Tamil Live News Updates: ராக்கிங்கில் ஈடுபட்ட பிஎஸ்ஜி மாணவர்கள் சஸ்பெண்ட்
Nov 08, 2023, 07:04 PM IST
Tamil Live News Updates: இன்றைய (08.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு தீபாவளி பரிசு
Diwali 2023: கள்ளக்குறிச்சியில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கி காவல் ஆய்வாளர் ஊக்குவித்துள்ளார்.
ஹெல்மெட் இன்றி பைக் ஓட்டிய விவகாரம்- 173 வழக்குகள் பதிவு
ஹெல்மெட் இன்றி பைக் ஓட்டிய நிலையில் 173 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ரூ.86,500 அபராதம் செலுத்தாததால் வாகனத்தை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கே.சி.பழனிசாமி நீக்கப்பட்டு விட்டார் என இபிஎஸ் தரப்பு விளக்கம்!
அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கட்சியில் இருந்து கே.சி.பழனிசாமி நீக்கப்பட்டுவிட்டார் என இ.பி.எஸ். தரப்பு பதிலளித்துள்ளது.
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு போனஸ்!
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளர்.
தூய்மை பணியாளரின் கால்களைக் கழுவிய நீதிபதி
Judge: பெண் தூய்மை பணியாளரின் கால்களைக் கழுவி, சார்பு நீதிபதி ஸ்ரீராம் மரியாதை செய்தார். முன்னதாக உளுந்தூர்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்
அமர் பிரசார் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் எண்ணம் இல்லை - காவல்துறை விளக்கம்
Amar Prasad Reddy: சிறையில் உள்ள பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை, குண்டர் சட்டத்தில் அடைக்க தற்போது திட்டம் எதுவும் இல்லை என உயர் நீதிமன்றத்தில் தாம்பரம் காவல் ஆணையரகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இடி தாக்கி விவசாயி உயிரிழிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சதுப்பேரி பாளையம் கிராமத்தில் இடி தாக்கி மார்கண்டேயன் (53) என்ற விவசாயி உயிரிழந்தார்.
விவசாய நிலத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது இடி தாக்கியுள்ளது. 15 ஆடுகளும் உயிரிழந்தன.
ராகிங்கில் ஈடுபட்ட பிஎஸ்ஜி மாணவர்கள் சஸ்பெண்ட்
PSG College: மாணவருக்கு சீனியர் மாணவர்கள் மொட்டை அடித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ராக்கிங்கில் ஈடுபட்ட பிஎஸ்ஜி மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
2 மணிநேரம் மட்டுமே பட்டாசுக்கு அனுமதி- பிரேம் ஆனந்த் சின்ஹா
“உச்சநீதிமன்ற உத்தரவின்படி 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். மீறினால் வழக்குப்பதிவு செய்யப்படும்" என தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
Anna University : அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமிக்கு எதிராக, அதிமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் 2020ம் ஆண்டு தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை
Rain: கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை
சேகர்பாபுவுக்கு செல்லூர் ராஜூ பாராட்டு
ADMK :இந்து அறநிலையத்துறை தொடர்ந்து செயல்பட வேண்டும். அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார் - அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
அர்ச்சகர் நியமனங்களுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
HRCE: ஆகம விதிகளை மீறி தமிழ்நாட்டில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை
அர்ச்சகர் நியமனங்களுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
வழக்கு விசாரணையை ஜனவரி 25ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள் அதுவரை தற்போதைய நிலையே தொடரும் எனவும் உத்தரவு
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்கள் அறிவிப்பு
Madurai: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்களாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி, சீனிவாசன், மீனா, செல்லையா, சுப்புலட்சுமி ஆகியோர் நியமனம்
ஓபிஎஸ் மேல்முறையீடு
OPS: அதிமுக பெயர், சின்னம், கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு
சீமானுக்கு அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து
Seeman: நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்களுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நண்பர் சீமான் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்டகாலம் நலவாழ்வு வாழ்ந்து மண்ணுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வாழ்த்துகிறேன்.
நவ.18 - தூத்துக்குடியில் உள்ளூர் விடுமுறை
Tuthukudi:திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் நவம்பர் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தண்ணீர் திறக்க வைகோ கோரிக்கை
Vaiko: உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதியில் போதிய மழை இல்லாததால், அந்தப் பகுதி மக்கள் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
வைகை அணையிலிருந்து திறக்கப்படும் திருமங்கலம் பிரதான கால்வாய் மற்றும் 58 கிராமக் கால்வாய் தண்ணீரால் நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள், 160 குளங்கள், 200க்கும் மேற்பட்ட ஊரணிகள் நிரம்பும். இதன் மூலம் 28 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் தேவையான குடிதண்ணீர் கிடைக்கும்.
தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழையாலும், முல்லைப் பெரியாறு அணை நீராலும் வைகை அணை நிரம்பி உள்ளது.
எனவே, திருமங்கலம், உசிலம்பட்டி பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வைகை அணையிலிருந்து 58 கிராமக் கால்வாய் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாய்களில் தண்ணீரை திறந்துவிடுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
மீண்டும் புறக்கணித்த பொன்முடி
Ponmudi: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார்
என்.ஐ.ஏ சோதனையில் 3 பேர் கைது
NIA Raid: சென்னை புறநகரில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனையில் 3 பேர் கைது - போலி ஆதார் அட்டைகள் பறிமுதல்
நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு
Karnataka: கர்நாடக மாநிலம் பாண்டவபுரா அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாயில் விழுந்ததில் அதில் பயணித்த 5 பேரும் நீரில் மூழ்கி உயிரிழப்பு
சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கால்வாயில் இருந்து 5 பேரின் உடல்கள் மற்றும் காரை, தீயணைப்புத் துறையினர் மீட்டனர்
காரில் திடீர் தீவிபத்து
Eroad: ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு. காரில் இருந்தவர்கள் வெளியே இறங்கிவிட்டதால் நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்ப்பு
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து சேதமானது
என்.ஐ..ஏ சோதனை
NIA: சென்னை புறநகர் பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை. பள்ளிக்கரணை, படப்பை, பெரும்பாக்கம் ஆகிய 3 இடங்களில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது
மொட்டை அடித்து ராகிங்! பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள் கைது!
Covai: கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்த 7 சீனியர் மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னையில் பரவலாக மழை
Chennai: சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் பரவலாக மிதமான மழை
ராயப்பேட்டை, மயிலாப்பூர், காமராஜர் சாலை, கோபாலபுரம், பட்டினப்பாக்கம், அரும்பாக்கம், தேனாம்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது
வைகை அணை நீர்மட்டம் உயர்வு
Vaigai Dam: 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
சென்னையில் சாலை விபத்து
சென்னை மாதவரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி காலி சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லோடு வேன், சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்து.
விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு. விபத்து குறித்து போலீசார் விசாரணை.
பாஜக வேட்பாளர்கள் சிபிஐ - கார்கே
Congress: “பாஜவின் வேட்பாளர்களாகச் செயல்படும் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை!” - மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர்
ஏரிகளில் நீர் இருப்பு விவரம்
Chennai: சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் சராசரியாக 74.48% நீர் இருப்பு உள்ளது.
5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில், தற்போது 8.757 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.
செம்பரம்பாக்கம் - 85.6%
புழல் - 82.48%
பூண்டி - 57.35%
சோழவரம் - 57.91%
கண்ணன்கோட்டை - 87.2%