தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: தீபாவளிக்கு இதுவரை 12 லட்சம் பேர் ரயிலில் பயணம்
Tamil Live News Updates: இன்றைய (11.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Tamil Live News Updates: இன்றைய (11.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Tamil Live News Updates: தீபாவளிக்கு இதுவரை 12 லட்சம் பேர் ரயிலில் பயணம்

Nov 12, 2023, 06:38 AM IST

Tamil Live News Updates: இன்றைய (11.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Nov 11, 2023, 06:33 PM IST

அமர்பிரசாத் ரெட்டி ஆதங்கம்!

பாஜக கொடிக்கம்பம் தகராறு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்சியின் மூத்த நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். வெளியே வந்த அவர் சிறையில் பயங்கரமான கொடுமைகளை சந்தித்ததாகவும், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும் பேசினார். 

Nov 11, 2023, 06:04 PM IST

‘L2E - எம்புரான்’ போஸ்டர்!

மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் 'L2E - எம்புரான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

 

 

Nov 11, 2023, 05:45 PM IST

லியோ வசூல்!

லியோ திரைப்படம்  நேற்றைய தினம் 596.7 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது

Nov 11, 2023, 05:44 PM IST

முதல்வர் அறிவுறுத்தல்!

பயணிகளை பத்திரமாக அழைத்துச் செல்ல வேண்டும்

பேருந்து ஓட்டுநர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

Nov 11, 2023, 05:14 PM IST

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம்

தமிழ்நாட்டில்  அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டம், கிருஷ்ணகிரியில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Nov 11, 2023, 04:48 PM IST

இனி உயிர் உள்ளவரை பாஜக தான் - அமர்பிரசாத் ரெட்டி

22 நாள் ஜெயில் வாழ்க்கை பழகிடுச்சு. 2026இல் பாஜக ஆட்சி அமையும். இனி உயிர் உள்ளவரை பாஜகவில் இருப்பேன் என்று நிபந்தனை ஜாமினில் வெளிவந்திருக்கும் அமர்பிரசாத் ரெட்டி கூறியுள்ளார்

Nov 11, 2023, 04:22 PM IST

ஐந்து நாள்கள் தொடர்ச்சியாக சமையல் செய்து சாதனை

அயர்லாந்து நாட்டை சேர்ந்த சமையல் கலை நிபுணர் ஆலன் ஃபிஷர் 119 மணி நேரம் 57 நிமிடங்கள், 5 நாள்கள் வரை இடைவிடாது சமையல் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்

Nov 11, 2023, 03:52 PM IST

நடிகர் ஜெயராம் மகனும் இளம் நடிகருமான காளிதாஸ்  ஜெயராமுக்கு நிச்சயதார்த்தம்

cலையாள நடிகர்  ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் - தாரிணி காளிங்கராயர் ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது

Nov 11, 2023, 03:42 PM IST

பேட்டரியை விழுங்கிய குழந்தையை  காப்பாற்றிய மருத்துவர்கள்

மும்பையில் பட்டன் அளவிலான 3 பேட்டரிகளை விழுங்கிய 22 மாத குழந்தையின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

எண்டோஸ்கோபி மூலம் ஒரு பேட்டரி, இயற்கை உபாதை வழியில் 2 பேட்டரிகள் அகற்றப்பட்டுள்ளது

Nov 11, 2023, 03:02 PM IST

நான் நடிகனே இல்லை  - மன்சூர் அலிகான் பேச்சு

நான் நடிகனே இல்லை. உலகத்தில் இரண்டு நடிகர்கள்தான். ஒன்று அண்ணாமலை, மற்றொன்று மோடி என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்

Nov 11, 2023, 02:50 PM IST

சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் பயணம்

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இதுவரை 12 லட்சம் பேர் ரயில் மூலம் பயணம் செய்துள்ளனர்

Nov 11, 2023, 02:35 PM IST

வங்கதேசம் 306 ரன்கள் குவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 11, 2023, 02:23 PM IST

எம்ஜிஆருடன் நடித்த பழம்பெரும் தெலுங்கு நடிகர் சந்திரமோகன் மறைவு

எம்ஜிஆர் நடித்த நாளை நமதே படத்தில் அவரது தம்பியாக நடித்து புகழ்பெற்ற நடிகர் சந்திரமோகன் மாரடைப்பால் காலமானார்

Nov 11, 2023, 02:04 PM IST

8 மாவட்டங்களில் கனமழை

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Nov 11, 2023, 01:35 PM IST

இங்கிலாந்து பேட்டிங்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற  இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Nov 11, 2023, 01:15 PM IST

வடகிழக்கு பருவமழை இயல்பைவிட குறைவு

Rain: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 13% குறைவாக பெய்து உள்ளது. அக். 1 முதல் இன்றுவரை 254 மி.மீ மழை பெய்ய வேண்டிய நிலையில் 220.0 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Nov 11, 2023, 12:36 PM IST

பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ராமதாஸ் கோரிக்கை!

PMK : "50,000 மாணவர்களுக்கு உடனடியாக தற்காலிக சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்"  என திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Nov 11, 2023, 11:58 AM IST

வாணியம்பாடியில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 உயர்வு

Accident: வாணியம்பாடியில் 2 பேருந்துகள் மோதிய கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக் 6 ஆக உயர்ந்துள்ளது.

Nov 11, 2023, 11:35 AM IST

கருக்கா வினோத் மீது குண்டாஸ் பாய்நதது

RN Ravi: ஆளுநர் மாளிகை முன் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது

Nov 11, 2023, 10:46 AM IST

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

Silver: சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று (நவ.11) 1ரூபாய் குறைந்து ரூ.76க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.1000 குறைந்து ரூ.76000-க்கு விற்பனையாகிறது.

Nov 11, 2023, 10:46 AM IST

இன்றைய தங்கம் விலை நிலவரம்

Gold: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.11) சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44, 800க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45 குறைந்து ரூ.5,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Nov 11, 2023, 10:16 AM IST

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் குடும்பத்தினர் மீது தாக்குதல்

KKSSR Ramachandran: சென்னையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் குடும்பத்தினர் மீது திரையரங்கில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் காயம் அடைந்த அமைச்சரின் மகன் மற்றும் பேரன் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வீடு திரும்பினர்.

Nov 11, 2023, 09:51 AM IST

பீக் அவர்ஸ் நேர மின் கட்டணம் குறைப்பு

Tamilnadu: சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் நேர மின் கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மின் பயன்பாட்டை பொறுத்து 15% இருந்து 25% வரை பீக் அவர்ஸ் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Nov 11, 2023, 09:17 AM IST

தீபாவளியை ஒட்டி சுமார் 3 லட்சம் மக்கள் சொந்த ஊர் பயணம்!

Diwali: தீபாவளி பண்டிகையை ஒட்டி 3 லட்சத்து 66 ஆயிரத்து 80 பேர் 2 நாட்களில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் வழக்கமான பேருந்துகளுடன் சேர்த்து இதுவரை 6,656 பேருந்துகள் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் பயணம் செய்ய 2 லட்சத்து 38 ஆயிரத்து 598 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

Nov 11, 2023, 08:55 AM IST

பட்டாசு கடையில் தீ விபத்து

Diwali 2023: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில்  பட்டாசு கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இதில் சுமார் 20 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமாகின. 

Nov 11, 2023, 08:28 AM IST

தமிழகத்தில் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

இன்றைய நிலவரப்படி 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2745 மில்லியன் கன அடியாக உள்ளது.

இதேபோல் 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 627 மில்லியன் கன அடியாக உள்ளது. மேலும் 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 434 மில்லியன் கன அடியாக உள்ளது.

Nov 11, 2023, 08:14 AM IST

யானைக்கல் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு

Madurai: மதுரையில் யானைக்கல் தரைபாலம் அருகே வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Nov 11, 2023, 08:14 AM IST

வாணியம்பாடி அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலி!

Accident: வாணியம்பாடி அருகே அரசு விரைவுப்பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Nov 11, 2023, 08:14 AM IST

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

Chennai: சென்னையில் 539ஆவது நாளாக ஒரே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை இன்று (நவ.11) லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பகிர்வு கட்டுரை