தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Adani Greets Udhayanidhi: துணை முதலமைச்சர் உதயநிதிக்கு அதானியின் மகன் வாழ்த்து! கலாய்த்து தள்ளும் அறப்போர் இயக்கம்!

Adani Greets Udhayanidhi: துணை முதலமைச்சர் உதயநிதிக்கு அதானியின் மகன் வாழ்த்து! கலாய்த்து தள்ளும் அறப்போர் இயக்கம்!

Kathiravan V HT Tamil

Sep 29, 2024, 06:49 PM IST

google News
Adani Greets Udhayanidhi: உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தை சேர்ந்த கரண் அதானியிடம் இருந்து வாழ்த்து வந்து உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்று உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தொழிலதிபர் கௌதம் அதானியின் மகனும் அதானி போர்ஸ் மற்றும் செஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் ஆன கரண் அதானி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக ட்வீட் செய்து உள்ள அவர், “துணை முதலமைச்சராக தகுதி பெற்ற உதயநிதி ஸ்டாலின் அண்ணாவுக்கு வாழ்த்துகள்! உங்கள் அர்ப்பணிப்பு, தலைமைத்துவம் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கான சேவை ஆகியவை உங்களை உண்மையிலேயே தனித்து நிற்க வைத்துள்ளன. மேலும் உங்கள் தொலைநோக்கு மாநிலத்தை இன்னும் பெரிய முன்னேற்றத்திற்கு வழிநடத்தும்.” என கூறி உள்ளார்.

இதற்கு அறப்போர் இயக்கம் விமர்சனம் செய்து உள்ளது. இது தொடர்பாக அந்த இயக்கம் பதிவிட்டு உள்ள ட்விட்டர் பதிவில் மீம்ஸ் மூலம் விமர்சனம் செய்து உள்ளது. 

துணை முதலமைச்சர் ஆக பதவியேற்று உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தை சேர்ந்த கரண் அதானியிடம் இருந்து வாழ்த்து வந்து உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி