Tamil Live News Updates: ரஷ்யாவிலும் நிலநடுக்கம்
Jan 01, 2024, 08:45 PM IST
Tamil Live News Updates: இன்றைய (01.01.2024) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
மகாகவிதை நூலை வெளியிட்டார் முதலமைச்சர்
Maha Kavithai: கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகாகவிதை’ நூல் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘மகாகவிதை’ நூலின் முதல் பிரதியை வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார்.
கொடைக்கானலில் கடும் பனி மூட்டம்
Kodaikanal : கொடைக்கானலில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
ரஷ்யாவிலும் நிலநடுக்கம்
Earthquake: ஜப்பானை தொடர்ந்து ரஷ்யாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
டேவிட் வார்னர் ஓய்வு
Cricket: சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அறிவிப்பு.
சிட்னியில் வரும் 3ம் தேதி தொடங்கவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் வார்னர்.
கோயில்கள் சூறையாடப்படும்
Ponmanika vel: 26 ஆயிரம் கோயில்களில் அர்ச்சகர்கள் இல்லாத நிலையை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். அர்ச்சகர்கள் வெளியே சென்றுவிட்டால் கோயில்கள் சூறையாடப்படும். கோயிலுக்கே வராத செயல் அலுவலர்களுக்கு ஆயிரக்கணக்கில் சம்பளம் தரப்படுகிறது. ஆனால் அர்ச்சகர்களுக்கு வெறும் 4200 ரூபாய் சம்பளம் தரப்படுகிறது - முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பேட்டி
ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
Tsunami warning: வடகொரியா மற்றும் ரஷ்யாவின் கிழக்குப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் இந்த சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கி வரும் நிலையில் தற்போது வடகொரியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை
Japan: ஜப்பானில் அடுத்தடுத்து பலமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுப்பு
திருநெல்வேலி, கன்னியாகுமரியில் கனமழை எச்சரிக்கை!
Rain Alert: இன்றைய தினம் (02.01.2024), தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
Weather Update: நேற்று (31-12-2023) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (01-01-2024) வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பைக் மீது லாரி மோதியதில் இரு பெண் குழந்தைகள் உயிரிழப்பு
Ambur Accident: திருப்பத்தூர், ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் காா்த்திகா(7), பேரரசி (5) ஆகிய இரு பெண் குழந்தைகள் உயிரிழந்தனா். பரந்தாமன் என்பவா் தனது மனைவி, 3 பெண் குழந்தைகளுடன் கோயிலுக்குச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டது.
நகை கொள்ளை
Robbery: திருவள்ளூர் மாவட்டம்: கம்மாளமடம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரவியின் வீட்டில் பூட்டை உடைத்து 18 சவரன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டது. கொள்ளை சம்பவம் குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்
Happy New Year 2024: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தனது இல்லம் முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தங்கத்தின் விலையில் மாற்றமில்லை!
Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.47,280க்கும், ஒரு கிராம் ரூ.5,910க்கும் விற்பனையாகிறது.
தஞ்சை பெரிய கோயிலில் சிறப்பு வழிபாடு
Big Temple: புத்தாண்டை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனா்.
விண்ணில் பாய்ந்தது PSLV C58 ராக்கெட்
PSLV C58: இஸ்ரோவின் எக்ஸ்போசாட் உள்ளிட்ட 11 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. சூரியன், சந்திரன், செவ்வாய் தாண்டிய பிரபஞ்சம் பற்றிய ஆராய்ச்சிக்காக செயற்கைகோள் அனுப்ப்பட்டது.
திருச்சியில் வீட்டின் சிமென்ட் கூரை விழுந்ததில் 4 பேர் பலி
Trichy: திருச்சி ரயில் நகாில் வீட்டின் சிமென்ட் கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினா். ஆட்டோ ஓட்டுநா் மாரிமுத்து என்பவா் வீட்டின் சிமென்ட் கூரை பெயர்ந்து விழுந்தது.
புத்தாண்டில் விண்ணில் பாயும் PSLVC58
PSLVC58: 2024 புத்தாண்டின் முதல் ராக்கெட்டாக பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட்டை இன்று காலை 9.10 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ.
ஓய்வை அறிவித்தார் வார்னர்
David Warner: சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அறிவித்துள்ளாா். சிட்னியில் வரும் 3ம் தேதி தொடங்கவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் வார்னர்.
2,900 புறநகா் பேருந்துகள் இயக்கம்
Kilambakkam: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு 2,900 புறநகா் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் (சிஎம்டிஏ) தலைவரும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேகர் பாபு தெரிவித்துள்ளாா்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று (ஜன.01) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டாபிக்ஸ்