வழக்குகள்

தீபாவளி பண்டிகையின்போது, தமிழ்நாடு முழுவதும் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 2,095 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Nov 13, 2023, 02:45 PM IST

காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்துக் கொலை 

காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். திருப்பத்தூரில் காதல் விவகாரத்தில் 19 வயது இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nov 13, 2023, 02:24 PM IST

சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் இருவர் பலி

Tamil Live News Updates: சென்னை: அண்ணா நகரில் சாலையோரம் நின்றிருந்தவர்கள் உட்பட 6 பேர் மீது கார் மோதிய விபத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சந்தோஷ், நாகசுந்தரம் ஆகிய இருவர் உயிரிழந்தனர்

Nov 13, 2023, 02:09 PM IST

சிவகங்கையில் செக்யூரிட்டி குழந்தைக்கு சிகிச்சை அளித்தாரா? மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கம்

Tamil Live News Updates: சிவகங்கையில், குழந்தைக்கு மருத்துவமனையின் செக்யூரிட்டி சிகிச்சை அளித்ததாக தகவல் பரவிய நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அதனை மறுத்துள்ளது. 

வெடி வெடித்து காயம் ஏற்பட்ட குழந்தைக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செக்யூரிட்டி சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோ பரவியது. இந்நிலையில் மருத்துவர் சிகிச்சை அளிக்கும் சிசிடிவி காட்சியை வெளியிட்டு மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், செக்யூரிட்டி அருகே நின்றிருந்தார் எனவும்; குழந்தைக்கு சிகிச்சை அளிக்கவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Nov 13, 2023, 01:53 PM IST

அமெரிக்காவுக்கு கல்விக்காக செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Tamil Live News Updates: 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக நடப்பு கல்வியாண்டில் அமெரிக்காவிற்குப் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், கல்விக்காக அமெரிக்காவுக்குச் செல்லும் வெளிநாட்டினரின் பட்டியலில் 2,90,000 மாணவர்களுடன் சீனா முதல் இடத்திலும்; 2,69,000 மாணவர்களுடன் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. குறிப்பாக டெக்னாலாஜி, காமர்ஸ் தொடர்பான படிப்புகளைப் படிக்கவே மாணவர்கள் அதிகம் செல்கின்றனர்.

Nov 13, 2023, 01:40 PM IST

சென்னையிலுள்ள காலி ரோட்டில் கார் பந்தயம் விட்டு விபத்து - மூதாட்டி மருத்துவமனையில் அனுமதி

சென்னை அசோக் பில்லர் அருகே அதிவேகமாக வந்த கார் மோதி மூதாட்டி படுகாயம் அடைந்துள்ளார். மேலும், விபத்து ஏற்படுத்திய நபர் சாலை காலியாக இருந்ததால் மற்றொருவருடன் சேர்ந்து கார் பந்தயத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கார் பந்தயத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். அதேபோல், காயமடைந்த மூதாட்டி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

Nov 13, 2023, 01:23 PM IST

மழை எச்சரிக்கை உள்ள மாவட்டக்கள்

Rain: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்றைய தினம் காஞ்சிபுரம், செங்கல்பட்டும் விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Nov 13, 2023, 12:39 PM IST

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை 

Rain: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மிக கனமழையும், 9 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Nov 13, 2023, 12:09 PM IST

தேர்தல் தோல்வி உறுதி - மோடி

Modi: சத்தீஸ்கரின் முதல்கட்ட தேர்தல் முடிவுக்கு பிறகு காங்கிரஸ் தோல்வி உறுதி ஆகிவிட்டது - பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை

Nov 13, 2023, 11:50 AM IST

தீபாவளி அன்று மது விற்பனை விவரம்

Diwali: தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நவம்பர் 12ஆம் தேதி அன்று திருச்சி மண்டலத்தில் 55.60 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் 52.98 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் 51.97 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் 46.62 கோடிக்கும், கோவை மண்டலத்த்கில் 39.61 கோடிக்கும் மதுவிற்பனை நடந்துள்ளது.

Nov 13, 2023, 11:19 AM IST

மது விற்பனை 467 கோடி 

TASMAC: தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி 467 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

Nov 13, 2023, 10:56 AM IST

தங்கம் விலை குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து ரூபாய் 44,720க்கும், கிராம் ரூபாய் 5,590க்கும் விற்பனை!

வெள்ளி கிராமுக்கு ரூபாய் 75.40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது

Nov 13, 2023, 10:16 AM IST

கோவையில் 66 வழக்குகள் பதிவு

Covai: விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக கோவையில்

66 வழக்குகள் பதிவு

Nov 13, 2023, 09:42 AM IST

நேற்று வரை 100 டன் கழிவுகள் அகற்றம்

Diwali : சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்துநாள்தோறும் 6850 மெட்ரிக் டன் கழிவுகள் எடுக்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் பட்டாசு 275 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகளை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நேற்று இரவு வரை சென்னையில் 100 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

Nov 13, 2023, 09:20 AM IST

குப்பையை அகற்ற 19600 பேர்

Chennai:சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை பட்டாசு கழிவுகளை அகற்றும் பணிகளில் 19 ஆயிரத்து 600 பேர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் பட்டாசுக்கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளில் கடந்த 11ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இந்த பணிகள் 13ஆம் தேதியான இன்று இன்று இரவுடன் முடிவடையும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Nov 13, 2023, 08:58 AM IST

மதுரையில் 199 வழக்குகள் பதிவு

Diwali: விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக மதுரையில் 199 வழக்குகள் பதிவு

Nov 13, 2023, 09:19 AM IST

விதிகளை மீறி வெடி - சென்னையில் 581 பேர் மீது வழக்கு

Diwali: தீபாவளி நாளான நேற்று உச்சநீதிமன்றம் விதித்த நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக சென்னையில் மட்டும் 581 வழக்குகள் பதிவு

Nov 13, 2023, 08:11 AM IST

பழனியில் கந்த சஷ்டி தொடக்கம் 

பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா காப்புக்கட்டுதலுடன் இன்று தொடங்கியது.

7 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் 6ம்நாளான 18ம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

7ம் நாளில் 19ம் தேதி அன்று மலைக்கோவிலில் சண்முகர் வள்ளி - தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Nov 13, 2023, 07:51 AM IST

ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பு

Diwali 2023: தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்த 1223 பேருந்துகளுக்கு 18,76,700 ரூபாய் அபராதம் விதிப்பு

Nov 13, 2023, 07:36 AM IST

சென்னையில் காற்றுமாசு 

தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் சென்னையில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியது. காற்றின் தரக்குறியீடு 250ஆக உள்ளது.  

    பகிர்வு கட்டுரை