தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி: பாஜக பிரமுகருக்கு முன்ஜாமீன் மறுப்பு

வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி: பாஜக பிரமுகருக்கு முன்ஜாமீன் மறுப்பு

Karthikeyan S HT Tamil

Mar 14, 2023, 02:06 PM IST

North State Workers Issues: வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போல் போலியான வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் டெல்லி பாஜக பிரமுகருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
North State Workers Issues: வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போல் போலியான வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் டெல்லி பாஜக பிரமுகருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

North State Workers Issues: வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போல் போலியான வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் டெல்லி பாஜக பிரமுகருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி பாஜக பிரமுகர் முன்ஜாமீன் கோரிய விவகாரத்தில் காவல்துறை தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 10!

Today Gold Rate : சூப்பர் மக்களே.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை சரிவு.. சவரனுக்கு ரூ.800 குறைவு!

இனி வெயிலுக்கு குட் பாய் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு.. அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யுமாம்.. எங்கு தெரியுமா?

Tamil Nadu Government: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு சிக்கல்..தமிழக அரசு விடுக்கும் எச்சரிக்கை இதுதான்!

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவின. வதந்தி பரப்பியதாக உத்தரப்பிரதேச பாஜ செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரசாந்த் உம்ராவ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் திட்டமிட்டு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்று இது போன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானது. எனவே இவர் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இதனால் மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது.

மனுதாரர் தரப்பில், மனுதாரர் அவராக கருத்து பதிவு செய்யவில்லை; ஒரு பதிவை மறு பதிவு செய்துள்ளார். இதில் எந்த உட்கருத்தும் இல்லை தான் அரசியல் கட்சியில் உள்ளதால் பழிவாங்கும் நோக்கோடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதரரரின் செயலால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உருவானது. இந்த வீடியோ தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களை ஏற்க முடியாது, மனுவுக்கு தூத்துக்குடி போலிசார் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக் கிழமைக்கு ஒத்திவைத்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்