தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: சென்னை புத்தகக் காட்சி தொடங்கியது

Tamil Live News Updates: சென்னை புத்தகக் காட்சி தொடங்கியது

HT Tamil Desk HT Tamil

Jan 03, 2024, 05:59 PM IST

“Tamil Live News Updates: இன்றைய (03.01.2024) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்”
“Tamil Live News Updates: இன்றைய (03.01.2024) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்”

“Tamil Live News Updates: இன்றைய (03.01.2024) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்”

பிளாஸ்டிக் கவர்களின் உணவுப் பொருட்களை விற்க தடையில்லை

MHC: பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்த வழக்கில் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனா்.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate : அடேங்கப்பா.. 54 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு 560 ரூபாய் உயர்வு.. இதோ இன்றைய நிலவரம்!

மக்களே.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்காம்!

Savukku Shankar: ‘சவுக்கு சங்கரின் சர்ச்சை பேச்சு!’ மன்னிப்பு கேட்டது ரெட்பிக்ஸ் நிறுவனம்!

Weather Update: ’கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை!’ தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் மழை! வானிலை மையம் எச்சரிக்கை!

முதல்வா் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

MK Stalin: உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் மரணமடைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கு.க.செல்வம் உடலுக்கு, முதல்வா் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை புத்தகக் காட்சி தொடங்கியது

Chennai Book Fair2024: 47ஆவது சென்னை புத்தகக் காட்சியை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நந்தனம் YMCA உடற்கல்வியியல் கல்லூரியில் புத்தகக் காட்சி வரும் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு!

Ponmudy Corruption case: சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு செய்துள்ளாா்.

இபிஎஸ் ராஜினாமா செய்யும் வரை யுத்தம் தொடரும் - ஓபிஎஸ்

OPSvsEPS: எடப்பாடி பழனிசாமி தாமாகவே முன்வந்து அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் வரை, நாங்கள் நடத்தும் தொண்டர்கள் உரிமை மீட்பு யுத்தம் தொடரும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீர்செல்வம் தொிவித்துள்ளாா்.

2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Weather Update: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழகத்தில் நாளை நீலகிரி, தேனியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாஜகவில் இணைந்த காவல் உதவி ஆய்வாளா்கள் 2 போ் சஸ்பெண்ட்

TN Police: பாஜகவில் இணைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சீருடையில் இருந்தவாறு பாஜகவில் இணைந்ததால் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகியோா் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ராஜேந்திரன், கார்த்திகேயன் நாகை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில் தஞ்சை சரக டிஐஜி உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

"இம்மாதம் முதலே உரிமைத் தொகை வரவு வைக்கப்படும்"

Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமை தொகை கோரி மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களின் வங்கி கணக்கில் இம்மாதமே உரிமை தொகை வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தொிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும்

Lokesh Kanagaraj : இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் காலமானார்

RIP Ku.ka.Selvam: திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 

2016ஆம் ஆண்டு தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார். 

பின்னர் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தர். 

 

ஐ.டி. விங் நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை!

 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு 3 மாதங்களே உள்ள நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். 

ஹிண்டன்பர்க் விவகாரம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Adani-Hindenburg case: அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை தேவை இல்லை - ஹிண்டன்பர்க் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு.

காளைகளுக்கான அறிவிப்பு வெளியீடு 

Jallikattu: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கான அறிவிப்பு வெளியீடு.

ஜல்லிக்கட்டு காளைகள் அடையாளப்படுத்தும் விதமாக கால்நடைத்துறை தகுதிச்சான்று வழங்க விண்ணப்பம் வெளியீடு.

மாடு திமில் தெரியும் வகையிலும் மாட்டின் உரிமையாளர் உடன் புகைப்படத்துடன் விண்ணப்பத்தினை பதிவு செய்ய அறிவுரை.

போட்டிகளில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி, கலப்பின மாடுகள் பங்கேற்க அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

Today Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.03) ஒரு சவரன் 40 ரூபாய் குறைந்து ரூ.47,320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5 ரூபாய் குறைந்து ரூ.5915-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

Today Silver Rate: சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.80,000-க்கு விற்பனையாகிறது.

வேலுநாச்சியாரை போற்றி மகிழ்வோம்

Freedom Fighter Velunachiyar: இந்திய விடுதலைப்போர் வரலாற்றில் ஆங்கிலேயரை வீழ்த்தி சிவகங்கை கோட்டையை கைப்பற்றிய ஒரே பெண் அரசியான வேலுநாச்சியாரின் பிறந்த தினம் இன்று.

இளம் வயதில் மட்டுமல்ல தான் இறக்கும் வயதிலும் பயம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறியாத அளவிற்கு யாருக்கும் அஞ்சாத துணிவும் தைரியமும் நிறைந்த வீரத் தமிழச்சி வேலுநாச்சியாரை போற்றி மகிழ்வோம் - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட்

பிரதமரை சந்திக்கும் உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். வரும் ஜனவரி 19ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெறும் கேலோ இந்தியா போட்டிகளின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமரை சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளார். 

3000 ரூபாய் தர வேண்டும்

Pongal Parisu 2024: பொங்கல் பரிசுத் தொகைக்கு ரொக்கமாக 3000 ரூபாய் தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை

வந்தே பாரத் ரயில் இயக்கம்

Vande Bharath: சென்னை- மைசூர் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்

இன்று முதல் வரும் 31 ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5.50 மணிக்கு மைசூருக்கு புறப்படும்

காலை 5.50 மணிக்கு புறப்படும் ரயில் பகல் 12.20 மணிக்கு மைசூர் சென்றடையும்

கட்டபொம்மன் வீரத்தை போற்றி கொண்டாடுவோம்

Veerapandiya Kattabomban Birthday: ஆங்கிலேயர்களுக்கு எதிராக பொருளாதார தடையை விதித்து இந்திய சுதந்திர போராட்டத்திற்கு அச்சாணியாக திகழ்ந்த பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்ததினம் இன்று.

ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்ட மறுத்து துணிச்சலுடன் எதிர்த்து போராடியதோடு, தன்னை தூக்கிலிட்ட போதிலும் மாவீரனாக மடிந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தை எந்நாளும் போற்றி கொண்டாடுவோம் - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட்

2வது நாளாக வருமானவரி சோதனை!

IT Raid: ஈரோடு பெரியார் நகரில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் 2வது நாளாக வருமான வரி சதிகாரிகள் சோதனை. 

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் 2வது நாளாக சோதனை நடக்கிறது.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பைசாபாத் நகரில் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

4.4 மற்றும் 4.8  என்ற ரிக்டர் அளவில் நில அதிர்வு இருமுறை உணரப்பட்டதால் வீதிகளில் மக்கள் தஞ்சம்

சென்னை புத்தக கண்காட்சி

Chennai BookFair 2024: சென்னை புத்தக கண்காட்சியை இன்று மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

மழை வெள்ள நிவாரணம்

Flood: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண நிதி பெற இன்று கடைசிநாள் என நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

வீட்டு வாசலுக்கு வரும் அரசு

Karnataka: ’வீட்டு வாசலுக்கு வரும் அரசு’ என்ற பெயரில் புதிய திட்டத்தை கர்நாடக மாநில அரசு இன்று தொடங்குகிறது.

அதானி-ஹிண்டன்பர்க் வழக்கில் இன்று தீர்ப்பு

Adani : அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

இன்று 2வது டெஸ்ட் போட்டி

IND vs SA 2nd Test Match: இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட்போட்டி இன்று தொடக்கம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி