தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: கருக்கா வினோத்திற்கு நவ.15 வரை நீதிமன்ற காவல்
Tamil Live News Updates: இன்றைய (01.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Tamil Live News Updates: இன்றைய (01.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Tamil Live News Updates: கருக்கா வினோத்திற்கு நவ.15 வரை நீதிமன்ற காவல்

Nov 01, 2023, 05:44 PM IST

Tamil Live News Updates: இன்றைய (01.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Nov 01, 2023, 06:00 PM IST

அதிமுகவில் சூர்யா சிவா?

Suriya Siva: பாஜகவில் இருந்து விலகிய சூர்யா சிவா, வரும் 5ம் தேதி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவில் அவர் இணைந்த சில மாதங்களிலேயே அக்கட்சியின் மகளிர் நிர்வாகி உடன் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியானதால் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Nov 01, 2023, 05:44 PM IST

புதிய மைல்கல்லை எட்டிய ஹீரோ

Hero: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் 5.74 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்று புதிய மைல்கல்லை எட்டியது

Nov 01, 2023, 05:23 PM IST

கருக்கா வினோத்துக்கு காவல் நீட்டிப்பு

Karukka Vinoth: ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான கருக்கா வினோத் போலீஸ் காவல் முடிந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வரும் 15ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Nov 01, 2023, 05:01 PM IST

‘நம்ம சாலை செயலியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Namma Salai App:'விபத்தில்லா தமிழ்நாடு' என்ற முழக்கத்தை முன் வைத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘நம்ம சாலை’ செயலியின் பயன்பாட்டை சென்னையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Nov 01, 2023, 04:48 PM IST

ஆராய்ச்சி ஊக்கத்தொகை அறிவிப்பு

Research Scholarship: தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்த மாநில அளவில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Nov 01, 2023, 04:44 PM IST

பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை

Bengaluru: பெங்களூரு சிங்கசந்திரா பகுதியில் கடந்த 4 நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை 28 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

Nov 01, 2023, 04:23 PM IST

போக்குவரத்துத் துறை உத்தரவு

TN Bus: மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில், பயணிகளிடம் டிக்கெட் வாங்க சில்லறை கேட்டு நிர்பந்திக்க கூடாது என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. பயணச்சீட்டிற்கு பயணிகள் அளிக்கும் பணத்தை பெற்று, உரிய மீதம் தொகையை வழங்க நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல்

Nov 01, 2023, 04:18 PM IST

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் - கோர்ட் உத்தரவு

RSS Rally: ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் அனுமதி தராததால் காவல்துறைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. உள்துறை செயலாளர், டி.ஜி.பி. நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Nov 01, 2023, 03:34 PM IST

குவியும் ரசிகர்கள்!

Leo: லியோ படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொள்ள சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தை ரசிகர்கள் சூழ்ந்துள்ளனர்.

Nov 01, 2023, 03:24 PM IST

மராத்தா இடஒதுக்கீட்டிற்கு ஆதரவு

Maratha Quota: மகாராஷ்டிரத்தில் மராத்தா இட ஒதுக்கீட்டிற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

Nov 01, 2023, 03:04 PM IST

13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

TN Rain Update: கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கோவை, தஞ்சாவூர் ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Nov 01, 2023, 03:01 PM IST

நவ.15-க்குள் பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

Crop Insurance: சம்பா பருவத்தில் விவசாயிகள் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும் என்று வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Nov 01, 2023, 02:44 PM IST

அஃப்ரிடி முதலிடத்திற்கு முன்னேற்றம்

ICC Rankings:ODI போட்டிகளில் பவுலர்களுக்கான ஐசிசி தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடி முதலிடத்திற்கு முன்னேற்றம்.

Nov 01, 2023, 02:29 PM IST

தண்ணீர் திறப்பு நிறுத்தம்

Karnataka: கர்நாடகா மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 7வது நாளாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Nov 01, 2023, 02:13 PM IST

பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன் - பொன்முடி

Minister Ponmudy: மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கும் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் தராததால் புறக்கணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Nov 01, 2023, 01:58 PM IST

பஞ்சாப் ஆளுநர் ஒப்புதல்

Punjab: பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா, 2023 மற்றும் இந்திய முத்திரை (திருத்தம்) மசோதா, 2023 ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

Nov 01, 2023, 01:50 PM IST

நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு

NZ vs SA: உலகக்கோப்பை கிரிக்கெட்டின் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

Nov 01, 2023, 01:40 PM IST

பாஜகவினர் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்

தமிழகம் முழுவதும் கட்சி கொடியேற்ற முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Nov 01, 2023, 01:24 PM IST

தீபாவளி ரேஸில் 'ரெய்டு'

Raid: நடிகர் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெய்டு’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

Nov 01, 2023, 01:18 PM IST

முன்னாள் எம்பி பாஜகவில் இருந்து விலகல்

Telangana Election 2023: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான விவேகானந்த் கட்சியில் இருந்து விலகுவதாக தெலங்கானா மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளார். விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Nov 01, 2023, 01:48 PM IST

மதுரை ஆதீனம் தொடர்பாக நித்தியானந்தா வழக்கு

Nithyananda: மதுரை ஆதீனமாக 93ஆவது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை ஏற்றுக் கொண்டதற்கு எதிராக கைலாசா பீடாதிபதி நித்தியானந்தா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவில், மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரி நாதர் மறைவுக்கு பிறகு மதுரை ஆதீனமாக நானே பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதுள்ள மதுரை ஆதீனத்தை ஏற்க முடியாது; நான் தான் மதுரை ஆதீனம் என்றும் கூறி உள்ளார்.

Nov 01, 2023, 12:45 PM IST

29 லட்சம் பறிமுதல்

viruthunagar: விருதுநகர் ரயில் நிலையத்தில் ஹவுரா ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 29 லட்சம் ரூபாய் பறிமுதல்

Nov 01, 2023, 12:33 PM IST

ஓசூரில் ரோஸ் ராய்ஸ் தொழிற்சலை

Hosur: ஓசூரில் ஹிந்துஸ்தான் ஏரோனாக்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரோஸ் ராய்ஸ் நிறுவனம் ஏரோ எஞ்சின் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல்

Nov 01, 2023, 12:12 PM IST

முதலமைச்சர் ஆலோசனை

Vanniyar Reservation: 10.5 சதவீத வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்

Nov 01, 2023, 11:51 AM IST

முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான் வழக்கில் புதிய உத்தரவு

EX Minister Kamaraj: முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான 350 கோடி முறைகேடு புகாரில் எடுத்த நடவடிக்கை தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Nov 01, 2023, 11:35 AM IST

டி.டி.எப் வாசனுக்கு ஜாமீன்

TTF VASAN: காஞ்சிபுரம் அருகே நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில், கைது செய்யப்பட்ட யூடியூபர் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். மூன்று வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை.

Nov 01, 2023, 11:30 AM IST

நேரடி நெல் கொள்முதலை உடனடியாகத் தொடங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பது அரசின் கவனத்திற்கு வந்திருக்கிறதா? என்பது தெரியவில்லை. எது எப்படியிருந்தாலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதலை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் காவிரி பாசன மாவட்ட உழவர்கள் தீப ஒளித் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவதை உறுதி செய்ய வேண்டும்-அன்புமணி ராமதாஸ்

Nov 01, 2023, 11:15 AM IST

அடைந்ததை விட இழந்தது அதிகம் - மருத்துவர் ராமதாஸ்

PMK: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அதை நாம் சகோதர உணர்வுடன் ஏற்றுக் கொண்டோம்; நமது நிலப்பரப்பை சகோதர மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்தோம். நம்மிடமிருந்து நிலத்தை பெற்றுக் கொண்ட திராவிட மாநிலங்கள் எதுவுமே நமக்கு நீரைக் கூட தர மறுக்கின்றன. அதனால் தான் கூறுகிறேன்... மொழிவாரி மாநிலங்களால் நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம். நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க இந்த நாளில் உறுதியேற்போம்! - மருத்துவர் ராமதாஸ்

Nov 01, 2023, 11:04 AM IST

85.50 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம்

Metro: கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 85.50 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.  முந்தைய செப்டம்பர் மாதத்தை விட 1.13 லட்சம் பயணிகள் அதிகரிப்பு. அதிகபட்சமாக அக்டோபர் 20ம் தேதி மட்டும் 3.60 லட்சம் பேர் பயணித்துள்ளனர் - சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை

Nov 01, 2023, 10:45 AM IST

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்!

Diwali 2023: வரும் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுக்கள் வெடிக்கலாம். நீதிமன்ற உத்தரவுப்படி பசுமைப் பட்டாசுக்களை மட்டுமே வெடிக்க வேண்டும்- தமிழ்நாடு அரசு

Nov 01, 2023, 10:43 AM IST

இதுவரை 31 பத்திரிக்கையாளர்கள் கொலை

Israel war: இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இதுவரை 31 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 9 பேர் காணவில்லை என தகவல்

Nov 01, 2023, 10:30 AM IST

கொடியெற்ற முயன்ற பாஜகவினர் கைது!

BJP: வையில் உள்ள மாசக்காளிபாளையத்தில் அனுமதி இன்றி பாஜக கொடிகளை ஏற்ற முயன்ற பாஜக மாவட்ட தலைவர் உத்தமராமசாமி, கனகசபாபதி உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்

Nov 01, 2023, 10:20 AM IST

புதுச்சேரி விடுதலை தினம் - கொடியேற்றினார் ரங்கசாமி

புதுச்சேரி விடுதலை தினவிழாவையொட்டி புதுச்சேரி கடற்கரையில் தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் என்.ரங்கசாமி

Nov 01, 2023, 10:04 AM IST

டிசம்பரில் தமிழகம் வரும் பிரதமர் மோடி

Modi: குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் மாதம் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல்

Nov 01, 2023, 09:54 AM IST

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று (நவ.01) ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ1.20 காசுகள் குறைந்து ரூ.77க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.77,000-க்கு விற்பனையாகிறது.

Nov 01, 2023, 09:42 AM IST

தங்கம் விலை குறைவு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.01) சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.45,488க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.29 குறைந்து ரூ.5686-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Nov 01, 2023, 09:25 AM IST

11 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

 Rain: சென்னை உட்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Nov 01, 2023, 09:07 AM IST

ஏரிகளின் நீர் இருப்பு அதிகரிப்பு

Chennai: சென்னைக்குக் குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன் கோட்டை ஆகிய 5 ஏரிகளில் கடந்தாண்டு இதே நாளில் சராசரி நீர் இருப்பு 57% மட்டுமே இருந்த நிலையில், இந்தாண்டு 73.95%-ஆக அதிகரிப்பு. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில், கடந்தாண்டு இதே நாளில் 6.702 டிஎம்சி நீர் மட்டுமே இருந்த நிலையில், இந்தாண்டு 8.694 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது!

Nov 01, 2023, 08:44 AM IST

தேஜஸ் தோல்வி! தேச விரோதிகள் சதி

Tejas: “தேஜஸ் படம் தோல்வியடைய வேண்டும் என தேச விரோதிகள் சதி செய்கிறார்கள்” என நடிகை கங்கனா ரனாவத் புகார்.  ரூ.60 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம், ரூ.4 கோடி டிக்கெட் வருவாய் கூட எட்டாத நிலையில் குற்றச்சாட்டு

Nov 01, 2023, 08:31 AM IST

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

Mettur Dam: சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.12 அடியில் இருந்து 52.43 அடியாக உயர்வு; நீர் இருப்பு 19.37 டிஎம்சி ஆக உள்ளது

Nov 01, 2023, 08:21 AM IST

ஹமாஸ் தளபதி மரணம்

Israel war: காசாவில் உள்ள ஜபாலியா முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி இப்ரஹிம் பியரி மரணம்

Nov 01, 2023, 08:02 AM IST

12 திமுகவினர் கைது

DMK: கல்குவாரி ஏலம் எடுக்கும் விவகாரத்தில் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மோதல் விவகாரத்தில் 12 திமுகவினர் கைது

Nov 01, 2023, 07:57 AM IST

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Rajastan: ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள 5 வேட்பாளர்கள் கொண்ட 5ம் கட்ட பட்டியல் வெளியீடு

Nov 01, 2023, 07:34 AM IST

529வது நாளாக பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை

Petrol price today: 529ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இன்றி நீடிக்கிறது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63, ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனை

Nov 01, 2023, 07:34 AM IST

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு 

LPG Gas: வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 101 ரூபாய் உயர்ந்து 1,999 ரூபாய்க்கு விற்பனை

    பகிர்வு கட்டுரை