தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10% போனஸ்
Tamil Live News Updates: இன்றைய (07.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Tamil Live News Updates: இன்றைய (07.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Tamil Live News Updates: கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10% போனஸ்

Nov 07, 2023, 06:53 PM IST

Tamil Live News Updates: இன்றைய (07.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Nov 07, 2023, 06:51 PM IST

”எங்க அண்ணனை பார்த்தாச்சு"

மூன்றாவது நாளாக காஞ்சிபுரத்தில் பாலுசெட்டிசத்திரம், காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வந்த டிடிஎஃப் வாசனை, பார்த்த பள்ளி மாணவர்கள் துள்ளிக்குதித்தனர்.

ஆனால், அவர் தனது பணியை முடித்ததும் காரில் ஏறி பறக்க ஆரம்பித்தார். அப்போது அவரது காரை பார்த்த சில பள்ளி மாணவர்கள், அவரை பார்க்கமுடியாத வேதனையை வெளிப்படுத்தினர். பின் அந்த காருக்குப் பின் ஓடினர். சிலர் அவரை ஜன்னல் வழியாகப் பார்த்து மகிழ்ந்ததாகத் தெரிவித்தனர்.

Nov 07, 2023, 06:38 PM IST

’தீரவிசாரிப்பதே மெய்’

பிக்பாஸ் சீசன் 7ல் இருந்து ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி தீர விசாரிப்பதே மெய் என ஹேஷ்டேக் போட்டு, கமல்ஹாசனுக்கு எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தற்போது அது ட்ரெண்டிங்கில் உள்ளது.

Nov 07, 2023, 06:23 PM IST

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10% போனஸ் - அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10% போனஸ் அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

அதன்படி, போனஸ் திட்டத்தின் கீழ் வராத தலைமை சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3000 வழங்கப்படும் எனவும், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.2400 கருணைத் தொகையாக வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 44,270 பணியாளர்களுக்கு ரூ.28 கோடியே ஒரு லட்ச ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. 

Nov 07, 2023, 06:10 PM IST

வங்கதேச அணிக்கு புதிய கேப்டனை அறிவித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்!

காயம் காரணமாக வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் உலகக்கோப்பைத் தொடரில் இருந்து விலகினார். அதன்பின், எஞ்சிய ஒரு போட்டிக்கு கேப்டனாக வங்கதேச வீரர் நஜ்முல் ஷாண்டோவை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Nov 07, 2023, 06:02 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு 292 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்த ஆப்கன் அணி

உலககோப்பை தொடர்: மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு 292 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது ஆப்கானிஸ்தான் அணி.

Nov 07, 2023, 06:05 PM IST

மனுஸ்மிருதியும் இந்திய இறையாண்மையும் ஒன்றா? - அமைச்சர் சேகர்பாபு வாதம்

இந்து மதத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்டு, கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதால் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். ஆனால், ஒருபோதும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சனாதனத்தை ஏற்க முடியாது. மனு ஸ்ருதிமியை அடிப்படையாக கொண்டுள்ள சனாதன தர்மத்திற்கு எதிராக பேசியதில் எந்த தவறும் இல்லை. மனு ஸ்ருதிமிக்கு எதிராக பேசியது எப்படி நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக அமையும்?

- சனாதன எதிர்ப்பு மாநாடு குறித்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரப்பு வாதம்

Nov 07, 2023, 05:41 PM IST

கமல்ஹாசன் பிறந்தநாளைக் கொண்டாடிய மக்கள் நீதி மய்யத்தினர்

சென்னை நீலாங்கரையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்குப் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அதில் கமல்ஹாசன் பங்கெடுத்துள்ளார்.  

Nov 07, 2023, 05:28 PM IST

சாதிவாரி கணக்கெடுப்பின் ஆய்வு விவரங்களை வெளியிட்ட பீகார் முதலமைச்சர்

சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வின் முழு விவரங்களை சட்டப்பேரவையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வெளியிட்டார். பீகார் மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீட்டு அளவை 65% ஆக உயர்த்த முதலமைச்சர் நிதிஷ்குமார் பரிந்துரை செய்துள்ளார்.

Nov 07, 2023, 05:19 PM IST

சென்னை - நெல்லைக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில்!

தீபாவளியையொட்டி, சென்னை - நெல்லைக்கு இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கம் செய்யப்பட்டது. குறிப்பாக, வரும் 9ஆம் தேதி காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லைக்கும், பிற்பகல் 3 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கும் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. 

Nov 07, 2023, 05:08 PM IST

நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு பிடிவாரண்ட்

நெல்லை: மனுதாரருக்கு அபராதத் தொகையை வழங்க பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த தவறிய மாநகராட்சி ஆணையர், மண்டல உதவி ஆணையர் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அழகு ரத்தினம், புதிய குடிநீர் இணைப்புக்கு இரு முறை பணம் செலுத்திய விவகாரத்தில் 2020ஆம் ஆண்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். கூடுதலாக செலுத்திய பணம் ரூ.6500-ஐயும், மன உளைச்சலுக்கு ரூ.15,000ஐயும் மற்றும் வழக்கு செலவுகளுக்கு ரூ.3000 ஆகிய தொகையை மாநகராட்சி செலுத்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

எனினும், தொகை கிடைக்காததால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாட, நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது

Nov 07, 2023, 04:56 PM IST

பிரியாணி கடை ஓனர் கொலை வழக்கு: நடவடிக்கை எடுக்காத எஸ்.ஐ. சஸ்பெண்ட்

கடலூர்: நெய்வேலியில் பிரியாணி கடை உரிமையாளர் கொலை வழக்கில் சரியான நடவடிக்கை எடுக்காத தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் லதாவை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உத்தரவு பிறப்பித்துள்ளார். 

பிரியாணி கடை உரிமையாளர் கொல்லப்படுவார் என தகவல் கிடைத்த பிறகும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் மீது புகார் தெரிவித்துள்ளார். 

Nov 07, 2023, 04:43 PM IST

ராகவா லாரன்ஸை அறிமுகப்படுத்திய திரை இயக்குநர் காலமானார்

நடிகர் ராகவா லாரன்ஸை அற்புதம் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் அற்புதன் காலமானார். அவருக்கு வயது 52. அற்புதன் மனதோடு மழைக்காலம், செப்பவே சிறுகாளி ஆகியப் படங்களையும் இயக்கியுள்ளார்.

Nov 07, 2023, 04:34 PM IST

"தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை பார்க்கும்போது வருத்தமளிக்கிறது" - நாக சைதன்யா

"தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை பார்க்கும்போது வருத்தமளிக்கிறது" - நாக சைதன்யா, முன்னதாக AI Deep Fake மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனா போல சித்தரிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், நடிகர் நாக சைதன்யா கருத்து!

Nov 07, 2023, 04:19 PM IST

ஜவான் படத்தைக் கொண்டாடும் நைஜீரியர்கள்

நெட்பிளிக்ஸில் வெளியான ‘ஜவான்’ படத்தை ஆப்ரிக்காவின் நைஜீரிய நாட்டைச் சார்ந்த மக்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், படத்தின் கதை நைஜீரியாவில் நடப்பதைப் போன்று இருப்பதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Nov 07, 2023, 04:11 PM IST

மீண்டும் இணைய சேவையை வழங்கலாம்

மணிப்பூரில் வன்முறைக்கு பிறகு அமைதி திரும்பிய பகுதிகளில் மொபைல் இணைய சேவை தடையை திரும்பப் பெற வேண்டும் என மாநில அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு

Nov 07, 2023, 03:49 PM IST

ஆயுள் தண்டனைக் கைதிகள் இரண்டு பேர் சட்டம் படிக்க கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு கைதிகள், சட்டம் படிப்பதற்குண்டான நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் ஆன்லைன் வழியே கல்வி கற்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஒரு கைதிக்கு அடிப்படை மனித உரிமைகளைப்பெறவும், கண்ணியமான முறையில் வாழவும் உரிமை உண்டு எனவும், அந்த கல்வி அவர்களை நேர்வழிப்படுத்தும் எனவும் விடுதலையானால் வாழ்க்கையைத் தொடர உதவும் எனவும் நீதிமன்றம் கருத்துகூறியுள்ளது.

Nov 07, 2023, 03:37 PM IST

கேரளாவில் இனி குத்தகைக்கு பேருந்துகளை எடுத்து இயக்க முடிவு

தனியாரிடம் இருந்து சொகுசு பேருந்துகளை குத்தகைக்கு எடுத்து, வெளிமாநில போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்த கேரள மாநில போக்குவரத்துக் கழகம் (KSRTC) முடிவுசெய்துள்ளது. 

Nov 07, 2023, 03:27 PM IST

கள்ளக்குறிச்சி எம்.பி. நேரில் ஆஜராக உத்தரவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான கவுதம சிகாமணி நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Nov 07, 2023, 03:15 PM IST

உலகக்கோப்பைத் தொடர்: வங்கதேச கேப்டன் விலகல்

Tamil Live News Updates: நடப்பு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இருந்து வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் விலகினார். மேலும் அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட வங்கதேச அணிக்கு, இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Nov 07, 2023, 03:05 PM IST

 மார்ஃபிங் செய்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை

Tamil Live News Updates: ஒருவரை தவறாக சித்தரித்து பதிவிட்டால், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. நடிகை ராஷ்மிகாவை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில் மத்திய அரசு இந்த எச்சரிக்கையினை விட்டுள்ளது. 

Nov 07, 2023, 02:54 PM IST

சொகுசு பேருந்துகளை குத்தகைக்கு எடுக்கும் கேரள அரசு

தனியாரிடம் இருந்து சொகுசு பேருந்துகளை குத்தகைக்கு எடுத்து, வெளிமாநில போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்த கேரள மாநில போக்குவரத்துக் கழகம் (KSRTC) முடிவு செய்துள்ளது. 

Nov 07, 2023, 02:45 PM IST

கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அண்ணாமலை

Tamil Live News Updates: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அதில், நீண்ட ஆயுளுடன் கலைப் பணி மற்றும் மக்கள் பணியை தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்

Nov 07, 2023, 02:29 PM IST

தமிழ்நாடு முழுவதும் 7200 பட்டாசு கடைகளுக்கு அனுமதி 

Tamil Live News Updates: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 7,200 பட்டாசு கடைகளுக்கு தீயணைப்புத்துறை அனுமதி வழங்கியுள்ளது. சென்னையில் மட்டும் 890 கடைகளுக்கு தீயணைப்புத் துறை அனுமதி கொடுத்துள்ளது. மேலும், விதிகளை மீறி பட்டாசு கடைகள் செயல்பட்டால் அனுமதி ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் 42 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன என்றும், கூடுதலாக பிற மாவட்டங்களில் இருந்து 26 தீயணைப்பு வாகனங்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Nov 07, 2023, 02:16 PM IST

விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் - ஈபிஎஸ்

Tamil Live News Updates: விசைத்தறி, ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று, மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Nov 07, 2023, 02:04 PM IST

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் பாதையில் காட்டாற்று வெள்ளம் 

Tamil Live News Updates: ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதோஷம், அமாவாசை நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என வனத்துறை அறிவித்துள்ளது.

முன்னதாக பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு வரும் 10ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியிருந்த நிலையில், சூழலைப் பொறுத்து முடிவினை பரிசீலனை செய்யலாம் எனத் தெரிகிறது.

Nov 07, 2023, 01:51 PM IST

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து நுரையுடன் வெளியேறிய நீர்

Tamil Live News Updates: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்க, நீர் கடும் துர்நாற்றத்துடன் வெளியேறி வருகிறது. ஆலைகளிலிருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகளால் அணை நீரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Nov 07, 2023, 01:38 PM IST

முதலமைச்சர் நலமுடன் உள்ளார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Tamil Live News Updates: உடல்நிலை பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது நலமுடன் உள்ளார். ஃப்ளு வகை காய்ச்சலின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மருத்துவ ஓய்வில் உள்ளார். விரைவில் முழுமையாக குணமடைவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடத்தில் தகவல் தெரிவித்தார்.

Nov 07, 2023, 01:25 PM IST

புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை

Tamil Live News Updates: புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படயிருப்பதாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

Nov 07, 2023, 01:15 PM IST

குற்றாலத்தில் ஆர்ப்பரிக்கும் நீர்

Tamil Live News Updates: குற்றாலத்தில் ஆர்ப்பரிக்கும் நீர் வரத்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. 

Nov 07, 2023, 12:57 PM IST

அதிமுக கொடியை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை 

OPS: அதிமுக, கொடி  பெயரை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

Nov 07, 2023, 12:55 PM IST

பட்டாசு உற்பத்தியாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிப்பு

Diwali: பட்டாசு வெடிப்பது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். காற்று, ஒலி மாசுவை தடுக்க உரிய நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து.

மேம்படுத்தப்பட்ட ஃபார்முலாவை கொண்ட பேரியம், சரவெடிகளை தயாரிக்க அனுமதி கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிப்பு

Nov 07, 2023, 12:43 PM IST

இதுவரை 10 ஆயிரம் பேர் உயிரிழப்பு

வடக்கு காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை 10,022 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 4104 பேர் குழந்தைகள் என்று பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Nov 07, 2023, 12:31 PM IST

தீபாவளி பண்டிகை - சிறப்பு ரயில்கள் இயக்கம்

Railway: தீபாவளி பண்டிகையை ஒட்டி தாம்பரம் - நாகர்கோவில் - மங்களூரு இடையே சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கம்.

நவ.10ம் தேதி இரவு 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை நாகர்கோவில் சென்றடையும்.

நவ.11ம் தேதி மாலை 2.45க்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.15க்கு மங்களூரு சென்றடையும்.

நவ.12ம் தேதி காலை 10 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.10க்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் நவ.10, 17, 24ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

- தென்னக ரயில்வே.

Nov 07, 2023, 12:17 PM IST

தாமரை சின்னம் - உயர்நீதிமன்றம் கேள்வி

Madras High Court: தாமரை சின்னத்தை பாஜகவுக்கு ஒதுக்க எந்த சட்டம் தடை செய்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது

Nov 07, 2023, 11:49 AM IST

குறைவாக பதிவான வடகிழக்கு பருவமழை

NorthEast Monsoon: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலைவரை இயல்பை விட 23% குறைவாக பெய்து உள்ளது. அக்டோபர் 1 முதல் இன்று வரை 227.7 மி.மீ. மழை பதிவாக வேண்டிய நிலையில் 176.0 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது

Nov 07, 2023, 11:37 AM IST

OPR-க்கு எதிரான வழக்கு ஜனவரியில் விசாரணை

OPR: 2019ம் ஆண்டு தேனி நாடாளுமன்ற தேர்தலில் ஒ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்றும், அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரியும், அடுத்த தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் தாக்கல் செய்த மனுவை இறுதி விசாரணைக்காக பட்டியலிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தங்கதமிழ்செல்வன் தரப்பு முறையீடு. அடுத்தாண்டு ஜனவரி மாதம் இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவிப்பு

Nov 07, 2023, 11:36 AM IST

விபத்தில்லா தீபாவளி - போலீஸ் விழிப்புணர்வு

Diwali: விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமகக்ளிடம் கோயம்பேடு தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  கோயம்பேட்டில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு செய்தனர்

Nov 07, 2023, 11:15 AM IST

தங்கம் விலை குறைவு

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,360க்கு விற்பனையாகிறது.

22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,670க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசு குறைந்து ரூ.77.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Nov 07, 2023, 10:56 AM IST

டிசம்பரில் குரூப் - 2 தேர்வு முடிவுகள் 

TNPSC: தற்போது மதிப்பீட்டுப் பணிகள் மிக விரைவாக மந்தனத் தன்மையுடன் செவ்வனே நடைபெற்று வருகின்றன. 80 விழுக்காட்டிற்கும் மேல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு சுமார் 6000 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் மாண்புமிகு முதலமைச்சரால் வழங்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

Nov 07, 2023, 10:34 AM IST

கமல்ஹாசனுக்கு அன்புமணி வாழ்த்து 

Kamal Hasan: மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், தமிழ்த் திரையுலகின் சாதனைச் சிகரமான கமல்ஹாசன் இன்று அவரது 69-ஆம் பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் தமிழக மக்களுக்கு அவர் நீண்ட காலம் பணியாற்ற எனது வாழ்த்துகள் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 

Nov 07, 2023, 10:14 AM IST

ராமநாதபுரத்தில் ஹைட்ரொ கார்பன் - வைகோ எதிர்ப்பு

Vaiko: தமிழ்நாடு அரசு, ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிப்பதுடன், இராமநாதபுரம் மாவட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒன்றிய அரசு மேற்கொள்ள முயற்சிப்பதை அனுமதிக்கக் கூடாது - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 

Nov 07, 2023, 09:57 AM IST

ஏமாற்றம் அளிக்கிறது - மருத்துவர் ராமதாஸ்

ஹரியானா மாநிலத்தில் நடப்பு அரவைப் பருவத்தில் கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,860 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கரும்புக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச விலை இதுவாகும். ஹரியானா அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் தமிழகத்தில் நடப்புப் பருவத்தில் கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை கூட இன்னும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது - மருத்துவர் ராமதாஸ் 

Nov 07, 2023, 09:33 AM IST

தேர்தல் நடைபெறும் சத்தீஸ்கரில் குண்டு வெடிப்பு! - சிஆர்பிஎஃப் வீரருக்கு சிகிச்சை

Chhattisgarh Elections 2023: தேர்தல் நடைபெறும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊள்ள சுக்மா மாவட்டத்தில் குண்டு வெடித்ததில் சிஆஅர்பிஎஃப் வீரர் காயம் அடைந்தார்

Nov 07, 2023, 09:24 AM IST

மேல்முறையீடு செய்தவர்களுக்கு குறுஞ்செய்தி

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை பெற மேல் முறையீடு செய்தவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

Nov 07, 2023, 08:58 AM IST

கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

Kamalhasan: நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Nov 07, 2023, 08:55 AM IST

5வது நாளாக தொடரும் வருமானவரி சோதனை 

IT Raid: அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் 5ஆவது நாளக வருமானவரித்துறை சோதனை தொடர்கிறது

Nov 07, 2023, 08:34 AM IST

தூத்துக்குடி சாலை விபத்து - முதலமைச்சர் நிதி உதவி அறிவிப்பு

Road accident: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், சேர்ந்தமங்கலம் கிராமம் கிறிஸ்துவின் பாசறை சபை அருகில் கடந்த 31.10.2023 அன்று இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிய விபத்தில்  புன்னக்காயல் கிராமத்தைச் சேர்ந்த திரு.லசிங்டன் (வயது 35) த/பெ.ஜேம்ஸ், மற்றும் திரு.அலெக்ஸ்சாண்டர் (வயது 34) த/பெ.திரு.தொம்பை ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்கள். மேலும் திரு.வசந்தன் ப்ரீஸ் (வயது 33) த/பெ. மிக்கேல் என்பவர் ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

 

மேலும், மூளைச்சாவு அடைந்த திரு.வசந்தன் ப்ரீஸ் என்பவரின் உடல் உறுப்புகள் குடும்ப உறுப்பினர்களால் தானம் செய்ய முன்வந்ததன் அடிப்படையில்  6.11.2023 அன்று உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டுள்ளது, தமிழ்நாடு அரசு அவரது தியாகத்தை போற்றுகிறது.

 

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரு. இராஜன் என்பவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Nov 07, 2023, 08:58 AM IST

மிசோரமில் யார் யார் போட்டி

Mizoram Assembly Election 2023: ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF), முக்கிய எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) மற்றும் காங்கிரஸ் ஆகியவை தலா 40 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 23 இடங்களிலும், முதல்முறை போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) 4 இடங்களிலும் போட்டியிடுகின்றன. 27 வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர் .

Nov 07, 2023, 08:07 AM IST

மிசோரம் தேர்தல் - வாக்காளிக்காமல் சென்ற முதலமைச்சர்

Mizoram Assembly Election 2023: தேர்தல் நடைபெறும் மிசோரம் மாநிலத்தில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம் இயங்காததால் வாக்களிக்க சென்ற அம்மாநில முதலமைச்சர் சோரம் தங்கா வாக்களிக்காமல் திரும்பினார். பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டி இருப்பதால், பின்னர் வாக்களிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்

Nov 07, 2023, 08:06 AM IST

மிசோரமில் 8.50 லட்சம் வாக்காளர்கள்

Mizoram Assembly Election 2023: மிசோரம் மாநிலத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையில் சற்று அதிகம். மொத்தமுள்ள 8,50,288 வாக்காளர்களில் 4,13,062 பேர் ஆண்கள், 4,39,026 பேர் பெண்கள். வாக்காளர்கள் யாரும் தங்களை மூன்றாம் பாலினத்தவராக அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. 18 முதல் 19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்கள் 50,751 பேர் உள்ளனர்

Nov 07, 2023, 07:57 AM IST

மிசோரம் தேர்தல் நிலவரம் 

Mizoram Assembly Election 2023: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் டிசம்பர் 3 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

Nov 07, 2023, 07:56 AM IST

நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் 

Chhattisgarh Elections 2023: பஸ்தார் கோட்டத்தைச் சேர்ந்த 12 தொகுதிகள் உட்பட 20 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த 20 தொகுதிகள் நக்சல்பாதிக்கப்பட்ட பஸ்தார் பிரிவில் உள்ள ஏழு மாவட்டங்களிலும், ராஜ்நந்த்கான், மோஹ்லா-மன்பூர்-அம்பாகர் சௌகி, கபீர்தாம், மற்றும் கைராகர்-சூய்காடன்-கண்டாய் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

Nov 07, 2023, 07:55 AM IST

முதற்கட்டமாக 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு

Chhattisgarh Assembly election 2023: 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் முதற்கட்டமாக 20 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது

Nov 07, 2023, 07:56 AM IST

காங்கிரஸ் பாஜக இடையே கடும் போட்டி

Chhattisgarh Elections 2023: 90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், 2 லட்சத்து 63ஆயிரத்து 829 முதல்முறை வாக்காளர்கள் உட்பட மொத்தம் 5 கோடியே 61 லட்சத்து 36 ஆயிரத்து 229 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆளும் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Nov 07, 2023, 07:54 AM IST

சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

Assembly Election 2023:: மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

    பகிர்வு கட்டுரை