H.Raja : திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்க - எச்.ராஜா
Nov 20, 2022, 11:28 AM IST
திருமாவளவனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில், 'திருமாவின் சிந்தனை கோட்பாடுகள்' எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "தமிழ் தேசிய இயக்கங்களில் விசிகவின் பங்களிப்பு மகத்தானது. பெரிய பெரிய கட்சிகள் செய்ய முடியாததை சாத்தியப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும்.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வழி தேசியம் வளர்த்தெடுக்கப்பட்டு, அதன் ஒன்றியமாகதான் மத்திய அரசு இருக்க வேண்டும். மாநிலங்களின் ஒன்றியம் என்பதை விட தேசிய இனங்களின் ஒன்றியம் என இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா டுவிட்டரில் பதிவிடுள்ளார்.
அவரின் அந்த பதிவில், “தனித் தமிழ்நாட்டை வெட்டி எடுப்பது தான் தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு என்று பேசியுள்ள தேசவிரோதி தீயசக்தி திருமாவளவனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்”எனத் தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்