பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கே இந்தியா முழுவதும் வெற்றி - ஜி.கே வாசன் ஆருடம்
Mar 03, 2023, 04:23 PM IST
coimbatore: 3 வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்பதை குறிப்பிட்டு காங்கிரஸ் உட்பட கட்சிகள் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க தவறிவிட்டது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் வெற்றி என்பது தற்காலிகமாக வெற்றியாக கருதுகிறேன். பாஜக கூட்டணி சார்ந்த வேட்பாளர்களுக்கே இனி இந்தியா முழுவதும் வெற்றி என ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பெற்ற முடிவு என்பது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் முறைகேடுகளுக்கு கிடைத்த முடிவாகத்தான் தாமக கருதுகிறது. அதிகபட்டியான வாக்கு வித்தியாசம் தான் அதற்கு எடுத்துக்காட்டு. மேலும் ஜனநாயகத்தோடு போட்டியிட்டு பணநாயகம் வென்றுவிட்டதாக வாக்காளர்கள் கருதுகிறார்கள். மக்களிடம் பொதுவாக மனமாற்றம் தேவைப்படுகிறது.அழுத்தற்க்காக மக்கள் கட்டுபட்டக்கூடாது . ஆளுங்கட்சியைப் பொறுத்தவரை அவர்களடைய ஆட்பலம்,பணபலம் அதிகாரத்தை வைத்து ஏழை எளிய நடுத்தர மக்களை குறிவைத்து, அவர்களது பலவீனத்தை பயன்படுத்தி பட்டியில் பூட்டி வைத்து,வாக்குகளை பெறுவது என்பது இந்தியா வரலாற்றிலேயே நடைபெறாத வண்ணம் இந்த இடைத்தேர்தல் நடந்திருக்கிறது.
ஆளுங்கட்சியின் வெற்றி என்பது தற்காலிமாக வெற்றியாக கருதுவதாக தெரிவித்த ஜி.கே.வாசன் இந்த வெற்றி செயற்கையான வெற்றி. இனிவரும் காலங்களில் ஜனநாயகத்திற்கான தேர்தலாக தேர்தல்கள் அமைய வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பு என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஜி.கே.வாசன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் கண்ணாடி போல் செயல்பட்டிருக்க வேண்டும், தற்போது உள்ள ஆளுங்கட்சியின் பணபலம், அதிகார பலத்தை தாண்டி தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கருத்து.
இவ்வளவு முறைகேடுகளைத் தாண்டி அதிமுக 43000 வாக்குகளை பெற்றிருக்கிறதென்றால் உண்மையிலேயே அதிமுக மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கிறது, இவ்வளவு அழுத்தம் கொடுத்தும் 25 சதவீத வாக்குகள் அதிமுக பெற்று இருக்கிறது என்றால் இனிவரும் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டால் அதிமுக பிரகாசமான வெற்றி பெறுவதற்கு சூழல் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
தேர்தல் ஆணையம் இதுபோன்ற தேர்தல்களை நடத்தக்கூடாது, அது வாக்காளர்களின் விருப்பம் கிடையாது, தேர்தல் ஆணையம் முறையாக சரியாக கண்காணிக்க வேண்டும், இனி வரும் காலங்களிலாவது என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்டு இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வது தேர்தல் ஆணையத்தின் கடமை. தொடர்ந்து பேசிய ஜி கே வாசன் வடகிழக்கு மாநிலங்களில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்பதை குறிப்பிட்டு காங்கிரஸ் உட்பட கட்சிகள் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க தவறிவிட்டது. மேலும் வரும் காலங்களில் பாஜக கூட்டணி சார்ந்த வேட்பாளர்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெற்றுவருவதற்கான வாய்ப்பாக இருக்கிறது என தெரிவித்தார்.மேலும் இவ்வளவு முறைகேடுகளைத் தாண்டி 25 சதவீத வாக்குகளை பெற்றது தாங்கள் வெற்றியாக கருதுவதாக தெரிவித்த ஜி கே வாசன் வரும் நாடாளுமன்ற தேர்தல் மக்களின் முழு நம்பிக்கையை பெற்று வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
டாபிக்ஸ்