Tamil Live News Updates: ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகள் ரத்து - உயர் நீதிமன்றம்!
Nov 09, 2023, 07:47 PM IST
Tamil Live News Updates: இன்றைய (09.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.4ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர் சிவகாமியின் குடும்பத்துக்கு நிவாரணம்!
சென்னை திருவான்மியூரில் சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் சிவகாமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
என்.எல்.சி. ஊழியர்களின் போனஸ் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வி!
புதுச்சேரி என்.எல்.சி. ஊழியர்களின் போனஸ் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
என்.எல்.சி. ஊழியர்கள் 20% போனஸ் கோரிய நிலையில் 8.33% மட்டுமே வழங்க முடியும் என என்.எல்.சி. தரப்பு வாதம். 3 முறை நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், தீபாவளி அன்று என்.எல்.சி தலைமை அலுவலகம் முன்பு குடும்பத்துடன் போராட்டம் நடத்தப்படுமென தொழிற்சங்கம் அறிவிப்பு.
சென்னையில் பரவலாக மழை!
சென்னை, தாம்பரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், முடிச்சூர், வண்டலூர், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கடந்த 30 நிமிடங்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது.
நெருங்கும் தீபாவளி - தயார் நிலையில் பொது சுகாதாரத்துறை!
தீபாவளி நெருங்கும் நிலையில் அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல. தீக்காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அறுவை சிகிச்சை நிபுணர்கள், உடலுறுப்பு சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தீக்காயங்களுக்கான மருந்துகளையும் போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
'TheVillage' இணையத் தொடர் நவம்பர் 24ல் வெளியீடு!
ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'TheVillage' இணையத் தொடர் நவம்பர் 24ல் வெளியாகிறது.
கரைவேட்டி கட்டும் தகுதியை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார் - ஜெயக்குமார்
கரைவேட்டி கட்டும் தகுதியை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது - அன்புமணி!
அதிர்ஷ்ட விளையாட்டுகள் தடை செல்லும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது எனவும், உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
38 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை!
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இரு வேறு சம்பவங்களின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த 38 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Aavin : ஆவினில் இதுவரை ரூ.67 கோடிக்கு விற்பனை!
தீபாவளியை முன்னிட்டு ஆவினில் இதுவரை ரூ.67 கோடிக்கு விற்பனை நடந்துள்ள்தாகவும், இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கான விற்பனை இலக்கு ரூ. 149 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
பெரியார் சிலை பற்றி பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை - அமைச்சர் பொன்முடி!
பெரியார் சிலை பற்றி பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை விழுப்புரத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இடஒதுக்கீட்டு உயர்வை அறிவித்தார் முதலமைச்சர் நிதிஷ்குமார்!
பீகார் மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீட்டு அளவை 65% ஆக உயர்த்த சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம். உயர்சாதி ஏழைகளுக்கான 10 விழுக்காட்டை சேர்த்தால் மொத்த இடஒதுக்கீடு 75% ஆக அதிகரிக்கும். அண்மையில் நடத்தப்ப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வின் அடிப்படையில் இடஒதுக்கீட்டு உயர்வை அறிவித்தார் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார்.
TTV : மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது - தினகரன்!
தமிழ்நாட்டின் நிதிவளத்தைப் பெருக்க மக்கள் மீது சுமையை ஏற்றாமல் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தினகரன் தெரிவித்துள்ளார் .
தமிழகம் முழுவதும் கண்டன பரப்புரை இயக்கம்
இனவெறி இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்தி வரும் இனப்படுகொலை தாக்குதலைக் கண்டித்து சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன பரப்புரை இயக்கம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத் திருவிழா!
திருவண்ணாமலை வருகின்ற 17்ஆம் தேதி திருகார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், மாட வீதிகளில் அமைந்துள்ள ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் உள்ளிட்ட கோபுரங்களை ராட்சத வாகனம் மூலம் தூய்மைப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Sasikala : சசிகலா இரங்கல்!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜனின் சகோதரர் சத்தியமூர்த்தி தேவர் உடல்நலக்குறைவால் காலமான நிலையில், சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகள் ரத்து - உயர் நீதிமன்றம்!
அதிர்ஷ்டத்துக்கான ஆன் லைன் விளையாட்டுக்களை தடை செய்தது செல்லும். திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆன் லைன் சூதாட்ட தடைச் சட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெண் தூய்மை பணியாளர் பலி!
சென்னை திருவான்மியூரில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண் பணியாளர் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அயோத்தியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம்!
ராம் கதா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலையை வழிபட்ட உ.பி. அமைச்சரவை. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவை கூட்டம் அயோத்தியில் நடைபெற்றது.
ஒற்றை காட்டு யானை வலம் வருவதால் பொதுமக்கள் அச்சம்!
திண்டுக்கல் கொடைக்கானலில் இரவு நேரத்தில் ஊருக்குள் ஒற்றை காட்டு யானை வலம் வருவதால் பொதுமக்கள் அச்சம். விரைவில் யானையை பிடிக்க வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Rain Update : அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Rain Update : அரை மணி நேரமாக பலத்த மழை
சென்னை, திருவொற்றியூர், மாதவரம், எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது.
Dhinakaran : தினகரன் இரங்கல்!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜனின் சகோதரர் சத்தியமூர்த்தி தேவர் மறைவுக்கு தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Japan :'ஜப்பான்' படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகிறது!
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜப்பான்' படத்தின் மேக்கிங் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
38 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுதலை
Srilanka: இலங்கை சிறையில் இருந்து 38 தமிழ்நாடு மீனவர்கள் நிபந்தனை உடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
தங்கம்விலை குறைவு
Gold Rate: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.45 குறைந்து ரூ.5.615-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.76.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆம்னிபஸ் - அன்புமணி கண்டனம்
Omni Bus: தீபஒளி திருநாளையொட்டி, லட்சக்கணக்கான மக்கள் இன்று முதல் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லத் தயாராக இருக்கும் நிலையில், அவர்களின் தேவைகளை பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் பயணக் கட்டணத்தை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தியுள்ளன. சென்னையிலிருந்து நாளை மதுரை செல்வதற்கான கட்டணம் ரூ.3200, நெல்லைக்கான கட்டணம் ரூ.3400, கோவைக்கான கட்டணம் ரூ.3999 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது - அன்புமணி கண்டனம்
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது
வானிலை அப்டேட்
Weather Update: தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 17 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி விலை நிலவரம்
Today Gold Rate: இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,920க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45 குறைந்து ரூ.5,615-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ரூ.76.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.300 குறைந்து ரூ.76,200-க்கு விற்பனையாகிறது.
டிக்கெட் விற்பனை தொடக்கம்
Worldcup Cricket 2023: உலககோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கண்டனம்
PMK: தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மேற்கொண்ட பணிகளுக்காக கிராமப்புற ஏழை மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில், இதுவரை சுமார் ரூ.3000 கோடியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. தீபஒளி உள்ளிட்ட திருநாள்களை கொண்டாட பணம் இல்லாமல் மக்கள் திண்டாடும் நிலையில், நிதி வழங்குவதை மத்திய அரசு தாமதிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும் - டாக்டர் ராமதாஸ்
அருவியில் குளிக்க தடை
Covai: தொடர் மழையால் கோவை குற்றாலம் அருவியில் குளிக்க தடை
ஒற்றை காட்டு யானை தாக்கி உயிரிழப்பு
கோவை: ஆலந்துரை அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற கருப்பன் ( 73) என்ற முதியவரை ஒற்றை காட்டு யானை தாக்கியதில் உயிரிழப்பு
பரிசல் இயக்க தடை
Hokkenekal: தொடர் கனமழை காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனேக்கல்லில் பரிசல் இயக்க தடை
12 செமீ மழை பதிவு
Rain: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 12 செ.மீ மழை பதிவு
பொங்கல் வேட்டிகளை திருடியவர்கள் கைது
மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் குடோனில் வைக்கப்பட்ட ரூபாய்15 லட்சம் மதிப்பிலான பொங்கல் வேட்டிகளை திருடிய 4 பேர் கைது
மகளிர் உரிமை தொகை - வரவு வைக்கும் பணிகள் தொடக்கம்
Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைக்காமல் மேல்முறையீடு செய்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் மேல்முறையீடு செய்யும் பணிகளை அரசு தொடங்கி உள்ளது
3ஆவது நாளாக குளிக்க தடை
Kanniyakumari:கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் மூன்றாவது நாளாக பொதுமக்கள் குளிக்க தடை
திருப்பூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை
School Holiday:கனமழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
தேனியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை
School Holiday: தொடர் கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
நீலகிரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
School Holiday: நீலகிரி மாவட்டத்தில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருவதால் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
3 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு
Scholl Holiday: கனமழை காரணமாக மதுரை, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு