தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Palani Murugan Temple: ’பழனி கோயிலில் பிற மதத்தினர் நுழைய தடை’ உயர்நீதிமன்ற கிளை அதிரடி!

Palani Murugan Temple: ’பழனி கோயிலில் பிற மதத்தினர் நுழைய தடை’ உயர்நீதிமன்ற கிளை அதிரடி!

Kathiravan V HT Tamil

Jan 30, 2024, 12:07 PM IST

google News
”‘இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்ற அறிவிப்பு பதாகையை கோயில் வளாகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்றும் நீதிபதி ஸ்ரீமதி உத்தரவு பிறப்பித்துள்ளார்”

பழனி முருகன் கோயிலுக்குல் இந்துகள் அல்லாதவர்கள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க வேண்டும் என உத்தரவிட கோரி வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. 

பழனியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பழனி முருகன் கோயிலில் தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947 படி இந்து அல்லாத சமயத்தினர் கோயிலில் நுழைவதை தடுக்கின்றது. எனவே இந்து அல்லாதவர்கள் கோயிலுக்கு நுழைய தடை என்ற பதாகையை வைக்க கோரி இருந்தார்.

இந்த வழக்கில், இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து மதக் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

‘இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்ற அறிவிப்பு பதாகையை கோயில் வளாகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்றும் நீதிபதி ஸ்ரீமதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் கோயிலில் தரிசனம் செய்ய விரும்பினால், கோயிலில் இதற்காக பதிவேடு வைக்க வேண்டும். அதில் ‘இந்த சுவாமி மீது நம்பிக்கை வைத்து தரிசனம் செய்ய வருகிறேன்’ என உத்தரவாதம் கொடுத்த பிறகு கோயிலுக்கு அனுமதிக்கலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 

அடுத்த செய்தி